1908-13-30 ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். சோதிடம், கைரேகை, சாஸ்திரம், வீட்டு நிலையமெடுத்தல், விசக் கடிக்குப் பார்வை பார்த்தல் மருத்துவம் எனப் பல்துறை ஆற்றலுடையவர். மகப்பேற்று மருத்துவத்தினை தனது சிறப்பான துறையாகக் கொண்டு விளங்கியவர். நாடிபிடித்துப் பார்த்து நோயினைக் குணப்படுத்து வதில் வல்லவராக இவர் விளங்கினார். 2000-11-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார்.