Saturday, October 5

புனித ஜோன் கல்லூரி (சென் ஜோன்ஸ்)

0

1818 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவ மிஷனரிமாரால் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்ட மிஷனரியின் சார்பாக 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் புனித ஜோண் கல்லூரி (சென் ஜோண்ஸ்) ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பின்னர் யாழ்ப்பாண நகரில் சுண்டிக்குளி என்ற இடத்துக்கு இடம் மாற்றப்பட்டது. அரச உதவி பெறும் தனியார் பாடசாலையாக விளங்கி வருவதுடன் 1AB பாடசாலையாகவும் யாழ்ப்பாணத்து முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் (Leading School) ஒன்றாகவும் திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலை களில் ஒன்று. பல வல்லுனர்களை உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையில் மூன்று நாள்கள் நடைபெறும்   மிகப்பிரபலமானதும் குறிப்பிடத்தக்கதுமான துடுப்பாட்டப் போட்டி  “Battle of the north”  என்றழைக்கப்படுகின்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!