பொன்னாலைக் கடற்கரைக்கும் மாதகல் கடற்கரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் சம்பில்துறை என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. தட்சிண கைலாய புராணத்தில் பதினெட்டாவது படலத்தில் வரும் சுயம்புநாத சேத்திரத்தில் குறிப்பிட்டதற்கமைவாக வைரவன் என்னும் வேளான் ஒருநாள் காடுவெட்டி பற்றைகளை எரித்
தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எரியாமல் இருந்தமையினால் கோடரி கொண்டு அவ்விடத்தைத் துப்பரவு செய்தபோது அவ்விடத்திலிருந்த சிவலிங்கத்தின் மேல்கோடரிபட்டு இரத்தம் வடிந்ததாகவும் அவன் ஊர்மக்களை அழைத்து காட்டியவேளையில் ஊர்மக்கள் சிவனின் பெருமையினை நினைந்து ஆபரணங்களை அளித்து சிவலிங்கத்தடியில் விட்டுச் சென்றதாகவும் இதனையறிந்த வன்னியரசன் கேள்வியுற்று தனது மந்திரி பிரதானிகளை அனுப்பி சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அர்த்தமண்டபம், மகாமண்டபம்,கர்ப்பக்கிருகம் முதலியவற்றுடன் பரிவாரமூர்த்திகளையும் அமைத்து கோபுரத்துடன் கூடிய சிவாலயத்தினை ஆகமமுறைப்படி அமைத்து தர்மசாசனங்களையும் வழங்கி ஆலய கிரியைகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு வழியமைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. பின்னர் கடற்கோள்களால் இவ்வாலயம் அழிவடைந்த நிலையில் இந்தியச் செட்டிமார்களால் சிவலிங்கம் பாதுகாக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது. இவர்களுடைய காலத்தில் சுயம்பநாதம் சம்புநாதமாக மருவி வந்ததாக அறிய முடிகின்றது. செட்டிமாரின் ஆண்வழி சந்ததியினரே ஆலய உரித்துடையவர்களாக இருந்துள்ளனர். யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான இவ்வாலயம் 2000 ஆம் ஆண்டு புனர்நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2008-04-09 ஆம் நாளன்று கும்பாபிN~கம் நிறைவேறியது.