கால் நடையாக வருவோர் தமது தோளிலோ அல்லது தலையிலோ சுமந்து வரும் பொருட்களை இன்னொருவர் உதவியின்றி இறக்கி வைக்கவும் இளைப்பாறியபின் தூக்கிச் செல்லவும் ஏற்றவகையில் அமைக்கப்பட்டதே சுமைதாங்கிக்கல் சுமைதாங்கிக் கல்லின் உருவாக்கத்திற்குப் பின்னால் தழிழர் தம் நம்பிக்கையுண்டு. கற்பிணித்தாய்மார் யாராவது இறந்துவிட்டால,; அப் பெண் தனது வயிற்றுச்சுமையை இறக்கிவைக்காது இறந்துவிட்டால் அவளது அச் சுமையை இறக்க வேண்டும். இல்லையேல் அவ் இரு ஆன்மாவும் அலைந்து திரியும் எனும் மூட நம்பிக்கையை மாற்றியமைத்து இன்னொருவர் சுமையை இறக்க உதவியாக சுமைதாங்கிக் கல்லை உருவாக்குதல் எனும் நம்பிக்கையாக மாற்றினர். எமது சமூகத்தின் மூட நம்பிக்கை இன்னொருவர் தேவையை நிறைவு செய்யும் நல்ல காரியமாக மாற்றப்படுகின்றது.
இந்த வகையில் சுமைதாங்கிக் கல் மட்டுமன்றி இவ்வாறான நம்பிக்கையின் அடிப்படையில் இழைப்பாற்று மடங்களும் உருவாகின. இதனால் இளைப்பாற்று மடங்கள் “பிள்ளைத்தாச்சி மடங்கள்” என்றும் சிறப்பித்தழைக்கப்பட்டன.