வரலாற்றுப் புகழ் பெற்ற நல்லூரான் திருவடி நோக்கி ஓடி வருகின்ற பக்கதரளது தாகத்திழனயும் பசியினையும் போக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற இம்மடமானது நல்லூர் முருகப் பெருமானது தேர்முட்டிக்கு அருகே அமைந்திருக்கின்றது. சித்தரும் ஆன்மீக வள்ளலாருமான சடையம்மா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் இம் மடமானது ஆரம்பத்தில் சடையம்மா மடம் எனப் போற்றப்பட்டதாகவும் பின்னர் அது அறுபத்து மூன்று நாயன்மார் மடம் எனப் போற்றப்படுவதாகவும் பதிவுகள் கூறுகின்றன.. திருவிழாக்காலங்களில் இம்மடத்தின் பணியானது இன்றியமையாத ஒன்றாக விளங்குவதனைக் காணலாம்.