Tuesday, April 30

கலாபூஷணம் குருசுமுத்து இராயப்பு (கலையார்வன்)

0

அறிமுகம்.

கலையுலகில் சிறப்பாக படைப்பிலக்கியத்துறையில் கலையார்வன் என்னும் புனைபெயரால் அறியப்பட்ட குருசுமுத்து இராயப்பு என்னும் கனதிமிகு இலக்கியப் படைப்பாளி, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலலை கொஞ்சும் எழில்மிகு நகராம் குருநகரில் கூத்தும் பாட்டும் கலையும் இலக்கியமும் நர்த்தனமிட்ட மண். நெய்தல் நிலமாகத் துலங்குவதும், போர்த்துக்கேயரால் 1625ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட சீதாரி (கடற்கரை நகரம்)க்குள் அடங்கியிருந்ததும், சனவேற்றம் நிகழ்ந்தமை முதல் கரையூர் என்றும் மணல்கொண்டு கடல் மேவப்பட்டு புதிதாக மக்கள் குடியேற்றப்பட்ட பின்னர் குருநகர் என்றும் அழைக்கப்பட்டதுமான பிரதேசத்தில் குருசுமுத்து சிசிலியா தம்பதியினருக்கு 1949-10-11ஆம் நாள் புதல்வனாகப் பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் குருநகர் சென் ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பித்து அங்கேயே கல்வப்பொதுத்தராதரம் சாதாரண வகுப்பு வரை வல்வி கற்றுப் பின்னர் சிறிது காலம் வேலைதேடி வந்த இவருக்கு 1971ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாநகரசபையில் சந்தை மேற்பார் வையாளராக பணியாற்றுவதற்கான அரச நியமனம் கிடைத்தது. இப்பணி யில் இருந்தபொழுது பின்னர் சுகாதார மேற்பார்வையாளராகவும்; பதவியுயர்வு பெற்றார்.  

1976ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த றோமான் ஜோசேப்பின் தம்பதிகளின் நான்காவது புத்தரியான லூர்துநாயகியை கரம்பற்றி திருமணம் என்னும் நல்லறத்தில் இணைந்து இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு பெண்பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களை கல்வியிலும் தொழிலிலும் உயர்வடைந்து வாழ்வதற்கான ஒரு தந்தையின் கடமையினை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

1983ஆம் ஆண்டில் நாட்டில் மெல்ல மெல்ல உச்சநிலையடையத் தொடங்கிய உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் நாட்டைவிட்டு வெளியேறும் புலம்பெயர் நடவடிக்கைகளும் இவரை உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குப் புலம்பெயரும் எண்ணத்தை ஏற்படுத்தியது. இதனால் இவர் இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிஸ்ச்சர்லாந் நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார். அந்தப் புலம்பெயர் வாழ்வு இவருக்கு கலைத்துறையில் பிரகாசிப்பதற்கு ஊக்குவிப் பாக இருந்ததால் 1985ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை இடைவிடாது தொடர்ந்து இன்று வரை செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 கலையார்வனும் கலையுலகப் பிரவேசமும்.

தனது பாடசாலைக் காலத்தில் பாடசாலையில் கலைச்செயற்பாடுகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. பாடசாலை மற்றும் இவரது கிராமத்தில் நடைபெற்ற கூத்துக்கள், நாடகங்களை பார்ப்பதற்கு அடிக்கடி சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இவற்றினால் தன் சிறுவயதிலேயே நாடகக் கலைமீது ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். அந்த அடிப்படையில் நாடகமே இவரது கலை, இலக்கிய பிரவேசத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. கல்வி கற்கையில் 1960ஆம் ஆண்டு தனது பதினோராவது வயதில் பாடசாலையில் மேடையேறிய வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகத்தில் ஜக்கம்மா என்னும் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அரங்கப் பிரவேசம் செய்தார். பாடசாலையில் 1963ஆம் ஆண்டு சேரன் செங்குட்டுவன் நாடகத்திலும், 1964ஆம் ஆண்டு ஞானசௌந்தரி நாடகத்திலும் நடித்ததுடன், பாடப்புத்தகத்திலிருந்த தர்மம் தலைகாக்கும் கதைக்கு உரையாடல் எழுதி அந்நாடகத்திலும் நடித்துள்ளார். 1965இல் ஷேக்ஸ்பியரின் ஹம்லெட் கதைக்கும் உரை யாடல் எழுதி, இயக்கி எழுத்தாளனாகவும், இயக்குனராகவும் கலைச்சேவை ஆற்றியுள்ளார்;. இதன் தொடராக கவிதை, கட்டுரை, சிறுகதை என்பவற்றில் ஆர்;வமுடையவராகவும் இருந்து அதற்கேற்ப செயற்பட்டுள்ளார்;. அந்நாள்களில் கே.ஆர் மற்றும் குருநகர் கு.இராயப்பு என்னும் புனைபெயர்களில் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் சில வெளி வந்துள்ளன. 1972ஆம் ஆண்டு முதலே கலையார்வன் என்ற புனைபெயரைப் பயன்படுத்தியுள் ளார்.

