Thursday, February 6

“சாகித்யரத்னா” கந்தையா நடேசு (தெணியான்)

0

பிறப்பு

யாழ்ப்பாணம மாவட்டத்தில்  வடமராட்சிப் பிரதேசம் வீரத்திலும், கல்வியி லும், ஆன்மீகத்திலும், கலை இலக்கியத்திலும் தனித்துவமான முத்திரை பதித்த பிரதேமாகும். இங்கு உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சதாவதானி கதிரவேற்பிள்ளை, பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் அ.துரைராஜா, சுபத்திரை ஆழ்வார், மன்னவன் கந்தப்பு, பத்மாசனியம்மாள். உலக சாதனை நீச்சல் வீரர்களான நவரத்தினசாமி, ஆழிக்குமரன் ஆனந்தன் எனப் பல அறிஞர்களையம் கல்விமான் களையும், வீரர்களையும் பெற்று தனித்துவமான பண்பாட்டு வாழ்வியலில் புகழ்பூத்த பூமியாக விளங்கும் வடமராட்சியில் அமைந்துள்ள பொலிகண்டி என்ற ஊரில் “தெணி” என்னும் குறிச்சி யில் நா. கந்தையா வட அல்வாயை பூர்வீகமாகக் கொண்ட .சின்னம்மா தம்பதியரின் தவப்புதல்வனாய் இரண்டாவது பிள்ளையாக 1942-01-06ஆம் நாள் பிறந்தார்.

ஈழத்து இலக்கியத்தின் மூத்த படைப்பாளி “சாகித்யரத்னா” தெணியான் அவர்கள் தான் பிறந்த ஊரின்மீது கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரண மாக பிறந்த இடத்தினை அடையாளப்படுத்தும் வகையில் “தெணியான்” என்ற புனைபெய ருடன் 1964-08-13 முதல் எழுத்துலகில் பிரவேசித்தார். நடேசு என்ற இயற் பெயருடைய இவர்  அமரர் க.சிவபாக்கியம், க.நவரத்தினம் (க.நவம்-எழுத்தாளர் B.A (Hons), M.Sc (Political Science) அமரர் பாக்கியவதி சரவணமுத்து, திருமதி மலர் சிவராசா, திருமதி சந்திரலேகா கந்தசாமி ஆகியோரை உடன் பிறந்த சகோதரர் களாகக் கொண்டவர். இவரது தந்தையார் கந்தையா அவர்கள் தேவரையாளி இந்துக் கல்லூரியின் சைவ கலைஞான சபையின் ஓர் உறுப்பினர். பெரிய தந்தையார் ஒரு விஷகடி வைத்தியர்.

கல்வி

இவர் தனது ஆரம்பக்கல்வியை யா/தேவரையாளி இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து சிரேஸ்ட மாணவர் தராதரப் பத்திரம் (SSC) வரை அங்கு கற்றார். சிரேஸ்ட மாணவர் தராதரப்பத்திரம் (SSC) பரீட்சையில் முதலாம் பிரிவில் (First Division) சித்தியடைந் தார். எண்கணிதத்தில் அதிவிசேட சித்தியையும் தமிழில் விசேட சித்தியையும் பெற்றிருந்தார். தொடர்ந்து உயர்தரத்தினை (H.S.C)  யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். உயர்தரத்தினை கற்றுக் கொண்டிருந்தவேளையில் தந்தை யின் சுகவீனம் காரணமாக குடும்பப் பொறுப்பினை உணர்ந்து யா/தேவரையாளி இந்துக் கல்லூரியில் கிடைத்த ஆசிரிய நியமனத்தை பொறுப் பேற்றார். தொடர்ந்து ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நுழைவுப் பரீட்சையில்  சித்தியடைந்து கொழும்புத் துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆசிரியராக நியமனம் பெற்றார். பாடசாலைக் காலத்திலேயே பேச்சுப் போட்டிகள், விவாத அரங்குகள், நாடகங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு பலபரிசில்களையும், சான்றிதழ் களையும் பெற்றுள்ளார். ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் மேற்படி போட்டி களில் பங்குபற்றி சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

