Friday, May 3

செல்லையா. கே

0

லாந்து போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று பெற்று வந்தவராவார். மாணவர்களின் தேவைகள்,ஆய்வாளர்களின் தேடல்கள், எதிர்காலச் சமூகத்திற்கான ஆவணப்படுத்துதல் போன்ற பல்வகைப் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு நூலகத்தின் ஒழுங்கமைப்பை திறம்படநிருவகித்தவரெனப் பலரால் பாராட்டப் பெற்றவராவார். உள்நாட்டில் மட்டுமல்லாமல், பிரான்ஸ் நாட்டு பாரிஸ் மாநகரில் 1950 இல் இடம் பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவரான திரு. செல்லையா இதன் மூலம் யாழ்ப்பாணத்தின தும், கல்லூரி நூலகத்தினதும் சிறப்பை உலகறியச் செய்தவராவார். உலகளாவிய நூலகச் சங்கங்களின் கிடைத்தற்கரிய அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட நூலகத்துறை முன்னோடியாகவுள்ளார். தமது நூலகத்தின் பணிகளுடன் நின்று விடாமல் ஏனைய பாடசாலை நூலகர்கள், நூல் ஆர்வலர்கள் போன்றோருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த செல்லையா அவர்கள், நூலகர்களின் தொழில் விருத்தியை மேம்படுத்துவ தற்காக ஒரு அமைப்பினை உருவாக்கினார். 1955ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகர்கள் சங்கம்(Jaffna Librarians’ Guild) என்ற அமைப்பில் ஸ்தாபக தலைவராக விளங்கினார். யாழ்ப்பாணக்கல்லூரி நூலகத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றிய திரு.கே. செல்லையா அல்லும் பகலும் நூலக வளர்ச்சிக்காகப் பாடுபட்டவராவார். பல்வேறு கிடைத்தற்கரிய நூல்களை இந்நூலகம் கொண்டியங்குவதற்கு இவரின் இடையறாத அர்ப்பணிப்பு மிக்க சேவையே காரணமெனலாம். சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்ட இவரின் சொந்த இடம் அராலியாகும். நூலகத்துறையிலே சிறந்த கல்வியையும் பயிற்சிகளையும் மிஷனறிகளின்  உதவியுடன் இந்தியா, இங்கி

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!