கலையை பல நிலைகளிலுமிருந்தும் வளர்த்;தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட இளைஞர்கள் சிலர்; ஒன்றிணைந்து 1968ஆம் ஆண்டு உருவாக்கிய குருநகர் இளைஞர்; கலைக்கழகத்தில் நாடகத்துறைக்கு பொறுப்பாக இருந்தமை இவரது எழுத்துத்துறைக்கு ஊக்கிவிப்பாகவே இருந்தது. தொடராக நாடகங்களை எழுதுவதற்கும், மேடையேற்றம் செய்வதற்கும் இக்கழகம் வழிசமைத்தது. அக்காலம் குருநகரில் இயங்கிய ஏனைய மன்றங்களுடன் போட்டிபோட்டு முன்னிலை வகுத்த பொற்காலம் என்றே சொல்லலாம். இவர்; 1966 முதல் 1982 வரை 40 வரையான நாடகங்களை எழுதியுள்ளார்;. அவற்றில் 27 நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை நெறியாள்கை செய்ததுடன் சில நாடகங்களில் நடிகனாகப் பங்கேற்றும் கலைப்பணி ஆற்றியுள்ளார். சில நாடகங்கள் விருதுகளையும் பெற்றுள்ளது. இதற்கு களம் அமைத்துக் கொடுத்தது குருநகர் இளைஞர் கலைக்கழகமே. 1963ஆம் ஆண்டு புனித யாகப்பர் ஆலய பங்குத் தந்தையான அருட்பணி பெனற் கொன்ஸ்ரன்ரைன் அடிகளாரின் ஏற்பாட்டில் இளைஞர் கலைக்கழகத்தால் வெளியீடு செய்யப்பட்ட உலகின் ஒளி 1969 என்னும் தொகுப்பு நூலுக்கு ஆசிரியராக செயற்பட்டுள்ளார்;. இதன் தொடராக 1970ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் இணைந்து நாடக ஆற்றுகைகளுக்கு ஒன்றித்து செயற்பட்டுள்ளார்;. பலிக்களம் வீடியோ நாடகம் உட்பட பல நாடகங்களில் சிறிய பாத்திரங்களாக இணைந்துள்ளார்;.

 எழுதிய நாடகங்கள்.

எழுதி மேடையேற்றப்பட்ட நாடகங்களில் நினைவிலும் பதிவுகளிலும் இருந்தவற்றினை தொகுத்து தரப்படுகின்றது.

1964 தர்மம் தலைகாக்கும் (உரையாடல்),

1965இல்ஹம்லெட் (உரையாடல்)

ராஜராஜன் (இயேசுவின் உயிர்ப்பு வரலாறு)

காகித ஓடம்

கலையின் பரிசு (புனித அருளப்பர் வரலாறு)

மதுவே இன்பம்

உயிர்கொடுத்த உத்தமர்கள் (மன்னாரில் சங்கிலியன் மன்னனால் கொல்லப்பட்டவர்கள் வரலாறு)

விதியின் கரம்

கொடுமை கொடுத்த கொலு (சங்கிலியன் மன்னனின் வரலாறு)

அணை கடந்த வெள்ளம்

புனித ஜோசவ்வாஸ் (புனிதரின் வரலாறு)

கடவுள் இருக்கின்றாரா?

