Thursday, January 2

பொன்னையா. நா (ஈழகேசரி )

0

1892-06-22 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நூல் பதிப்பித்தற்துறையில் வரலாற்றுப் பெருமை பெற்ற இவர் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றிய பணியினை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும். பத்திரிகைகள் பாடநூல்களை வெளியீடு செய்து எழுத்துலகை புதிய பரிமாணங்களுக்குக் கொண்டு சென்றவர். ஈழத்தின் பல தலைசிறந்த எழுத்தாளர்கள் இவரினது ஈழகேசரியினூடாகவே மேற்கிழம்பியவர்கள். குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் தந்தை எனப்போற்றப்படும் இவர் 1930களில் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தினை நிறுவி தமிழிலே ஈழகேசரி என்ற வாரப் பத்திரிகையை எவருடைய துணையுமின்றி ஆரம்பித்து கையாலே சுழற்றி அச்சடித்து இலக்கியம், சமயம், அரசியல் மூன்றையும் மூன்று கண்ணென மதித்து இருபத்தைந்து வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தியவர். அது அவரது வரலாற்றுக் காலம். ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் “ஈழகேசரிக் காலம்” என்று தமிழுலகம் பெருமை கொள்கின்றது. மறுமலர்ச்சிக்கால இலக்கியகாரர்களை வளர்த்துவிட்ட வர் எனக்கூறின் அதுமிகையாகாது. அமரர்களான வரதர், அ.செ.முரு கானந்தன், அ.ந.கந்தசாமி, மகாகவி உருத்திரமூர்த்தி, கனக. செந்திநாதன் முதலியவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த பெருமை ஈழகேசரிக்கு உண்டு. திருமகள் அழுத்தம் நாவலர் நெறி நின்று எழுத்துப் பிழைகள் எதுவுமின்றி மிக உயர்ந்த தரத்தில் நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியது. வித்துவ சிரோன்மணி கணேசையரின் தொல்காப்பிய உரைவிளக்கம் முதல் பாலபாடம் முதலான பாடநூல்கள் வரை பதிப்பித்த தனிப்பெருமைக்குரியவர். கேசரி என்ற பெயரில் எச்.எஸ்.பேரின்பநாயகம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஆங்கில வாரப் பத்திரிகையையும் நடத்தி வந்த இப் பெரியார் 1957.03.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!