Saturday, June 22

தொன்மமும் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் பண்பாடும்

0

புகழ்பூத்த இச்சிறு தீவில் சிறப்புற்ற விளங்கும் 15 ஆலயங்கள் உள. இப்பெருமை மிகு ஆலயங்களில் பழமையான வழிபாட்டு நெறியின் சான்றாய் இத்தீவின் பெருமைக்கும் சிறப்புக்கும் முக்கிய காரணமாய் அமைவது இன்று நாகபூஷணி என அழைக்கப்படும் அம்பிகையின் ஆலயமாகும். அம்பிகையின் தலம் எழுந்தருளிய இடமாதலால் நயினை உலகிலே சகல இனமக்களுக்கு ஓர் உயர் சிறப்புப் பொருந்திய தீவாக காணப்படுகின்றன. நயினாதீவுக்கு நாகபூஷணி அம்மன் வருகை தந்த வரலாறு பற்றி அறிய வாய்மொழி மரபுக்கதைகளையும் எட்டு வடிவ இலக்கியங்களையும் செவிவழிப்பாடல்களையும் ஆதாரமாகக் கொண்டு பேசப்பட்டு நம்பப்பட்டு வருகின்றது. எனவே கீர்த்திவாய்ந்த 64 சக்திபீடங்களுள் ஒன்றாக விளங்கும் இவ்வாலயம் பற்றிய தொன்மம் வாய்ந்த மரபுக்கதை ஒன்று நிலவி வருவதனைக் கணெமுடிகின்றது.
முன்னெரு காலத்தில் நயினாதீவிலுள்ள அம்பிகையின் படிமத்தை அயல்தீவான புளியந்தீவிலிருந்து நாகமொன்று பூசித்து வந்ததாகவும் ஒரு நாள் அந்நாகம் அர்ச்சனை செய்தற்காகப் பூக்களைக் கொய்து கொண்டுவரும் வழியில் கருடன் (பருந்து) ஒன்றைக் கண்டஞ்சிக் கடற்கரைக்கு அண்மையிலுள்ள கல்லொன்றினைச் சுற்றிக் கொண்டிருந்ததாகவும் கருடனும் இதனைக் கொல்லும் நோக்குடன் எதிரிருந்து கல்லொன்றில் இருந்ததாகவும், இந்நேரம் இவ்விரண்டினதும் பகைமையை அக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த வணிகன் ஒருவன் கண்டு அவற்றைச் சமாதானம் செய்யும நோக்கோடு தான் சென்று கொண்டிருந்த கலத்தை நிறுத்தி கருடனை அவ்விடத்தைவிட்டு விலகும்படி கேட்டதாகவும் அதற்குக்கருடன் உனது செல்வம்யாவற்றையும் கொணர்ந்து என் முன் வைத்தால் விலகுவேன் என்றதாகவும், அவனும் அப்படியே செய்யக்கருடன் விலகியதாகவும், ஊர் திரும்பிய வணிகனது வீட்டில் பேரொளி ஒன்று தோன்றியதாகவும் அங்கெல்லாம் கண்ணைப் பறிக்கும் நாகரத்தினம் கற்கள் காணப்பட்டதாகவும். இவை நயினாதிவு அம்பிகையின் திருவருட் செயலென எண்ணிய வணிகன் யாத்திரை புறப்பட்டு வந்து அம்பாள் கோயிலைப் பெரிதாகக் கட்டி நயினாபட்டர் என்பவரைப் பூசைக்கமர்த்தி ஆலயத்தை நிர்வகித்து வந்ததாகவும் கூறப்படுகின்றத. இப்பொழுது பாம்பு சுற்றிய கல், கருடனிருந்த கல் என இரு கற்களைப் பொது மக்கள் காட்டுமு; வழக்கம் இங்குண்டு.

பாண்டவர்களில் ஒருவனை அருச்சுனன் நாகவழிபாடியற்ற மணிபுரத்துக்கு வந்து நாக கன்னிகையை மணஞ் செய்து பப்பிரவாகன் என்னும் புத்திரனைப் பெற்றுனெனவும், பப்பிரவாகனது பெயரே பப்பிரவாகன் சல்லியென ஸ்ரீ நாகபூ~ணி ஆலயம் அமைந்த விடமென அறியக்கிடக்கின்றது. ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அன்னை பராசக்தி வழங்கினாள். பசிர்த்தோர்க்கெல்லாம் அமுதசுரபி மூலம் அமுதூட்டி மகிழ்ந்தான் ஆபுத்திரன்.