புவலயம் புகுந்த புனிதன் (புனித யாகப்பர் வரலாறு)

மெழுகுவர்த்தி

தீர்ப்பு

கருமேகம்

ரோசா மலர்

களம் தந்த களங்கம்

கண்ணீர்;

இடையர் காட்சி

ஆணையின் ஆட்சி (புனித செபஸ்ரியார்; வரலாறு)

நீதி சாவதில்லை

அணையா தீபம்

யாhர் கிறிஸ்து

புதிய பிறப்பு

தண்டனை (எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நாடகம்)

திருவிழா

இவற்றில் 5 நாடகங்கள் நாடகப் போட்டியில் 1ஆம் பரிசினையும், 2 நாடகங்கள் எழுத்துருப் போட்டியில் 2ஆம் பரிசினையும், 3 நாடகங்கள் சிறந்த நாடக எழுத்தாளனுக்குரிய பரிசினையும், 2 நாடகங்கள் சிறந்த நாடக இயக்குநருக்குரிய பரிசினையும் பெற்றுக் கொடுத்துள்ளன.

சுவிற்சர்லாந்தில் ஒரு குழுவாக இணைந்து வோ மாநில தமிழர்; கலை, கலாசார ஒன்றியம்சுவிஸ் (Association  l’art  et culture  tamil , canton vaud, suisse) என்ற அமைப்பை உருவாக்கவும், அதன்மூலம் கலை விழாக்கள், சிறார்களுக் கான தமிழ்ப் பாடசாலை, பரதநாட்டிய வகுப்புகள் போன்றவற்றை நடத்தவும், பலருக்கும் பயன்படும் வகையில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தருவித்த நூல்களைக்கொண்டு தமிழ் நூலகத்தை ஆரம்பித்து நடத்தவும் ஏதுவாக இருந்துள்ளது. வோ மற்றும் ஜெனீவா மாநிலங்களில் தமிழொலி என்ற பெயரில் வானொலி சேவையை ஆரம்பித்து பொறுப்பாளராக இருந்து அப்பணியை செவ்வனே நிறைவேற்றி உள்ளார். அங்கு யார் குற்றவாளி, நீதி தேவதை போன்ற நாடகங்களை எழுதி மேடையேற்றி யும், கவியரங்குகள் சிலவற்றில் பங்குகொண்டும் கலைச்சேவை ஆற்றியுள்ளார். இவற்றுடன் தமிழொலி வானொலி சேவையில் ஒலிபரப்புவதற்காக எழுதப்பட்ட கவிதை களின் தொகுப்பாக இரண்டு நூல்கள், ஐரோப்பா வாழ் சிறுவர்களின் நலன் கருதி தமிழ் அறிவு நூல், தமிழ் மக்களுக் கான கணிப்பொறி கற்கை நூல் போன்ற நூல்களை எழுதி வெளியிடவும் முடிந்துள்ளது. தாயகம் திரும்பிய பின்னர் (2001) கிறிஸ்துவின் பிறப்பை சுட்டிநிற்கும் புதிய பிறப்பு, எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நாடகமான தண்டனை மற்றும் திருவிழா போன்ற நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஆரம்ப காலகட்டத்தில் நாடகங்களினூடாக ஆக்க இலக்கிய படைப்பினுள் நுழைந்த கலையார்வன் காலப்போக்கில் இலக்கியம், அறிவியல், ஆவணப்படுத்தல் போன்ற தொகுப்புகளில் 21 நூல்களை எழுதி சுயமாக வெளியீடு செய்துள்ளார்;. அவற்றின் தொகுப்பு பின்வருமாறு:

