காரைநகர் துறைமுகத்திலிருந்து கடற்கரையோரமாக கிழக்கே கால்மைல் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முருக பக்தராகிய ஆறுமுகம் முருகர் என்னும் பெரியார் சிதைந்த நிலையிற் காணப்பட்ட கருங்கடல் வேலாயுதம் என்ற பெயரமைந்த கப்பலில் கந்தவேளின் கைவேல் காட்சியைக் கண்டார். அவ்வேலைக் கொண்டு வந்து கதிர்காமக் கந்த பக்தனாகிய நாகமுத்து கந்தர் என்பவரிடம் கொடுத்தார். நாகமுத்து கந்தரவர்கள் தனது காணியில் அமைந்திருந்த இலுப்பைமர நிழலின் கீழ் சிறு குடிலமைத்து கைவேலைப் பிரதிஸ்டை செய்து பூசைகளைச் செய்து வந்தார். காலப்போக்கில் ஊர் மக்களின் முயற்சியினால் மூலஸ்தானம்,அர்த்தமண்டபம், நிருத்த மண்டபம் என்பனவைரக் கல்லால் கட்டப்பெற்று 1924ஆம் ஆண்டு 05 ஆம் மாதம் ஐந்து உறுப்பினர்கள் பரிபாலகர்களாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆலயத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு 1956 இலும், 1976 இலும் மஹா கும்பாபிN~கங்கள் சிறப்பாக நடைபெற்றன.