Saturday, April 27

சிவராசா, அம்பலவாணர் (பேராசிரியர் )

0

 

1944 ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் அம்பலவாணர் என்பவரது மகனாகப் பிறந்தார். திருமண பந்தத்தினால் நாவற்குழி என்னும் ஊரில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தினில் அரசறிவியல் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தனது முதுமாணிப் பட்டத்தினை கனடாவிலுள்ள நியூ பிரான்ஸ்விக்பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப்பட்ட ஆய்வை பேராதனைப் பல்கலைக் கழகத் தில் மேற்கொண்டு பெற்றுக்கொண்டவர். குறிப்பிட்ட சில வருடங்கள் இந்தியாவிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிறப்பு வருகை ஆய்வாளராகவும் பணியாற்றினார். பல ஆய்வு நூல் களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். அரசறிவியல் சார்ந்த நூல்கள் பலவற் றினை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியும் மாற்றங் களும்,அரசியல்மூலதத்துவங்கள். நவீனஅரசியற்கோட்பாடுகள்,ஒப்பீட்டுஅரசியல், இலங்கை அரசியல் வரலாறு போன்ற நூல்கள் இலங்கை, உலகஅரசியல் தளத்திற்கான இவரது படைப்புகளாகும். இலங்கை அரசியல் வரலாறு என்னும் நூலானது க.பொ.த.உயர்தரம், பட்டப்படிப்பு மாணவர் களுக்கான விதந்துரைக்கப்பட்ட பாடநூலாகவும், சிறந்ததொரு வழிகாட்டி நூலாகவும் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!