1919.09.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். சிறுவர் இலக்கிய நூல்கள், சமய பாடப் பயிற்சி நூல்கள், தமிழ்மொழி இலக்கியப் பயிற்சி நூல்கள் எனப் பல நூல்களை ஆக்கியுள்ளார். 1974 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவரது தமிழ்ப்பணி உலகத் தமிழாராய்ச்சி மாநாடு களில் சங்கப் பிரதிநிதியாகச் செல்லும் வாய்ப்பினை வழங்கியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அவரின் தூய தமிழ்ப் பணிக்காக தமிழவேள் என்ற பட்டம் வழங்கப் பட்டது. மொறீசியஸ்சில் நடைபெற்ற ஏழாவது மாநாட்டில் இளந்தாரி கோவில் பற்றிய ஆய்வுக் கட்டுரையினை வாசித்தார்.சாதாரண ஆசிரியர் பணிக்கென கொழும்பு சென்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் உறுப்பின ராகி சங்கம் வளரச் சங்குநாதம் எழுப்பினார். சங்க நூலகம், கல்வி நிலையம், மாநாடுகள், நூல் வெளியீடுகள், சைவ, முத்தமிழ் விழாக்களை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தினார். தமிழின் மீதிருந்த பற்றின் காரணமாக ஈழத்துப் புலவர்களது பெயர்களைத்தேடித் தொகுத்து புலவர் பரம்பரையை எமக்கு அறிமுகப்படுத்தினார். ஈழத்துப் பூதந்தேவ னார் மாநாடு, திருக்குறள் மாநாடு, பாரதி நூற்றாண்டு விழா, தொல்காப்பிய மாநாடு, சிலப்பதிகார மாநாடு போன்ற செயற்பாடுகளை கல்விமான்கள், அறிஞர்களை வரவழைத்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தி வெற்றி கண்ட இப்பெரியார். 2008-10-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.