1965.11.03 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ். இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைக்கலையில் பட்டம் பெற்றவர். இசை ஆசிரியரான இவர் மாணவர்களுக் கான இசைப் பயிற்சிகளை வழங்கிப் பல மாணவர்களை உருவாக்கியவர் என்பதுடன், நடன நாடகங்களுக்கான அணிசெய் கலைஞராகவும் திகழ்ந்தவர். இசையருவி என்னும் பட்டம் வழங்கப் பெற்றவர். 2007-09-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்துக்கொண்டார்.
