Wednesday, April 24

கந்தையாபிள்ளை. வி.மு

0

யாழ்ப்பாணம்-வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் வீரகத்திப்பிள்ளை முருகேசுபிள்ளை மனையாள் வள்ளியம்மைக்கும் மகனாக அவதரித்தவர் தான் யாழ்ப்பாணம் மில்க்வைற்சோப் தொழிற்சாலையின் ஸ்தாபகர் கந்தையாபிள்ளையவர்களாவார். கல்வியினை முடித்துக்கொண்ட பிள்ளையவர்கள் தொழிற்சாலை ஒன்றினை அமைத்து அதன்மூலம் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்து வேலை வாய்ப்பினையும் உருவாக்க வேண்டுமென்ற உயரிய சிந்தனைப்போக்கில் 1920 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உதயமானது தான் மில்க்வைற்சோப் தொழிற்சாலை. உற்பத்தி செய்யப்பட்ட சவர்க் காரங்களை உருண்டை வடிவில் உருட்டி கடகத்தில் சுமந்து சென்று மிகுந்த சிரமங்களின் மத்தியில் சந்தைக ளிலும் கிராமங்களிலும் அறிமுகப்படுத்தினார். மில்க்வைற் இன்றேல் சுபீட்சம் இல்லை என்ற நிலைதோன்றியது. குறைந்த விலையில் மிகவும் தரமான சோப்பாக மில்க்வைற் கிடைத்தது. விளம்பரமின்றி இலட்சக்கணக்கில் மில்க்வைற் சோப் விற்பனையாகியது. மில்க்வைற் நீலக்கட்டி மற்றும் மில்க்வைற் பார்சோப் என்பன யாழ்ப்பாணத்து சுதேசிய உற்பத்தியாக யாழ். மண்ணிற்குப் பெருமை சேர்த்ததெனலாம். தொழிற்சாலை மூலம் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியினை சமூகசேவை செய்வதற் காகவே செலவழித்தார். இவரால் உருவாக்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப் பினை வழங்கிய இத்தொழிற்சாலை யானது அறப்பணிகளிலும், சமூகநலனோம்பு நடவடிக்கை களிலும் உயர்ந்து நின்றது.இவரது வழியில் அவருடைய பிள்ளைகளும் வாழ்ந்துள்ளனர். இவருக்குப் பின்னர் கனகராசா என்னும் இவரது இரண்டாவது புதல்வன் மில்க்வைற் தொழிற்சாலையை நடத்தி வந்தார். தற்பொழுது இவருடைய பேரனான சிவநேயர் இ.தவகோபால் அவர்கள் நடத்தி வருகின்றார். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்துடன் வாழ்ந்த இப்பெரியார் 1959-04-11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!