Saturday, October 5

வைத்தீசுவரக் குருக்கள். க (கலாநிதி)

0

1916-09-22 ஆம் நாள் காரைநகரில் பிறந்தவர். தமிழ்மொழி இலக்கண இலக்கிய நூல்கள், சமய, சைவசித்தாந்த நூல்கள், வடமொழியில் அமைந்த சைவசமயக் கிரியைகள் பற்றிய நூல்கள் பலவற்றைக் கற்று உணர்ந்து பலருக்கும் அறிமுகம் செய்த பெருந்தகை. இத்தகைய நூல்களைச் சேகரித்தும் வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஐயா அவர்கள் எழுதிய தமிழ்மொழி இலக்கணம், இலக்கியம், பண்பாடு, சமயம் சார்ந்த கட்டுரைகள் பல்வேறு மலர்களையும், சஞ்சிகைகளையும், பத்திரிகைகளையும் அலங்கரித் துள்ளது. தினகரன் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரைகளை அசோகன் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கலாநிதி வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் 25 இற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். சைவக் களஞ்சியம், ஈழத்துச் சிதம்பரபுராணம், ஆண்டிக்கேணி ஐயனார்புராணம், பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு, பெரியபுராணம் திருநகரபபடல உரை, கலாநிதி மு.கந்தையா அவர்களின் உரையுடன் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிச்செய்த சேத்திரத் திருவெண்பா, சுவாமிநாத பண்டிதருடைய திருமுறைப் பெருமை, திண்ணபுர அந்தாதி, நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும், நாவலர் பிள்ளைத் தமிழ், காரைநகரில் சைவசமய வளர்ச்சி, ஜோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்து, வினைத்தொகை,தொடர்மொழிக்கு ஒரு மொழி முதலான பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் தமிழ்மொழிக்கும் சைவசமயத்துக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புக் களும் நிறுவனங்களும் பட்டங்களை வழங்கிக் கௌரவித்துள்ளன. ஐயா அவர்கள் அருட் சுடர்மணி, சமூகமாமணி, கலைஞானச்சுடர், சிவத்தமிழ் வித்தகர், செந்தமிழ் ஞாயிறு, பண்டிதமணி முதலான பல பட்டங்களைப் பெற்றிருந்தும் அவற்றை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2002 இல் சிவத்திரு வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் தமிழ்ப் பணியைக் கௌரவித்து தத்துவ கலாநிதிப் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட இப்பெரியார் 2015.04.25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!