Sunday, February 9

முத்தையா. நா (ஆத்மஜோதி)

0

1918.05.25 ஆம் நாள் ஏழாலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஆத்மஜோதி என அழைக்கப்படும் இவர் மிகவும் எளிமையான முறையில் ஆன்மீகத்தினை வளர்த்து வந்தவர். சிறந்த சொற்பொழிவாளரும், கதாப்பிரசங்கியாகவும் வாழ்ந்த இவர் மாதந்தோறும் வெளிவரும் வகையில் 1948 ஆம் ஆண்டு ஆத்மஜோதி என்னும் பெயரில் சமய அறிவியல் சஞ்சிகை ஒன்றினை ஆரம்பித்து தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தவர். ஆசிரியரின் சமய சமூக தன்னலமற்ற பொதுச் சேவையின் சின்னமாக இந்நூல் அமைந்து அவரை ஆத்மஜோதி முத்தையா என அழைக்கப்படலானார். நாவலப்பிட்டியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மக்களின் அவல நிலையையுணர்ந்து எதிர்காலத்தில் அனைவரும் சிறப்பாக வாழவேண்டிய காரணமாக தம்மை அர்ப்பணித்து வாழவேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினார். மக்களிடையே யுள்ள மதுப்பழக்கம், களியாட்டம், வீண்சண்டை போன்றவற்றினை நீக்கி அவர்களை நெறிப்படுத்தினார். ஆசிரியர், கல்விமான், நற்பண்பாளர், சமயநெறியாளர், தமக்கென வாழாது பொதுமக்களுக் காகவே அருஞ்சேவையாற்றியவர். இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளிலும் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற பல இடங்களிலும் சமயச் சொற்பொழிவுகள், கூட்டுப்பிரார்த்தனை,பஜனை, தியானம் போன்ற நிகழ்வுகளை நடத்தி விரிவுபடுத்தினார்.  1992இல் இந்துசமயப் பேரவை என்ற நிறுவனத்தினை நிறுவி அதன் தலைவராகப் பணியாற்றிய இப்பெரியார் 1995.09.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!