Wednesday, March 4

சொக்கப்பானை எரித்தல் அல்லது சொக்கப்பானை கொழுத்துதல்

0

சொக்கப்பனை என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமாலாதி தேவ வடிவத்தில் சிவபெருமான், அடிமுடி தெரியாத பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு முன்பு ஒளிப்பிழம்பாக காட்சியளித்ததை நினைவுபடுத்தும் வகையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. இந்நிகழ்வு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து அழிப்பதற்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவாலயங்கள், முருகன் கோயில்கள், அம்மன் கோயில்கள், திருமால் கோயில் கள் போன்ற பல்வேறு திருக்கோயில் களில் சொக்கப்பனை எரிக்கப்;படுகின் றது. பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத் தில் நட்டு, அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்பு போன்று அமைக்கின் றார்கள். இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. கார்த் திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்சமூர்த் திகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன் பின் பஞ்சமூர்த்திகளைச் சொக்கப்பானை வைத்திருக்கும் இடத்திற்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப்பனையைக் கொளுத்துகின்றார்கள்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!