யாழ்ப்பாணத் தமிழர்களது வந்துாரை வரவெற்கும் பண்பாட்டில் கால்த்தட்டம் அல்லது வெற்றிலைத்தட்டமானது இரண்டறக்கலந்த விடயமாக இருக்கின்றது, எங்களது கொண்டாட்டங்களில் பால்அறுகு வைத்தல் நிகழ்வில் கால்த்தட்டத்தின் வகிபங்கு பிரதானமானது, திருமண வைபவம், மஞசள் நீராட்டுச் சடங்கு என்பன குறிப்பிடக்கூடியன. பல்வெறு வகையினதாக காணப்படும் இத்தட்டமானது யாழ்ப்பாணத்து தமிழர்களது வீடுகள் தோறும் புழக்கத்தில் இருந்த புழங்கு பொருளாகும்.