Friday, March 1

முருகவேள். சி

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலைக் கிராமத்தில்  சிற்றம்பலம் பராசக்தி தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக 1930.02.09 ஆம் நாள் பிறந்தவர் திரு. சிற்றம்பலம் முருகவேள் அவர்கள். சிறந்த கல்வித் தகைமையின் அடிப்படையில் பல்கலைக்கழக நூலகராக நியமனம் பெற்று ஒரு தசாப்தத்திற்கும் மேலாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகர் பதவியை அலங்கரித்தவர். ஏழாலைக் கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும், கொழும்பு றோயல் கல்லூரியிலும் தனது இடைநிலைக் கல்வியை முடித்து பேராதனைப் பல்கலைககழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டதாரியாக முதல்தரத்தில் சித்தியெய்தினார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற முருகவேள் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியப்பணியில் இணைந்து கொண்டார். பின்னர் உதவி நூலகராக பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவு நூலகராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்ட இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பணியாற்றி ஓய்வுக்குரிய காலம் வருமுன்னதாகவே இளைப்பாறிவிட்டார். தேவையான கருத்துக்களை உள்ளடக்கி மிக இரத்தினச்சுருக்கமாக கடிதம் எழுதும் ஆற்றலுடைய இவர். தனக்குக் கிடைக்கும் நூல்களைக் கிடைக்கும் நேரங்களில் வாசிப்பதில் மிகுந்த ஆர்வங்கொண்டவர். தொழில்சார் திறமைகள் பலவற்றுக்கும் அவரது நீண்டகால அனுபவம் கைகொடுத் தது. பல்வேறு சிரமங்கள் மிகுந்த காலத்தில் நூலகராக இருந்து யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் நூற்சேர்க்கையில் ஏனைய பல்கலைக்கழக நூலகங்களைவிட மிகச்சிறந்த தரமான நூல்களைக் கொண்டது எனக் குறிப்பிடுமளவிற்கு சிறப்பான நூற்சேர்க்கையைக் கொண்டதாக தரமுயர்ந்ததற்கு இவரது பன்முக ஆளுமைகளே காரணமாக இருந்தன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!