Saturday, May 4

பண்டிதர் மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன்

0

மரபின் பெட்டகம் சரிந்தது.          இந்த மண்ணில் தன் பாதம்பட நடந்து தமிழ் வளர்த்த பேராசான்.  சாகில் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் என்ற பண்டிதர் மரபின் நீட்சியாய் நிதர்சனமாய் கடைசி வரை வாழ்ந்தவர். ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்க செயலராய் அமர்ந்து அதற்கு தனை முழுமையாய் அர்ப்பணித்தவர்.  நானும் அவரும் பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். இருவரும் பல இரவுகள் ஒன்றாய் இருந்து நாடகம், இலக்கியம், மரபு என சிந்தனை பொழுதுகளாய் நிறைந்தன.  கல்யாணியின் இணை ஆசிரியராய், பெட்டகத்தில் மதியுரைஞராய், இணைந்து பணி இயற்றினார். 87களின் பின் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. எத்தனை கருத்துரை பேச்சு. ஆழ்ந்தகன்ற பணி. இனி எங்கே காண்போம் இவையனைத்தும். மரபில் தன்னை இணைத்து கல்வியால் உயர்ந்து பாரெல்லாம் போற்றும் உத்தமராய் பணித்திருந்தகையாய்,  கலை நேயப் பரிதியாய் எம் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார். ஆசானே இறுதிவிடை பெறுகிறார் . உயர்ந்த மனிதராய் பண்பில் சிகரமாய் குணத்தில் சீல ராய் குன்றாத குண்டுமணியாய் விடைபெறுகிறார். கலங்கியபடி வலியனுப்புவோம்.  யாழ்ப்பாணப் பெட்டகம்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!