அ. இலக்கியம்

  1. தடுமாறும் சாஸ்திரங்கள் (சுவிஸ்) (கவிதைகள்) (1993),
  2. அவலத்தின் இராகங்கள் (சுவிஸ்) (கவிதைகள்) (1995)
  3. களம் தந்த களங்கம் (தென்மோடி நாட்டுக்கூத்து) (2003)
  4. குருதிக்குளியல் (மூன்று குறுநாவல்கள்) (2007)
  5. ஆகுதி (சிறுகதைத் தொகுப்பு) (2009)
  6. கூத்துக்கள் – 5(தென்மோடிக் கூத்துக்கள்) (2009) இதற்குள் சாலமோன் ஞானம் தலையின் விலை, கலையின் பரிசு, கன்னியர் திறை, அணையா தீபம் போன்ற கூத்துக்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன.
  7. குறுங்கூத்துக்கள் (தென்மோடிக் கூத்துக்கள்) (2011) இதற்குள் சகுந்தலை, அனார்க்கலி, காசியப்பன், மந்தரை சூழ்ச்சி,சங்கிலி செகராசசேகரள் போன்ற கூத்துக்கள்  உள்ளடக்கப்பட்டள்ளன.
  8. உப்புக்காற்று (நாவல்) (2012)
  9. வேப்பமரம் (நாவல்) (2013)
  10. அறுவடை (காவியம்) (2014)
  11. கடல் கடந்த நாட்கள் (பயண அனுபவப பதிவுகள்) (2015)
  12. வெள்ளைச்சேலை (நாவல்) (2016)
  13. அந்த 18 நாட்கள் (நாவல்) (2017)

ஆ. அறிவியல்

  1. தமிழ்ச்சோலை (சுவிஸ்) (தமிழ் அறிவு நூல்  (1994)
  2. செயல்முறைக் கணிப்பொறி (சுவிஸ்) (கணிப்பொறி கல்வி) (1998)
  3. கணிப்பொறி 2000 (கணிப்பொறி கல்வி) (2001)
  4. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய முன்னோடிக் குறிப்புகள் (2009)

இ. ஆவணப்படுத்தல்

  1. குருநகர் கலைமாட்சி (2003)
  2. கடலலைகள் கொஞ்சும் நகர் (2006)
  3. ஆன்மீகத்தில் குருநகர் மக்கள் (2008)
  4. நெய்தல்மருதநில நாட்டார் வாய்மொழி இலக்கியம். (2017)

ஈ. சிங்கள மொழி மாற்றம்

  1. கதறிய சுலங் (உப்புக்காற்று நாவல்) (2015)

உ. இறுவட்டு பாடல்கள் ஆக்கம்

  யாகப்பரே எங்கள் காவலரே (2002)

 புகழ் பூத்த புனிதர் (2011)

  வெள்ளோட்டம் (2011)

 விருதுகளும், சான்றிதழ்களும்

  1. தேசிய விருதுகள் :

கலைத்துறையின் வளர்ச்சிக்காக, ஈடேற்றப்பட்ட சிறந்த சேவைக்காக கலைத்துறை மற்றும் கலை அலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட கலாபூஷணம் (2014),

எழுத்துத்துறையின் சிறந்த பங்களிப்பிற்காக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் (2017),

  1. எழுத்துத்துறைக்கு ஆற்றிய பணிக்காக யாழ் பிரதேச, மாகாண, மாவட்ட விருதுகள்.
  2. யாழ் ரத்தினா  (பிரதேசம் 2014),
  3. சமூகத் திலகம் (பிரதேசம் – 2018),
  4. கலைக்குரிசில்  (மாகாணம் – 2019),
  5. யாழ் முத்து    ( மாவட்டம் – 2019). 
  6. நூல் விருதுகள் :

அரச இலக்கிய விருது (தேசியம்)

கூத்துக்கள் – 5 (தென்மோடிக் கூத்துக்கள் 2010)

குறுங்கூத்துக்கள் (சான்றிதழ் 2012)

உப்புக்காற்று (நாவல் 2013)

கடல் கடந்த நாட்கள் (பயண அனுபவங்கள் 2016)

தமிழியல் விருது (எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், தேசியம்)

கூத்துக்கள் – 5 (தென்மோடிக் கூத்துக்கள் 2010)

உப்புக்காற்று (நாவல் 2013)

சிறந்த ஆக்க இலக்கிய விருது (இலங்கை இலக்கிய பேரவை, தேசியம்)