 ஆசிரியப்பணி

1960ஆம் ஆண்டளவில் ஆசிரியசேவையில் தான் கல்விகற்ற பாடசாலையான யாதேவரையாளி இந்துக் கல்லூரியில் இணைந்து கற்பிக்கத் தொடங்கினார். தொடர்ந்து ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்திசெய்து பயிற்றப்பட்ட  ஆசிரியராக நியமனம் பெற்றார்.

சேவைக்கால விபரம் .

1960  யா/தேவரையாளி இந்துக் கல்லூரி ஆசிரியர்

1961-1962 கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலை          

1963 -1969    நு/அட்டம்பிட்டிய மகா வித்தியாலயம்     ஆசிரியர்

1970  யா/அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலை         ஆசிரியர்

1971  யா/கரவெட்டி ஸ்ரீ நாரதா வித்தியாலயம்          அதிபர்

1972-2002  யா/தேவரையாளி இந்துக் கல்லூரி ஆசிரியர்,  பகுதித் தலைவர், பிரதி அதிபர்.  அதிபர் நியமனம் கிடைத்தபோதிலும் தனது இலக்கிய முயற்சிக்குத் தடையாக இருக்கு மென்ற எண்ணத்தினால் அதனைக் கைவிட்டு தொடர்ந்து ஆசிரியசேவையில் பணியாற்றி இறுதியாக பிரதி அதிபராக 2002ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆசிரியப் பணியாற்றிய சமகாலத்தில் தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரபல தமிழ் ஆசானாக மிளிர்ந்தார். யாழ்ப்பாண நகர பிரபல தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்திருந்த மாணவர் கலாசாலை, வல்வை கல்வி மன்றம், Liverpool போன்ற தனியார் கல்வி நிறுவனங்களிலும் தமிழினைக் கற்பித்து வந்தார். சமகாலத்தில் பல பட்டிமன்றங் களிலும் பிரபல பேச்சாளராக துலங்கிய வண்ணமும் இருந்தார். மேலும் ஆரம்பக் கல்வி மற்றும் தமிழ் பாடங்களுக் கான தொலைக்கல்விப் போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

திருமணம் மற்றும் குடும்பசந்தானம்

“கலையருவி”, கரணவாய் வடக்கு, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மகள் “மரகதம்” என்பவரை 22.05.1968இல் திருமணம் செய்தார். இவரது மனைவியும் அந்நாளில் சிரேஸ்ட பத்திரம் (SSC) பரீட்சையில் சித்தி பெற்றிருந்தார். திருமணமென்னும் நல்லறத்தின் மூலம் நான்கு பிள்ளைச் செல்வங்களைப் பெற்றர். பெண் பிள்ளைகளாக திருமதி உமாஞான சீலன் (பயிற்றப்பட்ட ஆசிரியர்), திருமதி ஜானகி அகிலன் (B.A,PGDE,MED,– ஆசிரியை) ஆகியோரையும் ஆண் பிள்ளைகளாக ஆதவன் (B.SC- முகாமைத் துவசேவை உத்தியோகத்தர்) துஸ்யந்தன் (B.A (Hons), PGDE,MED,M.A (Sociology)–ஆசிரியர்) ஆகியோரைப் பெற்று மகிழ்ந்தார். பிள்ளைகள் வழியாக திரு க. ஞானசீலன் (பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர்), ந..அகிலன் (பதவிநிலை உத்தியோகத்தர், யாழ்.பல்கலைக்கழகம்) திருமதி. துஸ்யந்தி ஆதவன் (B.A, அபிவிருத்தி உத்தியோகத்தர்) திருமதி. அனோஜா துஸ்யந்தன் ஆகியோரை மருமக்களாகவும், பேரப்பிள்ளைகளாக ஞா.கார்த்திகேயன், ஞா.ஆரணி, ஞா.ஆதர்சன், அ.சகாப்தன், அ. கானவர்ஷினி, அ.ஆத்மீகன், அ.சாருகேசினி, ஆ.ஆதித்யா, ஆ.கம்;ஸத்வனி, ஆ.லலீசன், து. திலக்சயன், து.காவியன், து.அர்வின் ஆகியோரைக் கண்டு மகிழ்வுற்றார். பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கல்வியில் சிறந்து  விளங்க இவர் நல்வழிகாட்டல்களை மேற்கொண்டார். இவரது பேர்த்தி  செல்வி. ஆ.ஆதித்யா க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேற்றினைப் பெற்று மருத்துவ பீட அனுமதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

