ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும். செவிவழிக் கதைகளின் பிரகாரம் அம்மை அடியார் சிறந்த முருகபக்தர். விரத அனுட்டானங்களில் மிகுந்த ஆர்வமுடைய வராதலால் வேல் வைத்து கந்தபுராணப்படிப்பினை ஆரம்பித்து வைத்தார். இவரால் ஆரம்பிக்கபட்ட கந்தபுராணப் படிப்பு மிகச் சிறந்த முறையில் வளர்ச்சி பெற்று வந்ததாகவும் அதனுடைய தொடர்ச்சியாகவே இவ்வாலயம் வளர்ச்சிபெற்றதாகவும் அறியமுடிகின்றது.