Tuesday, May 21

மிருதங்க வித்வான் தம்பிப்பிள்ளை பாக்கியநாதன்.

0

அறிமுகம்

ஒரு கலைஞனின் ஐந்து தசாப்த கால மிருதங்கக் கலை வாழ்க்கையின் பல்வேறு கட்டங் களையும் தனதாக்கி ஒரு வித்வானாக, பின்னணிக் கலைஞனாக, மிருதங்க இசையின் அடி நாதமாக. பலர் விரும்பும் கலைஞனாக, கலைஞர்கள் அனைவரும் நன்கறிந்த ஒரு கலை ஞனாக, நாடறிந்த, உலகறிந்த கலைஞனாக வலம் வந்த ரி.பாக்கியநாதன் அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஐம்பது வருடங்களாகத்தான் ஈடுபட்ட கலை உலகை நேசித்ததுமட்டுமல்ல அவருடன் சம்பந்தப்பட்ட நிறுவனங் கள், ஏனைய கலை விற்பனர்;கள், அனைவரையும் மிருதங்க இசையால் ஒன்றிணைத்தவர்.  கலைக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலலை கொஞ்சும் எழில்மிகு நகராம் குருநகரில் கூத்தும் பாட்டும் கலையும் நர்த்தனமிட்ட மண் போற்றும் கடற்கரை வீதியில் வாழ்ந்து வந்த திரு  திருமதி அன்ரனி ஆரோக்கியம் தம்பதியினரின் மூத்த புதல்வனாக வித்வான் ரி.பாக்கியநாதன் அவர்கள் 1928-10-24 ஆம் நாள்; பிறந்தார். தந்தையாரகிய அன்ரனி அவர்களை கிராம மக்கள் தம்பித் துரை என்று அன்பாக அழைத்து வந்தனர். தந்;தையார் பாக்கியநாதனுக்கு கத்தோலிக்கப் பாரம்பரியத் தின் அடிப்படையில் பிரான்சிஸ் என நாமம் சூட்டி மகிழ்ந்தார். இவ்வூர் மக்களும் உறவினர்களும் இவரை பாக்கியநாதன் என செல்லப்பெயர் கொண்டழைத்தமை யினால் காலப் போக்கில் கலையுலகில் வித்வான் தம்பித்துரை பாக்கியநாதன் என்ற பெயரே நிலைக்கத் தொடங்கியது. ரி.பாக்கியநாதன் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

தனது ஆரம்பக் கல்வியினை யாழ்ப்பாணம் குருநகர் சென் ஜேம்ஸ் வித்தியாலயத்தில் 9ஆம் தரம் வரை கற்றார். இப்பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தவேளையில் பாடசாலையின் கல்வி தவிர்ந்த ஏனைய புறச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தினார். பாடசாலைக் காலங்களில் நடைபெற்று வந்த கலை நிகழ்வுகளில் பக்கவாத்திய இசைகளில் ஒன்றாக மிருதங்கம் முக்கிய இடத்தினை வகித்திருந்தது. இவ்விசையின் மீது நாட்டங் கொண்டிருந்த இவர் இயல்பாகவே தனக்குள் குடிகொண்டிருந்த மிருதங்க இசைமீதான ஆர்வத்தினை மெல்ல மெல்ல பீறிட்டெழச் செய்தார். மிருதங்க இசைமீதிருந்த பக்தியும் ஆர்வமும் அதனை மேலும் வளர்த்தெடுப்பதற்கான உந்துதலை இவருக்குள் ஏற்படுத்தியது. ஆரம்ப காலத்தில் இவர் வாழ்ந்த குருநகர்ப் பிரதேசமானது முழுக்க முழுக்க கத்தோலிக்கப் பாரம்பரியமுடைய கிராமமாக இருந்தமையால் பாக்கியநாதனது மிருதங்க இசைக் கலை வடிவத்தினை ஏற்றுக்கொள்வதற்கு இவ்வூர் மக்கள் மறுத்து வந்தனர். நிறையவே எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். தென்மோடி நாட்டுக்கூத்துக் கலையின் பொக்கிஷமாகத் திகழும் குருநகரில் தென்மோடிக்கூத்தின் பக்கவாத்தியங்களில் ஒன்றாகத் திகழும் மிருதங்கத்தினை ஆத்மரீதியாக ஏற்று இசைவழங்கும் கலைஞனை ஏற்றுக்கொள்வதற்கு பின்னடித்தமையானது பாக்கியநாதனிடம் கலைத்தாயாகிய சைவக்கடவுள் சரஸ்வதிதேவி குடிகொண்டிருப்பதாகக் கருதி அவர்களால் ஏற்கமுடியவில்லை. காலப்போக்கில் எல்லாம் மாற்றமடைந்தன. பாக்கியநாதனவர்கள் பிறப்பால் கத்தோலிக்கராக இருந்தாலும் தான் நேசித்த கலையை மதிக்கும் கொள்கையுடையவராக. மாமிச உணவு உண்பதனை முற்றாக விடுத்து சைவ உணவினை உண்ணும் பழக்கமுடையவராகத் தான் சார்ந்த கலையை நேசித்த உன்னத மனிதராக – உண்மைக் கலைஞனாக வாழ்ந்தது மட்டுமல்ல இறுதிக்காலம் வரை மிருதங்கம் தவிர்ந்த வேறு எந்த வாத்தியக் கருவிகளையும் அவர் எந்தத் தேவைக்கும் பயன்படுத்தியதில்லை. ஆனாலும் அத்தனை தோல் வாத்தியங்களையும் இயக்குவதில் ஆற்றல் பெற்றிருந்தவர் என்பது இங்கு மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

