Wednesday, September 11

முருகன் கோயில் வங்களாவடி, வேலணை

0

யாழ்ப்பாணம் வேலணையின் சந்தியில் அமைந்துள்ள இவ்வாலயமானது ஆதியில் வைரவர் ஆலயமாக அமைந்திருக்கின்றது. பனைவளவில் இருந்த அரசு, வேம்புகளின்கீழ் சூலங்களை வைத்து அருகில் குடியிருந்த மக்கள் வணங்கி வந்தார்கள். இதன் முன்னோடியான சிவசுப்பிரமணியம் என்பவரது மரணத்தின் பின்னர் அவரது சகோதரர்களான பொன்னையா. சின்னையாவின் பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகளும் மண்டைதீவினைச் சார்ந்த செல்லத்துரையின் பிள்ளைகளும் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தனர். வங்களா வடிச் சந்தி வர்த்தகம் மற்றும் அரச திணைக்களங்கள் சனப்புழக்கம் என்பன ஏற்பட வேலணை கிழக்கு மக்கள் ஒன்றுகூடி பட்டவேம்படி ஞானவைரவர் இருக்கும் இடத்தில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என எண்ணினர். இதற்காக நிதி சேகரிக்கப்பட்டு 1965 இல் நிர்வாகசபை ஒன்றினையும் உருவாக்கினர். கோவில் அமைப்பதற்கான காணியினை சிலர் நன் கொடையாக வழங்கினர். மிகுதிக்காணியினை விலைக்கு வாங்கியும் ஆலயம ;அமைக்க முற்பட்டவேளை முருகன் கோவில் ஒன்றினையும் சேர்த்து அமைக்க விரும்பினர்.1967 இல் வங்களாவடி ஞானவைரவர் சுவாமி கோயில் பரிபாலன சபை என்ற பெயர்வேலணை முருகன் கோவில் பரிபாலன சபை எனப்பெயர் மாற்றம் பெற்றது. இச்சபையின் இடையறா முயற்சினால் ஞானவைரவர்ஆலயம் முருகன் ஆலயமாக மாறியது. 1973 இல் கும்பாபிN~கம் செய்யப்பட்டது.மூன்று காலப்பூசைகளுடன் ஞானவைரவருக்கு பொங்கல் படையல்,மடைபரவல் என்பனவும் தங்கு தடையின்றி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!