தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர். வெற்றிமணி என்னும் சஞ்சிகையின் ஸ்தாபகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றிப் பல படைப்பாளிகளை உருவாக்கிய பெருமைக்குரியவர். ஜேர்மனியில் வசித்துவரும் கே.எஸ்.சிவகுமாரன் என்னும் பிரபல ஓவியர் இவரது புதல்வனாவார். தந்தையாரால் ஸ்தாபிக்கப்பெற்ற வெற்றிமணி சஞ்சிகையினை தற்பொழுது இலவச வெளியீடாக உலகம் பூராகவும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.