Tuesday, June 25

பூபாலசிங்கம் , இராமலிங்கம், இராமுப்பிள்ளை

0

1922-03-06 ஆம் நாள் நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்த இவர் நயினாதீவுச் சாமியார் ஆ.முத்துக்குமார சுவாமிகள் , ஈழத்து இல்லறஞானி உயர்திரு .க.இராமச்சந்திரா அவர்கள் , சிவாகமஞானபானு சிவஸ்ரீ ஐ.கயிலாசநாதக்குருக்கள் , பாரதி அடியான் ப.கு.சரவணபவன் , பெரியவாத்தியார் என்று அழைக்கப்படும் திரு.ச.நா.கந்தையா அவர்கள் ஆகியோரின் ஆசிகளினாலும் , அம்புகெழுமிய நட்பினாலும் வளர்க்கப் பெற்றவர்தான் திரு.ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள். இளமையிலே துடிப்பும் மிடுக்குமுள்ள இளைஞனாக இருந்தார். சிறுபராயத்திலே தமது தந்தையாரை இழந்த இவருக்கு பாரிய குடும்பப் பொறுப்புக்கள் இருந்தன. இனியேனும் தமக்கு வாழ்வு வருமோ எனக் கருதி ஏங்கினார். இளமையில் கற்கமுடியாத மனவேதனையுடன் , குடும்பப் பாரத்தைத் தாங்குவதில் பல உடல் உள வேதனைகளையும் தாங்க வேண்டியவரவாய் 1931 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து உற்றோரும் மற்றோரும் சிறு உதவிகள் செய்ய திரு.வ.தம்பித்துரை அவர்களுக்கு பத்திரிகை விற்பனையாளராகப் பணியாற்றினார். தினசரி 21 சதம் உழைத்து வந்தார்.

அக்காலத்தில் அறிவறிந்த பெரியோர்கள் வீட்டிற்குப் பத்திரிகை கொண்டு செல்வதால் அக்கால அரச அதிபர் டைசன் , கலாநிலையம் உருத்திரகோடீஸ்வரக் குருக்கள் , யோகர் சுவாமிகள் , திருப்புகழ்சாமி,வடிவேலுச்சாமி , அளுக்கடைச் சுவாமியார் ஆகியோரின் நயன தீட்சைகளும் இவருக்குக் கிடைத்தன. கூடும் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூடியிருந்த இந்த அநுபவத்தின் மகத்துவத்தை இறக்கும் வரை நெஞ்சில் நிறுத்தி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்து வந்தார். 1941ஆம் ஆண்டு; யாழப்ழ்பாணம் பெரியகடைப ; பகுதியில் பூபாலசிஙக்ம் புதத்க நிலையம் என்ற பெயரில் புதத்க விற்பனை நிலையமொன்றினை ஆரம்பித்தார். அந்நிலையம் இன்றுவரை அறிவுப்பசி தீர்த்துவரும் பெரும் விருட்சமாக விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் மணிபல்லவதேவி பொது நிலைக்கழகம் என்ற ஒரு கழகத்தை நயினாதீவில் ஆரம்பித்தவர்களுள் இவரும் ஒருவராவார். இக்கழகம் நயினாதீவுச் சாமியாரினதும் திரு.க.இராமச்சந்திரா அவர்களினதும் ஆசியைப்பெற்று தன்னாலான பணிகளை அடியார்களுக்குச் செய்தது. இதுவே பிற்காலத்தில் அமுதசுரபி அன்னதான சபைக்கு அத்திபாரமாகியது என்பதை மறுக்கமுடியாது. இக்கழகம் 1948 ஆம் ஆண்டு. நயினை நாகமணிப் புலவருக்கு முதன் முதலில் விழா எடுத்ததோடு பேசும் படக்காட் சியையும் கிராம மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. மகாத்மா காந்தி நினைவாக நயினாதீவில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டம் பிரம்மஸ்ரீ சுவாமிநாதக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. முதன் முதலாக பூபாலசிங்கம் அவர்கள் தமது கன்னிப்பேச்சை இம்மேடையில் நிகழ்த்தினார். யாழ்ப்பாணத்தில் புதினப்பத்திரிகை விநியோகித்த காலத்தில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் செய்திதாள்களுக்குத்தடை விதிக்கப் பட்டிருந்தது. ஒளித்தும் மறைத்தும் அவற்றை விற்பதில் இவர் வல்லவராக இருந்தார். ஒரு நாள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் அப்பத்திரிக்கைகளை விற்றபோது பொலிஸ் அதிகாரியின் சவுக்கடிக்கு இலக்காகினார். இவருடைய பெரியகடைப் புத்தகாலயம் மூன்று முறை கயவர்களால் எரிக்கப்பட்டது. இவருடைய புத்தகாலயப் பணியினை இவரது புதல்வர்கள் இன்று இலங்கையின்  பலபாகங்களிலும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1982-07-21 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!