யாழ்ப்பாணம் – நவாலி வீதியில் ஆனைக்கோட்டைச் சந்தியிலிருந்து நவாலி செல்லும் பாதையில் 500 மீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமண்ய ஆலயம் என அழைக்கப்படும் இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும் ஆனி அமாவாசையைத் தீர்த்தமாகக்கொண்டு ஆனிப் பூரணை வந்து வரும் பிரதமைத் திதியில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.