சமூகப்பணி

மார்க்சிசக்; கொள்கை மற்றும் திராவிடக் கொள்கை ஆகியவற்றின் ஈர்ப்பினால் உந்தப்பட்டு அவ்வழியிலேயே சமூகப் பணிகளில் தடம்பதித்தார். ர~;யமாக்சிசம் மீதான இவரது கொள்கைப் பற்று உறுதியாக இருந்தது. ரஸ்ய கம்பூனிசம்  கட்சியின் ஒரு உறுப்பினர். சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுத்து அவ்வடக்குமுறைகளை எதிர்த்து மிகவும் காத்திரமாக துணிச்சலுடன் முன்னின்று போராட்டங்களை நடத்தினார். பொலிகண்டி கந்தவனக் கோயில் பிரவேசம், மாலை சந்தைப் பிள்ளையார் ஆலயப்பிரவேசம், அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயப்பிரவேசம் போன்றவை இவற்றுள் அடங்கும். வலிகாமப் பகுதியில் சமூகக் கொடுமை காரணமாக வீடுகள் எரியூட்டப்பட்டவேளையில் அம்மக்களுக்கான நிதிசேகரிப்பில் ஈடுபட்டு (உண்டியல் மூலம்) தக்க உதவிகளைப் புரிந்துள்ளார். அல்வாய் வடக்கு பிரதேசம் ஒன்றில் ஏற்பட்ட சாதிமோதல்  நிலைமைகளின்போது அதனைத் தீர்த்து வைக்கும் வகையில் துணிந்து செயற்பட்டவர். இக்கருமங்களில் எல்லாம் இவரது நண்பர்கள் சி.க. இராசேந்திரம் (கிளாக்கர்), அமரர் செ. சதானந்தன் (அதிபர்) இருவரும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் செயற்பட்டனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் ஆரம்பகாலம் முதல் உறுப்பினராக இருந்து அதன் தலைவர் ஆ.சுப்பிரமணியம் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். 2010ம் ஆண்டளவில் மேற்படிசபையின் தலைவராகவும் இருந்துள்ளார். தனதுஊரின் பூமகள் ச.ச.நிலையத்தின் தலைவராகவும் இருந்து பல்Nறு ஊர் சார்ந்த பணிகளை மேற்கொண்டவர். தனது ஊரிலுள்ள தனிப்பட்ட ஆலயமான அயிட்டியப்புலம் ஸ்ரீமுருகன் ஆலயத்தினை பொதுக் கோவிலாக மாற்றி அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர். தற்போது இக்கோயிலில் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதும் குறிப்பிடவேண்டியவிடயம்.

