Wednesday, May 29

இராமநாதன், சேர் பொன்

0

பொன்னம்பலம் இராமநாதன் மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக 1851.04.16 இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியல் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்குச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். 1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1897ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50ஆவது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே சென்றவர்;. அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப் பதக்கம்வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப்பட்டம் (Sir)  வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத்திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். 1915ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களால் காப்பாற்றுவதற்காக பிரித்தானிய அரசை எதிர்த்து, மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமை யும் வரலாற்று நிகழ்வாகும். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக் கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப் பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 – 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர்பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்குச் செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்குச் செய்வித்தார். 1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்று வதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளரா கவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காகக் கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898), An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902),The Culture of the Soul Among Western Nations (1906). The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905),On Faith or Love of God (1897). The Gospel of Jesus According to St. Matthew, as Interpreted to R. L. Harrison by the Light of the Godly Experience of Sri Paránanda,The Judgments of the Supreme Court of Judicature: And of the High Court of Appeal of the Island of Ceylon, Delivered Between the Years 1820-1833,Riots and martial law in Ceylon, 1915,Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon…: 1860, 1861 and 1862. 1880,The Spirit of the East Contrasted with the Spirit of the West: Being a Lecture Delivered … Before the Brooklyn Institute of Arts and Sciences at Its Open Meeting of the Season of 1905-6,Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon: During the Years 1860,1861 and 1862 : with an Appendix Containing Cases Decided During that Period by the Judicial Committee of the Privy Council on Appeal from the Supreme Court of Ceylon,On the Ethnology of the “Moors” of Ceylon  பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914), திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919),ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம் ஆகிய நூல்களை எழுதி தமிழிற்கும் சைவத்திற்காகவும் வாழ்ந்த இப்பெரியார் 1930-11-26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!