இது காற்றோட்டமாக வெம்மையைக் குறைக்கவும், ஆவினங்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யவும் என அமைந்தவை. மரங்களின் அருகாமையிலேயே மடங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் மரத்தைப் பாதூகாக்கவோ, புனிதப்படுத்தவோ அம் மரத்தின் கீழ் வைரவர் சூலத்தையோ ஃ கல்லையோ வைத்து வழிபட்டு அதனை வழிபாட்டிடமாக மாற்றினர். அதன் தொடர்ச்சியில் அம் மடம் ஆலயமான வரலாறுகளும் உண்டு. இவ்வாறு இயற்கையோடு ஒட்டிய பண்பாடாக, உயிர்களை நேசிக்கும் பண்பாடாக எமது மடக்கட்டடக்கலைப் பண்பாடு தோற்றம் பெற்றுள்ளது.
இந் நடைமுறைதொடரத்தொடர தெருவோரம், வயற்கரை, கடற்கரை, மக்கள் கூடுமிடம் (சந்தை போன்ற), ஆலய அருகாமை என பல்கிப்பெருகின.