 இலக்கியப்பணி

1964 ஆகஸ்ட் 13 முதல் இலக்கியப் பணிக்குள் காலடி எடுத்து வைத்த இவரது முதல் சிறுகதை விவேகி இதழில் வெளியான ‘பிணைப்பு’ என்ற சிறுகதை மூலமாக படைப்பிலக் கியத்துறைக்குள் அறிமுகமானார். 1964 முதல் இறக்கும் வரை தொடர்ச்சியாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள இவர் 14 நாவல்கள,; 150 இற்குமேற்பட்ட சிறுகதைகள், 50க்கு மேற்பட்ட கட்டுரைகள், 30க்கு மேற்பட்ட கவிதைகள், 05 நாடகங்கள் ஆகியவற்றைப் படைத்துள்ளார். நிருத்தன், அம்பலத் தரசன், நடேசன், க.ந போன்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். விடிவை நோக்கி (1973) என்பதே இவரது முதல் நாவல். வடமராட்சிப் பிரதேசத்தின் முதல் நாவலாசிரியர் தெணியான் அவர்கள் தான் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயம். அத்துடன் பிராமணர்கள் பற்றி, ஈழத்து இல்கிய உலகில் .வெளிவந்த முதல் நாவல் “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்” (1987). இவரது நாவல்கள், சிறுகதை கள் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது.  மரக்கொக்கு (1994), கானலில் மான் (2002), குடிமைகள் (2013) ஆகிய நாவல்கள் அரச சாகித்ய மண்டலப் பரிசுகளைப் பெற்றது. மரக்கொக்கு (1994), காத்திருப்பு (1999) போன்றவை வடக்கு கிழக்கு மாகாண அமைச்சுப் பரிசைப் பெற்றது. சிதைவுகள் என்ற நாவல் இந்தியா,சுபமங்களா நடத்திய போட்டியில் பரிசைப் பெற்றது. இவரது சிறுகதை கள் பல “தகவம்” உட்பட பல பரிசுகளை வென்றுள்ளன. இலக்கியத்தின் அதியுயர் விருதான “சாகித்யரத்னா” விருதினை 2013ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டுள்ளார். ஆரம்பகாலங்களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது “பாதுகாப்பு” என்ற சிறுகதை இலங்கை அரசின் பாடத்திட்டத்தில் தரம் 11 தமிழ்மொழிப் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடவேண்டியவிடயம்.

தெணியான் படைப்புலகம்

          நாவல்கள்/குறுநாவல்கள்

  1. விடிவைநோக்கிவீரகேசரி வெளியீடு. கொழும்பு, 1973
  2. கழுகுகள்நர்மதா வெளியீடு, சென்னை, 1981
  3. பொற்சிறையில் வாடும் புனிதர்கள்முரசொலி வெளியீடு, யாழ்ப்பாணம். 1989
  4. மரக்கொக்குநான்காவது பரிமாணம் வெளியீடு, கனடா, 1994 (இலங்கை அரசு, வடக்கு கிழக்கு மாகாண அமைச்சு, சாகித்தியப் பரிசில்களுடன், இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசினைப் பெற்றது)
  5. காத்திருப்புபூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு, 1999 (வடக்குக் கிழக்கு மாகாண அமைச்சுப் பரிசினைப் பெற்றது)
  6. கானலில் மான்பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு,2002 (இலங்கை அரசு சாகித்தியப் பரிசினையும். இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசினையும் பெற்றது)
  7. சிதைவுகள்மீரா பதிப்பகம், கொழும்பு, 2003 (சிதைவுகள், பரம்பரை அகதிகள் நாவல்கள் அடங்கிய தொகுதிதேசியகலை இலக்கியப் பேரவை, சுபமங்களா பரிசுகளைப் பெற்றது)
  8. பனையின் நிழல்மயூரன் நினைவு வெளியீடு, அல்வாய், 2006
  9. தவறிப் போனவன் கதை கொடகே சகோதரர்கள் வெளியீடு, கொழும்பு, 2010
  10. குடிமைகள்ஜீவநதி வெளியீடு, கலைஅகம், அல்வாய், 2013 இரண்டாவது பதிப்பு, கறுப்புப் பிரதிகள், சென்னை, 2016 (சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் சாஹித்திய விருதையும், கொடகே சாஹித்திய விருதையும் 2013 ஆண்டு பெற்றது.)
  11. ஏதனம்பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு. 2016
  12. வெந்து தணிந்ததுகுறுநாவல், ஜீவநதி வெளியீடு. கலைஅகம், அல்வாய், 2018
  13. மூவுலகுகொடகே சகோதரர்கள் வெளியீடு, கொழும்பு, 2018