குறுங்கூத்துக்கள் (தென்மோடிக் கூத்துக்கள், 2012)

வேப்பமரம் (நாவல், 2014)

சிறந்த இலக்கிய நூல் விருது (வடமாகாண பண்பாட்டலுவல் திணைக்களம், பிரதேசம்)

கடல் கடந்த நாட்கள் (பயண அனுபவங்கள் 2016)

குருதிக்குளியல் (3 குறுநாவல்கள், 2007)

உப்புக்காற்று (நாவல் 2013)

அறுவடை (காவியம், 2015)

கடல் கடந்த நாள்கள் (பயண அனுபவங்கள் 2016)

சான்றிதழ்கள்

யாழ் பிரதேச செயலகம் (இளங்கலைஞர், 2005)

யாழ் பிரதேச செயலகம் (சிறுகதை, 2008)

யாழ் பிரதேச செயலகம் (பாடலாக்கம், 2008)

இலங்கை இலக்கிய பேரவை (இலக்கிய சான்றிதழ், 2011)

யாழ் பிரதேச செயலகம் (நாட்டார் கலை கற்றல், 2016)

யாழ் மாவட்ட செயலகம் (நாட்டார் கலை கற்றல், 2016)

யாழ் பிரதேச செயலகம் (நாட்டார் கலை கற்றல், 2017)

யாழ் மாவட்ட செயலகம் (நாட்டார் கலை கற்றல், 2017)

 தமிழ் இலக்கிய உலகில் ஏராளமான படைப்பாளிகள் வலம் வந்துள்ளனர், வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு படைப்பாளியும் வெவ்வேறு கோணங்களில் அல்லது வெவ்வேறு பார்;வைகளில் தமது படைப்பாக் கங்களில் தமது சிந்தனையைச் செலுத்தி அதனை வாசகர்களுக்கு அளித் துள்ளனர்.. அந்த வகையில் கலையார்வன் அவர்களும் இப் படைப்பாளி களுடன் இணைந்துகொண்டாலும் தனது தனித்துவமான படைப்பாக்க முயற்சியினால் ஏனைய படைப்பாளிகளிடமிருந்தும் வேறுபட்டுக் காணப்படுகின்றார்;.

ஈழத்து நாவல் இலக்கிய வரலாறு தனித்துவமானது. தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டது என்பது நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தில் கலையார்வன் சிறப்பிடம் பெறுகின்றார். தமிழின் மீதும், தமிழினத்தின்மீதும் தமிழரின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் மீதும் தீராத மோகங்கொண்ட படைப்பாளி கலையார்வன் அவர்கள் அவற்றைத் தம் படைப்புகளில் புகுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.

பள்ளிப்பருவ வயது முதல் இன்றுவரை எழுத்தை நேசிக்கும் சுவைமிகு கலைஞனாக இவர் இலக்கிய உலகில் உலாவருகின்றார். மட்டுப்படுத்தப்பட்ட இலக்கிய ஆக்கங்கங்களுள் நின்றுவிடாது பல்துறை சார்ந்த படைப்பாளியாக இவர் வலம்வருவதை இவரது படைப்புகளில் இருந்தே நாம் கண்டுணரலாம். ஓர் இனத்தின் அடையாளங்களாகவும், அடுத்த சந்ததியினருக்கு கையளிப்பு களாகவும் அமைவன இலக்கியங்களே. அந்த வகையில் எம் இனத்தின்மீது வீசப்பட்ட துன்பியல் சம்பவங்களையும் தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் இதுவரைக்கும் நான்கு நாவல்களை எழுதியுள்ளார். இந்நான்கு நாவல்களும் சொல்லும் செய்திகள், உணர்;த்தும் படிப்பினைகள் பலவாகும். காலத்துக்கேற்ப இவரது படைப்புகள் மாற்றமடைந்து, விரிவடைந்தே செல்கின்றன. யதார்த்த வாழ்வில் வெளிப்பட்டு நிற்கும் சமுதாயப் பிரச்சினைகளை எளிய முறையில் படைப்புகள் மூலம் அழகாகச் சித்தரித்து வருகின்றமை கலையார்வனது சிறப்பாகும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!