1900 ஆம் ஆண்டளவில் இப்பகுதியில் பிறந்த கார்த்திகேசு என்பவர் சிறந்த முருகபக்தராக விளங்கினார். இவரது வளவில் ஓர் பெரிய வில்வமரம் இருந்தது. ஒருநாள் கார்த்திகேசு என்பவரது கனவிலே முருகன் தோன்றி உனது வளவில் உள்ள வில்வமரத்தடியில் நான் இருக்கின்றேன் எனக்கூறி மறைந்தார். மறுநாட் காலையில் குறித்த இடத்தைச் சென்று பார்த்த போது அங்கு வேல் ஒன்று இருக்கக் கண்டு இவ்வேலை அந்த இடத்திலேயே வைத்து பூசைசெய்து வழிபடலாயினார். காலப்போக்கில் பொதுமக்களும் இணைந்து பொங்கல் பூசை செய்து வழிபட்டு வந்தனர். கார்த்திகேசு தனது பிள்ளைகளின் உதவியுடன் சிறிய கொட்டி லமைத்து முருகனை வழிபட்டு வந்தனர்.கார்த்திகேசுவும் அவருடைய புதல்வர்களும் கைத்தம்பி, வீரசிங்கம், முத்து ஆகியோரின் தலைமையில் 1935இல் கோயில் கட்டும்பணி ஆரம்பமானது. இவர்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் பனையோலையால் குட்டான்களை இழைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கி அதனுள் ஒருபிடி அரிசியை முருகனுக்காக சேமியிங்கள் என்று கூறிச்சேகரித்துப் பெற்ற அரிசியை விற்றுப் பெற்ற பணத்தினையும் ஊரில் சேர்த்துக் கொண்ட பணத்தினையும் மூலதனமாகக் கொண்டு இவ்வாலயத்தின் கட்டட வளர்ச்சி நிலை உதயமாகி 1945 ஆம் ஆண்டு கும்பாபிN~கம் நடைபெற்றது. 1979-07-03 இல் இராஜகோபுரம்அமைத்து கும்பாபிN~கம் நடைபெற்றது.மீண்டும் 2000-03-27 இல் கும்பாபிN~கம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாதபூரணை தினத்தினை தீர்த்தோற்சவமாகக்கொண்டு பன்னிரண்டு நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.