சிறுகதைத் தொகுப்புகள்

  1. சொத்துஎன்.சி.பி.எச். வெளியீடு, சென்னை. 1984
  2. மாத்துவேட்டிமல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம், 1996
  3. இன்னொரு புதியகோணம்பூமகள் வெளியீடு, கொற்றாவத்தை, 2007
  4. ஒடுக்கட்பட்டவர்கள்பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு, 2010
  5. தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள்ஜீவநதி, கலைஅகம், அல்வாய் 2012

கட்டுரைத் தொகுதிகள்

  1. இன்னும் சொல்லாதவை வாழ்வனுபவங்கள்,எழுத்து வெளியீடு, மதுரை, 2011
  2. பூச்சியம் பூச்சியமல்லஇலக்கிய அனுபவங்கள், என்.சி.பி.எச். வெளியீடு, சென்னை. 2013
  3. நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பிகுமரன் புத்தக நிலையம், கொழும்பு. 2012 இரண்டாவது பதிப்பு ,என்.சி.பி.எச். வெளியீடு, சென்னை, 2014
  4. மனசோடு பழகும் மல்லிகை ஜீவாஹப்பிடிகிடல் சென்ரர் வெளியீடு, கொழும்பு, 2014
  5. பார்க்கப்படாத பக்கங்கள் ஜீவநதி வெளியீடு, கலைஅகம், அல்வாய், 2015

தொகுத்த நூல்கள்

  1. டொமினிக் ஜீவாவின்ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்
  2. தேவரையாளி இந்துக்கல்லூரி மலர்இரண்டு வெளியீடுகள்,
  3. மல்லிகை ஜீவா“- (இணையாசிரியர்).
  4. அரும்புகளின் கீதங்கள்
  5. மூடிமறைக்காதீர்

இதுவரைவெளிவந்தஆக்கங்கள்

  1. சிறுகதைகள் – 150 (சாதியம் பற்றியசிறுகதைகள் 32. ஈழத்தில் சாதியம் பற்றிய அதிக சிறுகதைகளை எழுதியவர்)
  2. கட்டுரைகள் 50க்கு மேல் (மல்லிகையில் இரண்டு விவாதங்களை ஆரம்பித்து முடித்து வைத்தவர்முரசொலியில் வெளிவந்த சிறுகதை களை மாதந்தோறும் மதிப்பீடுசெய்து, ஒரு வருடகாலம் அம்பலத்தரசன் என்ற பெயரில் எழுதியுளார் வடஅல்வை முருகேசனார் பவளவிழாவில்சமூகப்போராட்டம் பற்றி காத்திரமான நீண்டகட்டுரையை எழுதி வந்தார்)
  3. .நாடகங்கள், வாழ்வளித்தவன் (யா/தேவரையாளி இந்துக் கல்லூரி கலை விழாவுக்கு அரங்கேற்றம் பெற்றது.) “தரகர் குடும்பம் (ஆசிரியகலா சாலைநடித்துமுள்ளார்) கல்லூரியில் நடித்த முக்கியமான நாடகம்ஜூலியசீசர்மார்க் அன்ரனி பாத்திரம் வானெலி நாடகங்கள் 05
  4. கவிதைகள்நிருத்தன் என்ற புனைபெயரில் – 30 வரை எழுதியுள்ளார்.

