Monday, December 30

யோகர் சுவாமிகள், அருளம்பலம்

0

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் என்ற இடத்தில் 1872.05.29 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு யோகநாதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மாவிட்டபுரத்தில் பிறந்திருந்தாலும் அவர் தனது இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரை கொழும்புத் துறையிலேயே வாழ்ந்து வந்தவர். செல்லப்பா சுவாமிகள் தனது வலக்கரத்தினால் சுவாமிகளது தலை உச்சியில் அடித்து “சும்மா இரு எப்பவோ முடிந்த காரியம், நாம் அறியோம், முழுவதும் உண்மை” என்ற மந்திர மொழிகளை உபதேசித்து தீட்சை வழங்கினார். அன்றிலிருந்து செல்லப்பா சுவாமிகளது உத்தம சீடனாக சுவாமிகள் வளர்ந்து வந்தார்கள். தன்குருவையும் குருவின் குருவையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியவரும் தனக்குப் பின் ஒரு சிஷ்யப் பரம்பரை ஊற்றெடுத்துப் பிரவாகிக்கச் செய்தவரும் யோகசுவாமிகளே என்றால் மிகையாகாது. மேல்நாட்டவர் களும் சுவாமிகளிடம் வந்து அருளுபதேசம் பெற்று சீடர்களாகியுள்ளனர். குறிப்பாக அமெரிக்க சைவத்துறவி சுப்பிரமணிய சுவாமிகள், ஜேமன் சுவாமிகள், சோல்பரிப் பிரபுவின் மகன் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தினை நிறுவியதுடன் மட்டுமல்லாமல் சிவதொண்டன் என்னும் சைவசமய சஞ்சிகையொன்றினையும் ஆரம்பித்து அதனூடாக ஆன்மிகக் கருத்துக்களை மக்களிடம் சென்றடைவதற்கான வழிகளை உருவாக்கியவர். கொழும்புத்துறையில் ஆச்சிரமமொன்றை அமைத்து மக்களின் நோய் பிணிகளை நீக்கி ஆன்மீக வழியில் மக்கள் செல்வதற்கான சரியான பாதையினைக் காட்டியவர். இவருடைய பிள்ளைப் பருவத்திலே சைவப் பாடசாலைகள் மிகக்குறை வாகக் காணப்பட்டதனால் இவர் கொழும்புத்துறையில் சுவாமியார் வீதியிலுள்ள கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றிலே வித்தியாரம்பம் செய்து அங்கேயே படித்து வந்தார். தாய், தந்தையரது இழப்பின் பின்னர் சிறிய தந்தையரான கத்தோலிக்கர் சின்னையா யோசெப் என்பவர் சுவாமிகளை யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்பதற்கு சேர்த்து விடலானார். ஏழாம் வகுப்பு வரை அக்கல்லூரியில் பயின்ற சுவாமிகள் திரு பிறவுன் என்னும் ஆங்கில அதிகாரியின் கீழ் பண்டகசாலைப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். இக்காலத்தில் கடவுள் பக்தி கொண்ட சுவாமி களை பிறவுன் அவர்கள் கடவுள் மனிதன் எனப்போற்றியுள்ளார். இராமகிருஸ்ண பரமகம்சர் பேரில் உலகளாவிய அளவில் இறைபணி நடைபெறுவது போல சிவயோக சுவாமிகள் வழிகாட்டிய வழியில் உலகளாவிய ரீதியில் சைவச்சேவைகள் நடைபெறுவதை பிரத்தியட்சமாகக் காணலாம். 1964.03.24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஆயிலிய நட்சத்திரம் கூடிய வேளையில் காலை சுவாமிகள் மகாசமாதி நிலையடைந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!