பின்னாளில் அவர் தமிழ்நாடு சென்று அங்கிருந்த மிகவும் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மிருதங்கத்தில் பயிலுநர் மாணவராக தன்னை இணைத்து மூன்றாண்டுகள் கற்று வந்தார். இவ்வாறு கற்று வரும் வேளையில் இவருடைய மிருதங்க வாசிப்பின் காரணமாக வியப்படைந்த அண்ணாமலை பல்ககை;கழக விரிவுரையாளர்கள் அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மிருதங்கக் கலை வளர்த்த இராமநாதனவர்களிடம் மேலதிக பயிற்சி பெறுமாறு கூறி அவரிடம் அனுப்பிவைத்தனர். தாயகம் திரும்பிய பாக்கியநாதன வர்கள் முத்த்pரைச் சந்தியில் வசித்து வந்த மிருதங்க வித்வான் இராமநாதனவர் களிடம் முதலாவது மாணவனாக குருகுலவாசம் செய்தார். இக்குருகுலவாசம் இராமநாதனவரகளது இறுதிமூச்சு வரை மட்டுமல்லாது திரு பாக்கியநாதனது இறுதி மூச்சு வரை தொடர்ந்தது எனலாம். இராமநாதனவர்களிடம் குருகுலவாசம் செய்யும் காலத்திலிருந்து சிறு சிறு நிகழ்வுகளுக்குப் பக்கவாத்தியமாக மிருதங்க இசையினை வழங்கி வந்தார். 1962 ஆம் ஆண்டு பாரிய நிகழ்விற்கு வாசி;கும் வித்வானாக இராமநாதனவர்களால் ஆசீர்வதிக் கட்டார். தொடர்ந்து வந்த காலங்களில் நடன அரங்கேற்றத்துக்கான மிருதங்க இசை வழங்குனராக இவர் வித்வான் இராமநாதனவர்களால் சிபார்சு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தின் முன்னணி நடன வித்வான்களின்  நடன அரங்கேற்ற நிகழ்வுகளின் முக்கிய பின்னணி மிருதங்க இசைக் கலைஞனாக செயற்பட்டு வந்தார்.