தெணியான் படைப்புக்கள் மீதானஆய்வுகள் 

1 “தெணியானின் சிறுகதைகள்ஓர்ஆய்வு மீனலோஜினி. என். கலைமாணி.           சிறப்பு ,யாழ். பல்கலைக் கழகம்

2 “தெணியானின் நாவல்கள்ஓர் நுண்ணாய்வுதேவகி ரமேஸ்வரன்,                            கலைமாணி சிறப்பு. யாழ். பல்கலைக்கழகம்

3 “அறுபதுகளின் பின் ஈழத்துத் தமிழ் நாவல்களில் சாதிப் பிரச்சினைகள் –                 தெணியானின் நாவல்கள் பற்றியநோக்குயோகேஸ்வரி, தி. கலைமாணி            சிறப்பு, பேராதனைப் பல்கலைக் கழகம்

4 “தெணியான் சிறுகதைகளில் சாதியம்வலென்ரீனா, ஜே. கலைமாணி                    சிறப்பு, யாழ். பல்கலைக் கழகம்

5 “தெணியானின் சிறுகதைகளில் மனிதம்அகிலன், வே. முதுகலைமாணி,             யாழ்.பல்கலைக் கழகம்

6 “நந்நி. சட்டநாதன். கேகிலா மகேந்திரன், தெணியான் சிறுகதைகளின்                   ஒப்பாய்வு விமலா வேலுதாசன், முதுகலைமாணி,யாழ். பல்கலைக் கழகம்

பரிசுகள்,விருதுகள்,கௌரவங்கள்

  1. யாழ் இலக்கிய நண்பர்கள் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 1966 முதற் பரிசு. (1971 முதல் போட்டிகளுக்கு எழுதுவதைக் கைவிட்டிருந்தார். பின்னர் சுபமங்களா குறுநாவல் போட்டிக்கு எழுதியிருந்தார்) பரிசுகள் பற்றிய விபரங்கள் நூல்களுடன் தரப்பட்டுள்ளன
  2. கலாசார அலுவல்கள் திணைக்களம், இலக்கியப் பணியை கௌரவித்து 2003இல்கலாபூசணம்விருது வழங்கியது.
  3. கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுசங்கம்கலாசாரப் பெருமன்றம்மக்கள் படைப்பாளி விருது வழங்கியது
  4. ஊர் மக்கள் இரு தினங்கள் மணிவிழா எடுத்தனர். “நந்தி தலைமையில் -18.04.2003 தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் டொக்ரர் .வேலும் மயிலும் தலைமையில் 19.04.2003 பூமகள் சனசமூக நிலையத்திலும் நடைபெற்றது.
  5. சொந்த இல்லத்தில் செங்கையாழியான் அழைப்பில் 06.08.2002 படைப்பளிகள் சார்பில் வெள்ளவத்தை, தமிழ்ச் சங்க வளாகத்தில், குமாரசாமி வினோதன் ஞபகார்த்த மண்டபத்தில் வைததியகலாநிதி .மு.முருகானந்தன் தலமையில் 22.08.2002 மல்லிகைப் பந்தல் நடத்திய மணிவிழா
  6. அல்வாய் கலைஅகத்தின் அவை 30.01.2005 கலாநிதி .கலாமணி நடத்திய விழா
  7. வடமராட்சி இலக்கிய நண்பர்கள் உணவளித்து கௌரவித்தார்கள்
  8. மரக்கொக்கு பரிசுபெற்றபோது வடஅல்வாயை சேர்ந்தவர்கள் அல்வாய்ஸ்ரீPலங்கா வித்தியாசாலையில் விழா எடுத்தார்கள்.
  9. வடமராட்சி அறிவோர்கூடலில் கௌரவித்தார்கள்.
  10. தெணியான் மணிவிழாகொற்றை பி.கிருஷ்ணானந்தனை தொகுப் பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பெற்றது
  11. வடமராட்சிதெற்குமேற்கு பிரதேசசெயலகம் பொன்னாடை போர்த்திகௌரவித்தது
  12. சாவகச்சேரி, கச்சாய் நூலகம் பொன்னாடை போர்த்தி கொளரவித்தது.
  13. தேவரையாளி இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.
  14. மல்லிகை அட்டைப்படம்மார்ச் 1989- பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அறிமுகம்.
  15. ஞானம்அட்டைப்பட அதிதி ஜூன் 2005
  16. ஆளுநர் விருது 2008 (கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு மாகாண சபை)
  17. தினக்குரல் வீரகேசரி, உயிர்நிழல் பேட்டிகள் வெளிவந்தன.
  18. மல்லிகை, ஞானம், பத்திரிகைகள் குறிப்பும் வாழ்த்தும் வெளியிட்டன. குறிப்புவடமராட்சி பிரதேசத்திலிருந்து முதல் ஆளுநர் விருது பெற்றவர்.
  19. அவை – 23 (2009.12.31) இல் நாவேந்தன் விருது, ஆளுநர் விருது பெற்றமைக் காக அல்வாய் கலைஅகத்தில் கௌரவிப்பு
  20. அவை – 44 தெணியானின் 50 வருட எழுத்துலக வாழ்வைப் பாராட்டி கௌரவிப்பும் தெணியானின் இரு நூல்கள் வெளியீடும் இடம்பெற்றது.
  21. அவை 46 இல் சாகித்தியரத்னா விருது பெற்றமைக்கான பாரட்டுவிழா
  22. ஜீவநதி சஞ்சிகையின் 106 ஆவது இதழ் தெணியானின் சிறப்பிதழாக வெளியானது.
  23. தெணியானின் பவளவிழா கொற்றாவத்தை பூமகள் சனசமூக நிலையத் தில் ஜீவநதி ஏற்பாட்டில் . பரணீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தெணியானின் ஜீவந்தி பவளவிழா சிறப்பிதழும், தெணியானின் வெந்து தணிந்தது நூலும் வெளியிடப்பட்டது,
  24. அவை இலக்கியவிருது
  25. கரவெட்டி பிரதேச பொதுநூலகத்தில் புத்தக தினம் அன்று பிரதம விருந்தினராக கௌரவம்.
  26. வதிரி சிவகாமி அறக்கட்டளை வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கிக் கொளரவித்தது.

