Thursday, May 2

முருகன் கோயில், விசுவத்தனை, – பண்ணாகம்

0

விசுவத்தனை முருகன் கோயில் இலங்கைபண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வமாக விளங்குபவர் விசுவத்தனை முருகன். 200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவ சூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக்கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர்மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர்.ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர். கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகமமுறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம்மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன. 1912ஆம்ஆண்டு முதலாவது கும்பாபிN~கம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கர்ப்பக்கிரகம் வைரக்கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதே காலத்தில் இரண்டாவது கும்பாபிN~கமும்நடைபெற்றது. இதன்பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம் பெற்றன.1948 இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிN~கம் நடாத்தப்பட்டது.1958 இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்துவருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்பட்டது. தேர்முட்டி, தேர்தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன. 1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிN~கம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிN~கம் நடைபெற்றது. பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக்கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள்கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!