1907 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை கரம்பன் என்னும் ஊரில் பிறந்தவர். வடஇலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி, யாழ்ப்பாணத்தரசர்களும் தமிழும்,ஈழநாடும் சோழர் தொடர்பும்,சிங்கள நாடோடிக்கதைகள், போன்ற பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், கதிர்காமம், யாழ்ப்பாண வைபவமாலை, நயினை நாகேஸ்வரி, இலங்கையின் புராதன சைவாலயங்கள் போன்ற பல நூல்களை எழுதி தமிழிற்கு வளம் சேர்த்த பெருமைக்குரியவர். 1986-04-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.