 இவ்வாறான சிறப்புமிகு ஆளுமை கொண்ட ஈழத்தின் மூத்த இலக்கிய கர்த்தா தெணியான் அவர்கள் முதுமையின் காரணமாக 2022-05-22ஆம் நாள் அவரது வதிவிட இல்லத்திலேயே பூவுலக வாழ்விலிருந்து நீங்கி உயிர் நீத்தார். இவரது உயிர் நீங்கிய அரைமணித்தியாலத்தினுள் கடும் மழை பொழிந்து வானமே தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இவரது உயிர் உடலைப் பிரிந்தாலும் இவரது பெயர் என்றும் இலக்கிய உலகில் மீளமீள உச்சரிக்கப்படும். தெணியான் தமிழ் கூறும் இலக்கிய நல்உலகில் என்றும் நிலைத்து  வாழ்வார்.

நடேசு ஆதவன்,(மகன்)

கட்டுரையாசிரியர் தெணியானின் மூத்த புதல்வன் நடேசு ஆதவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக் கலைத்கூடத்தின ரின் மனமார்ந்த நன்றி.

                                                    75வது வயதில் தெணியான் அவர்கள்                                    இளையபேர்த்தியின் பிறந்தநாளில்  குடும்பத்தினருடன்                                              இளைய மகன் துஸ்யந்தன்   குடும்பத்தினருடன்                                                          மனைவி மற்றும் பிள்ளைகளுடன்                                                        மனைவி மற்றும் மருமக்களுடன்                                             மூத்த மகன் ஆதவன் குடும்பத்தினருடன்

இளைய மகள் ஜானகி குடும்பத்தினருடன;

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!