1958 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்;ந்த கிறிஸ்தோப்பர் திரேசம்மா தம்பதியரின் மூத்த புதல்வியான ஆசிரியை லூர்துநாயகி என்னும் மங்கையைக் கைப்பிடித்து மணவாழ்வில் நுழைந்தார்;. மணவாழ்க்கையில் ஆறு பிள்ளைகளுக் குத் தந்தையான இவர் தனது பிள்ளைச் செல்வங்களையும் கல்வியில் மட்டுமல்ல கலையுலகிலும் இல்லற வாழ்க்கையிலும் பிரகாசித்து வாழும் வகையில் ஒரு தந்தையின் கடமையினை செவ்வனே நிறைவேற்றி மகிழ்ந்தார். இவருடைய மூத்த புதல்வி திருமதி கலேனா அருள்தாஸ் அவர்கள் புலம் பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வசித்து வருகின்ற போதிலும் அவர் ஈழத்தின் பிரபல நடன ஆசான் வேல் ஆனந்தன் அவர்களிடம் பரதம் மற்றும் கதகளி ஆகிய நடனங்களைப் பயின்று இன்று ஜேர்மனி நாட்டில் நடன ஆசிரியையாக வாழ்ந்து வருகின்றார். இரண்டாவது புதல்வன் மிருதங்கக் கலையினைப் பயின்றுள்ளார். மூன்றாவது புதல்வன் கபிலன் ஈழத்தில் வாழ்ந்து வருகின்றார். திரு பாக்கியநாதனின் மறுவடிவமாக ஈழத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் மிருதங்கக் கலையின் முக்கியமானவராக வாழ்ந்து வருவதுடன் தந்தையின் துறையினை பேணிவருவதுடன் அனைத்துத் தோல்வாத்தியங்களையும் இசைக்கும் வல்லமையுடையவராகத் திகழ்கின்றமை வித்வான் பாக்கியநாதனவர்களது கலைத் தொடர்ச்சியும் சந்ததித் தொடர்ச்சியும்; முக்கிய மைல்க்கல்லாகும். ஆறாவது புதல்வன் நடனத்துறையில் புலம்பெயர் நாடுகளில் பிரகாசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இசைத்துறையில் மிருதங்க வித்வான் ரி.பாக்கியநாதனின்

பங்கும் பணிகளும்.

இசை வாத்தியங்களில் ‘மேற்காலநடை’ வாசிப்பு அதாவது துரிதநடை வாசிப்பு என்பது முக்கிய மானதொன்றாக விளங்குகின்றது. இவ்வாசிப்பில் கைதேர்ந்த வித்வான் பாக்கியநாதனவர்கள் தபேலா, கடம், கெஞ்;சிரா, செண்டை போன்ற எல்லாவித தோல் வாத்தியங்களையும் வாசிக்கும் அபாரசக்தி பெற்றிருந்தாலும் எந்த இடத்திலும் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மிருதங்கம் தவிர்ந்த ஏனைய வாத்தியங்களை வாசிப்பதில்லை என்ற கொள்கையோடு வாழ்ந்தவர். யாழ்ப்பாணத்தில் கர்நாடக இசைப்பாணியில் மிருதங்கத்தைக்கையாண்டு கச்சேரிகள் வாசித்த பெருமை பெற்றவர். இவருடைய வாசிப்பில் வலந்தரை தொப்பி சமப்படும் சுகம் அதிசுவையானது. பரண் சொற்கள் எல்லாம் சுருதி சுத்தமானதாகவும் அதிமேற்காலமாகவும் அமையும். நடை, டேகா, கும்காரம் போன்றவை இவருக்கென்றே உரிய தனிப்பாணியை உடையதும், சம்பிரதாயத்தை ஒட்டியதாகவும் அமைந்திருக்கும்.

மிருதங்க வித்வானும் முன்னோடியும் பாக்கியநாதனின் ஆசிரியருமான இராமநாதனவர்கள் இவரது மிருதங்க வாசிப்பின் நுணுக்கம் மற்றும் லாவகம், தேர்ச்சி என்பவற்றினால் கவரப்பட்டு இவரை நடன அரங்கேற்றங்கள், நாட்டிய நாடகங்கள் என்பவற்றிற்கு மிருதங்க இசை வழங்குவதற்கான சிறப்புக் கலைஞனாக ஆசீர்வதித்து அனைவரோடும் இணைத்து பயணிப்பதற்கான தடத்தினை உருவாக்கிக் கொடுத்தார்.

தனது வீட்டில் மிருதங்க வகுப்பினை ஆரம்பித்து நடத்திய இவர் பல மாணாக்கர்களுக்கு மிருதங்கம் வரன்முறையில் கற்பித்துள்ளார். ஏறக்குறைய பன்னிரண்டு மாணவர்களது மிருதங்க அரங்கேற்றத்தினை நிகழ்த்தி கலையுலகில் மாணவர் பரம்பரையொன்றினை உருவாக்கினார். நுல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வகுப்பினை நடத்தி வந்தது மட்டுமல்லாமல் அதிபர் தாசீசியஸ் அவர்களுடன் இணைந்து ‘குருநகர் நடன நல்லிசைக் கலாமன்றம்’ என்னும் மன்றத்தினை நிறுவி தனது பொறுப்பில் பலகாலமாக இயக்கி வந்தார்.

