1916.01.01 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். மனையடி சாஸ்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் பெற்ற இவரது சேவையினை நாட்டின் பல பாகங்களிலுமிருந்த மக்கள் பயன்படுத்திக் கொண்டமையினை எவராலும் மறுக்கமுடியாது. நடேசு சாஸ்திரியார் என அழைக்கப்பட்ட இவர் 1995.03.02 ஆம் நாள் hழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.