இந்துக்களின் வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இவ்விளக்கு சமயம் சார்பான நடவடிக்கைகளில் முக்கியத்துவமுடையதொன்றாக விளங்குகின்றது, குத்து விளக்கு தெய்வாமிசம் பொருந்தியது என்பார்கள். மங்கலப் பொருள்களில் ஒன்றாக விளங்கும் இவ்விளக்கின் அடிப்பாகம் பிரம்மாம்சம் எனவும் நீண்ட நடுப்பகுதி மகாவிஸ்ணு அமிசம் எனவம் மேற்பகுதி சிவன் அமிசம் எனவும் குறிப்பிடப்படுகின்றது, திருமண வாழ்வில் இணையும் தம்பதியரில் மணமகள் மாப்பிள்ளை வீட்டில் குத்துவிளக்கு கொடுத்து வரவேற்பதுடன் வீடடிலுள்ள சுவாமி அறையில் மங்கலகரமாக குத்துவிளக்கேற்றி வாழ்க்கையை ஆரம்பிக்கின்ற தத்துவமானது குத்துவிளக்கின் மகிமையை உணர்த்தி நிற்பதனை காணலாம். அதுமட்டுமல்லாமல் எந்தவொரு கருமுத்தினையும் ஆரம்பிப்பதற்கு முன்னராக குத்துவிளக்கேற்றுகின்ற பாரம்பரியம் காணப்படுகின்றது, இவ்விளக்கானது பல்வேறு உலோகங்களினால் செய்யப்பட்டாலும் பித்தளையினால் செய்யப்பட்ட விளக்குத்தான் அதிகளவில் பயன்பாட்டிலுள்ளது,