Saturday, October 5

கிளைப்பனை (Branched palmyrah tree)

0

இயற்கைத்தாவரம் கிளைப்பனைமரத்தின் மிக அரிதான இனமாக விளங்கும் கிளைப் பனையானது வல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் இதில் இரண்டு மரங்கள் காணப்பட்டது. தற்போது ஒன்றினையே காணமுடிகின்றது. இது இலங்கையில் இரு இடங்களில் அதாவது மட்டக்களப்பு நகர்ப்புறம் மற்றயது வல்லிபுரம் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு அருகிலும் காணப்படுகின்றது. இதன் தாவரவியற் பெயர் Hyphaenu  thebaica   ஆகும். ஒல்லாந்தர் அல்லது ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இக் கிளைப் பனையானது இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. பனைமரம் போன்று தண்டு இருப்பதுடன் சாதாரண கிளைகொள்ளலைக் காண்பிக்கும். அடித்தண்டிலிருந்தே இரண்டு கிளைகளாகப் பிரிந்து வளர்ச்சி அடைவதுடன்  ஒவ்வொரு கிளைகளும் மேலும் இரு கிளைகளாகப் பிரிந்து வளர்ச்சியடைந்து இறுதியில் பதினான்கு கிளைகளைக் கொண்டதாகத் தோற்றமளிப்பதுடன் 20 அடி உயரமுள்ளதாகவும் காணப்படும். இதற்கு கிட்டத்தட்ட 15 தொடக்கம் 20 வருடங்கள் எடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. வளமான மண்ணிலும் மழைவீழ்ச்சி அதிகமான இடத்திலும் இதன் வளர்ச்சி துரிதமாகக் காணப்படும். ஒவ்வொரு கிளையிலும் 20 – 50 பழங்கள் கூட்டாக காணப்படும் ஒவ்வொரு பழத்திலும் ஒரு விதைமட்டும் காணப்படுவதனால் சாதாரண பனம் பழத்திலிருந்து  வேறுபடுகின்றது. சதையானது புளிப்பானதாகவே காணப்படும். சாதாரண பனம்பழத்தின் சதையைப் போன்று இனிப்பானதாகக் காணப்படமாட்டாது. மாப்பொருளை சேமிக்கின்ற தன்மை குறைவாகக் காணப்படுவதனால் பனங்கிழங்கு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதில்லை

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!