ஈழத்தின் நடன விற்பன்னர்களான லீலா நாராஜனன், நல்லையா மாஸ்ரர், கலைஞர் வேல் ஆனந்தன், லீலா செல்வராஜன், பத்மினி செல்வேந்திரகுமார் போன்றோரது நடன ஆற்றுகைகள், நடன அரங்கேற்றங்கள் மற்றும் நாட்டிய நாடகங்களின் பின்னணிக் கலைஞர்கள் வரிசையில் பாக்கியநாதன் மிருதங்க வித்வானாக நீண்ட காலம் பயணித்தவர். சிறப்பான விடயம் என்னவெனில் லீலாநாராஜனன் அவர்களது முப்பத்திரண்டு நடன மாணவிகளது அரங்கேற்றத் தில் மிருதங்க வித்வானாகப் பங்குகொண்ட பெருமைமிகப்பெற்றவர். கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களது அத்தனை நிகழ்வுகளிலும் நல்லையா மாஸ்ரரது நிகழ்வுகளிலும் நீண்ட காலம் அறுபடாத் தொடர்ச்சியாக மிருதங்க வித்வானாக வலம் வரும் பலம் பெற்றிருந்தார்.

ஈழத்தின் மிகப்பெரிய இசை ஜாம்பவான்களான திலகநாயகம்போல், பொன் சுந்தரலிங்கம், இசைத் தென்றல் ஜேசுதாசன், நாதஸ்வர வித்வான் பிச்சையப்பா ஆகியவர்களோடு நீண்ட கால நட்புரிமை பாராட்டிய கலை வளர்த்த இவர் இவர்களது இசைக் கச்சேரிகளின் ஆஸ்தான மிருதங்க வித்வானாக இணைந்திருந்தமையும் இதன் மூலம் கலையுலகில் ஆழமான பட்டறிவினையும் மிருதங்க வாசிப்பின் ஆழத்தினையும் மேலும் மெருகூட்டினார் என்பது வெள்ளிடைமலை.

இலங்கை வானொலியின் நிகழ்வுகளுக்கு மிருதங்க இசை வழங்கிய பாக்கியநாதனவர்களை ‘ஏ’ தர வித்வானாக மதிப்பளித்து வந்த இலங்கை வானொலிக் குழுமம் 1989 ஆம் ஆண்டு இவரை தனிவாத்தியம், தாள வாத்தியம் மற்றும் லயவிநயாசம் என்பவற்றின் ‘ஏ’தரத்தின் அடுத்த உயர் நிலையான ‘சுப்பர் கிரேட் ஆட்டிஸ்ற்’ (ளுரிநச பசயனந யுசவளைவ) என அடுத்த நிலைக்கு தரமுயர்த்தி மதிப்பளித்தனர்.

இலங்கை வானொலியின் லய வாத்தியக் கலைஞர்களில் சுப்பர் கிரேட் ஆர்ட்டிஸ்ற் ஆகவும் ஈழத்தின் மிருதங்க வத்வானாகவும் வலம் வந்து பல்வேறு ஆற்றுகை களிலும் அரங்கேற்றங் களிலும் நாட்டிய நாடகங்களிலும் அணி செய் கலைஞராகத் திகழ்ந்து மிருதங்கக் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்த மாபெரும் கலைஞன் பாக்கியநாதன் அவர்கள் 1997-11-27 ஆம் நாள் கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்.

மிருதங்க வித்வான் ரி.பாக்கியநாதனின் பதிவினை ஒழுங்கமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வித்வான் பாக்கியநாதனவர்களின் மூத்த புதல்வி திருமதி கலேனா அருள்தாஸ், மூன்றாவது புதல்வன் பிரபல தபேலா வாத்தியக் கலைஞன் கபிலன் பாக்கியநாதன் ஆகிய இருவருக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக் கலைக்கூடத்தின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!