Thursday, May 2

தெருமூடி மடம்

0

இன்று இலங்கையில் எஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடிமடம் இதுவாகும். பருத்தித்துறை ஓராம் கட்டையில் தும்பளை செல்லும் வீதியில் சிவன்கோயிலுக்கு அருகில் காணப்படும் இம்மடம் 1898 1901 காலப்பகுதியில் வாழ்ந்த பிராமணரான வைத்தீஸ்வரக் குருக்களின் தகப்பனார் பஞ்சாட்சரக்குருக்களால் அமைக்கப்பட்டது. பொழிகற்களினால் அமைக்கப்பட்ட  அம்பலம் எனப்படும் மடம் ஆரம்பத்தில் வளைந்த அமைப்பில் இக் கற்களினாலேயே அமைக்கப்பட்டிருந் திருக்கின்றது. பின்னரே  ஓடு போடப்பட்டுள்ளது. இங்கு இத்தூண்களில் கட்டுமானத்துடன் தொடர்புடைய விபரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. திராவிடக் கட்டடப்பாணியில் அமைந்துள்ள அதன் அடித்தளம், தூண்கள் மற்றும் சுவர்ப்பாகங்கள் கட்டடக்கலை ரீதியாக விரிவாக ஆராயத்தக்க தாகும். வெண்வைரக் கல்லினால் உருவாக்கப்பட்ட  தூண்கள். அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளை கொண்டிருப்பதனைக் காணலாம.; பொழிந்த வெண்வைர கற்சதுரங்கள,; பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிகவும் செம்மையான முறையில் அடுக்கி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது

இத் தெருமூடிமடமானது எமது மூதாதையரின் வாழ்வியலை, பண்பாட்டின் எச்சத்தினைப் பறைசாற்றி நிற்கின்றது. ஆதிகாலத்தில் வாகனப் போக்குவரத்து இல்லாத காலத்தில் பாரங்களைத் தூக்கியவாறு நடையிலும் மாட்டுவண்டிகளிலுமே மக்கள் சென்றுவந்தனர். எனவே இம் மக்களது களைப்பினைப் போக்குவதற்கும் காலாறிச் செல்வதற்கும் இரவில் தங்கிச் செல்வதற்கும் இத்தகைய மடங்களே பேருதவியாக இருந்தது. இவ்வாறு பொதுமக்களின் தேவையினை கருத்தில் கொண்டு யாழ்மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட ஆறுகால்மடம், உப்புமடம், பூநாகர்மடம் (பூநாறிமடம்), முத்தட்டு மடம், ஓட்டுமடம், கந்தர்மடம், மடமாவடிமடம் அல்லது முடமாவடிமடம, நாவலன் மடம், மடத்து வாசல், செட்டியார்மடம், போன்ற மடங்கள் தற்போது எம்மிடம் இல்லை அவை அழிந்துவிட்டன. பருத்தித்துறையில் உள்ள இந்தத் தெருமூடிமடமானது தற்பொழுது முக்கிய தொல்லியற் சின்னமாக இனங்காணப்பட்டு தொல்லியற் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நித்தமும் கண்காணிக்கும் பாதுகாக்கும் பொறுப்பினை அப்பகுதி கிராம அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இம் மடத்திற்கு சேதத்தினை ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருப் பதுடன் அக்குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிப்பதாகவும்  அறிவித்துள்ளது.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!