மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வடக்குப் புறமாகக் காணப்படும் வயல் வெளிகளின் மத்தியில் மேடான பிரதேசத்தில் வலப்பக்கமாக விநாயகப் பெருமானுக்கும் இடப்பக்கமாக முருகப்பெருமானுக் கும் கோயில்கள் அமைக்கப்பட்டன. அந்நியர்களது ஆட்சிக்காலத்தில் தொன்மை நிறைந்த ஆனைமுகன் ஆலயத்தைபோர்த்துக்கேயர், ஒல்லாந்தர் தாக்க முற்பட்ட போது விநாயகப்பெருமான் காக்கை உருவிலே தோன்றி அவர்களது கண்களைக் கொத்தித்தடுத்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன. 1768 ஆம் ஆண்டு சேதுகாவல முதலியாரும் முத்தம்பலவாண முதலியாரும் இணைந்து நிறுவியதாக ஆங்கிலேயரது ஆட்சியில் உள்ள பதிவுகளில் காணமுடிகின்றது