Saturday, October 5

அருளம்பலம் மோனம் சுவாமிகள் சமாதிக் கோயில் 

0

 வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என அழைக்கப்படும் மௌனகுருசுவாமிகள் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதி பிறந்தார். மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்விபயின்ற இவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களின் மாணாக்கரும் ஆவார். 5ஆம் வகுப்புவரை மடடும் கற்றிருந்த இவர் பழம் தமிழ் இலக்கியங்களான இராமாயணம் மகாபாரதம், திருக்குறள் என்பவற்றுடன் பட்டினத்தார் பாடல்கள், அருணகிரிநாதர் பாடல்கள் என்பவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார். 1910 ஆம் ஆண்டளவல் இந்தியா சென்று நாகை நீலவேணி ஆலயத்தில் நிஷ்டை நிலை கற்றார். 1910 முதல் 1914 வரை நான்கு ஆண்டுகள் உணவு மறுத்து கடுமையான நிஷ்டையில் ஆழ்ந்தார். நிஷ்டையில் இருந்த நேரத்தில் இவரது உண்மையான ஞானநிலையைப் புரியாத ஆலய நிர்வாகி போலிக்குற்றச்சாட்டுச் செய்த பொழுது பொலிசார் இவரை ஒரு அறையில் அடைத்துவைத்தனர். சற்று நேரத்தில் பார்த்தபொழுது அறை பூட்டியபடியே இருக்க அவர் காணாமல் போயிருந்தார். தேடிய பொழுது கடற்கரையில் நிஷ்டையில் இருப்பதைக் கண்டனர். இதைக்கண்ட நீதிபதி அவரது ஆன்மீக மகிமையை உணர்ந்து எவரும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என ஆணையிட்டதாகத் தெரிகின்றது. இவ்வாறு சித்தவல்லமை பெற்ற யோகர் சுவாமிகள் வரப்போவதை எதிர்வுகூறல், மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், ஒருநேரத்தில் பல இடங்களில் தன் உருவம் காட்டல் போன்ற பலவற்றைச் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார் ஆனாலும் சித்து வேலைகளில் அதிக நாட்டம் கொண்டதில்லை

சித்தராகவும் கலைஞனாகவும் ஓவியனாகவும் தன்னை வெளிப்படுத்திய அருளம்பல சுவாமிகள் தன்னை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வெளிப்படுத்தத் தவறவில்லை. பாரதியார் புதுவையில் மறைந்திருந்த காலத்திலே அருளம்பல சுவாமிகளைச் சந்தித்துள்ளார். இவரை தனது ஞானகுருவாக ஏற்றுள்ளார். 1942 மார்கழி மாதம் மகாசமாதியடைந்தார். இவரது சமாதி ஆனைவிழுந்தான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ளது,

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!