இவ்வாலயம் அமைந்திருக்கும் இடம் ஆதியில் புன்னைக் காடாகவும், தெற்பைப் புதராகவும் இருந்த இடத்தின் நடுவே வளர்ந்திருந்த அரச மரத்தின் கீழ் ஓர் மூதாட்டி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்ததாகவும் இவருக்கும்வேறு சிலருக்கும் விநாயகர் ஆனை வடிவில்காட்சி கொடுத்ததாகவும் இதன் காரணமாகபுதர் ஆனை புதரானை என்ற பெயர் பெற்றுபுதரானைப்பதி சித்தி விநாயகர் என அழைக்கப்படலானார். ஆயினும்இரணை வட்டுப் பிள்ளையார், வீரகத்தி விநாயகர், அரசடி விநாயகர் என்றபல பெயர்களாலும் அழைத்து வருகின்றனர்.ஆங்கிலேயர்களது கச்சேரி ஆலயப் பதிவின் பிரகாரம் இவ்வாலயமானது 1830ஆம் ஆண்டில்சண்டிருப்பாய் நா.ஆறுமுகம்பிள்ளை என்பவரால் நிர்வாகம் நடத்தப்பட்டதாகவும் நாள்தோறும் இரண்டு நேரப்பூசைகள் நடைபெற்றுவந்ததாகவும் பதிவுகளில் காணமுடிகின்றது. ஆண்டு தோறும் வரும்பங்குனி உத்தரத்திருநாளை தேர்த் திருவிழாவாகக் கொண்டுபதினொரு தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். 1971-06-24 ஆம் நாளன்று முதலாவது மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.