வடமராட்சியின் பருத்தித்துறைப் பிரதேசத்திலே அமைந்துள்ள புகழ்பூத்த பழமையும் சிறப்பும் பெற்ற ஆலயம் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆகும். இவ் ஆலயம் பருத்தித்துறையிலிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள வல்லிபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.இவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சக்கரமே வைத்து பூசை நடைபெறுகின்றது. இக்கோயிலின் பழைய வழிபாடுகளுக்கு இடையில் 1936 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட வல்லிபுரம் பொன்னேட்ச் சாசனம் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இச்சாசனம் வல்லிபுரப் பிரதேசம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆய்வுக்குரிய பிரதேசம் என்பதை உறுதி செய்கின்றது. இங்கு வடமராட்சியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் புரட்டாதி பூரணையில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வகையிலான 15 நாள் உற்சவம் நடைபெற்று 16 ஆம் நாள் பூரணையில் கடலோடு தீர்த்த உற்சவமும் 17 ஆம் நாள் பட்டுத் தீர்த்தமும் நடைபெற்று 18 ஆம் நாள் ஆஞ்சநேயருக்கு சிறப்பான பூசை வழிபாடுகளுடன் உற்சவம் நிறைவு செய்யப்படும். வல்லிபுர ஆழ்வாரின் இன்னுமொரு சிறப்பம்சம் நாமக்குளம் அமைந்திருப்பது ஆகும்.
