நல்லூர் நாயன்மார்கட்டு வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த சிங்கை பரராசமன்னனது மருமகனும ; மகா வித்துவானுமாகிய அரசகேசரி என்பவர் வழிபட்டதால் “அரசகேசரிப் பிள்ளையார்” என்ற சிறப்பு நாமம் பெற்றதாகக் கூறப்படுகிறது. திருக்குளத்தின் வடபால் இருந்த மாளிகையிலிருந்து இரகுவம்சம் எனும் வடமொழிக் காவியத்தை இனிய தமிழில் பாடியதாகக் கூறப்படுகிறது. பின்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இவ்கோயில் அழிக்கப்பட்டதாகவும் 1800-1825 ஆம் ஆண்டுகளுக்குஇடைப்பட்ட காலத்தில் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு ஆறுமுகக் குருக்கள் கும்பாபிஷேகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்பு 1916ஆம் ஆண்டு புனருத்தாரண கும்பாபிஷேகத்தை செல்லையா குருக்கள் செய்து வைத்தார். 1988ஆம் ஆண்டு துவிதள விமானத்தையும் சுற்றுப் பரிவாரத்தையும் அமைத்தார். 1989இல் புதிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. பங்குனி மாதத்தில் கொடியேற்றத்துடன்கூடிய மகோற்சவம் 10 நாள்கள் நடைபெறுகின்றது. மாதசதுர்த்தி வருடப்பிறப்பு உற்சவம் விநாயக சஷ்டி நவராத்திரி திருவெம்பாவை ஆகியன விசேடமாக நடைபெறுகின்றது. சிங்கையாரிய மன்னன் வெட்டிய திருக்குளம் உள்ளது. இதன் காரணமாக இவ்வாலயம் குளத்தடிப்பிள்ளையார் என அழைக்கப்படுவதும் உண்டு,