நெடுமுடிக்கின்றி என்றும் சோழவரசன் யாத்திரை காரணமாக மணிபல்லவத்துக்கு வந்து பீலிவளை என்பாளை மணந்தான். இதனால் அவன் மணிபல்லவத்திற்கு வந்து பார்த்த போது அங்கிருந்த நாக வழிபாடும். நாக ராஜேஸ்வரி ஆலயமும் அவனுக்கு மனப்பூரிப்பை அளித்தன. இதன் பேறாகத் தொண்டைமான் இளந்திரயன் என்ற ஆண்மகவினைப் பெற்றானென யாழ்ப்பாணச்சரித்திரம்; குறிப்பிடுகின்றது.
பாண்டியன் கோவலனை பல துண்டங்களாக வெட்ட கண்ணகி அவற்றை சேர்த்தெடுத்து தைத்து உயிர்பெற்றெழுந்ததும் கோவலன் மாதவியைக் கேட்டவுடன் கண்ணகி மனமுடைந்து கோபங்கொண்டு ஐந்தலை நாகமாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு, தெற்கு நோக்கி ஊர்ந்து சென்று முதலில் நயினாதீவை அடைந்தாளென்ற ஐதீகமானது இவ்வாலயத்தின் பழமையை எடுத்துக்காட்டுகின்றது.
கி.பி 3ஆம் நூற்றாண்டளவில் நயினாப்பட்டர் என்பவரை நாகபூஷணி அம்பாளின் பூசை செய்வதற்காக மாநாய்கள் என்னும் வணிகராற் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்துர் வரவழைக்கப்பட்டார். பட்டர் மரபிற் பல வருணங்கள் உண்டு. நயினார் கட்டரின் 20ம் சந்ததியினரான இளையதம்பி உடையாரே பட்டர் மரபிலுள்ள ஸ்ரீ நாக பூஷணிபூசை டிசெய்த கடைசி அர்ச்சகராவார். நயினாபட்டரின் மரபினரான மதுரை விநாயகபட்டரின் சந்ததியாரே தற்கால நயினாதீவு ஸ்ரீ வீரகத்தி விநாயகராலயம் பிரதமகுரு சாம்பசிவக் குருக்களின் வம்வாவழியினராகும். நயினாதீவு நாகபூஷணி அம்மன்; ஆலயத்தில் கோயில் அர்ச்சகர்களாக 20 பட்டர்கள் இருந்திருக்கிறார்கள். நாயனார்பட்டரின் 20ம் தலைமுறையினரான இளையதம்பி உடையாரே இறுதியாக பூசகராக இருந்தவரென அறியக்கிடக்கிறது. நாகத்தால் பூசிக்கப்பட்ட அம்மை நாகபூஷணி எனும் பெயர் பெற்றாள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் காலத்திலேயே நாகபூ~ணியெனும் நாமம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து இந்து விக்கிரஹக்கலை மற்றும் இந்துக் கோயிற் கட்டிடக்கலை நிபுணரான திரு. எம். நரசிம்மன் அவர்கள் சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களுடன் 11.03.1951ல் நயினாதீவுக்கு வருகை தந்தார்கள். அப்பொழுது அம்பாள் “பாலஸ்தாபனம்” செய்யப்பட்டிருந்த காலமாதலால் மூலமூர்த்தியின் அயலே எல்லோரும் சென்று தரிசிக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த ஆய்வாளர் மூலஸ்தானத்தில் அம்பாள் சிலையின் பின்புறத்தே அழகுற விளங்கும் ஐந்து தலை நாகச்சிலையில் தாம் கொண்டு வந்த ஒரு நுண் கருவியை அழுத்தி வெளியே கொண்டு வந்து பார்த்தார். இந்த நாகச்சிலை பதினையாயிரம் வருடப் பழமை உடையது என்றும் இங்கு அமைந்திருந்த மிகப்புராதனம் வாய்ந்த வழிபாட்டுக்குரிய வடிவமும் இதுவாகும் என்றும் அவரால் குறிப்பிடப்பட்டமை நயினாதீவின் தொன்மத்தினை புதிய கற்கால மக்களது வாழ்க்கைக் காலத்திற்கு எடுத்துச் செல்கின்றது. இந்நிலையில் ஏறக்குறைய எகிப்திய நாகரிக காலத்து நாகவடிவமாக இந்த நாகச்சிலை நாகதீபத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாகும். எகிப்துக்கும் நாகதீபத்திற்கும் இடையே இருந்திருக்கக்கூடிய பண்பாட்டுத் தொடர்பின் வடிவமே இந்நாகச்சிலை என்பதில் ஐயமேதும் இருக்கமுடியாது.

தொன்மங்களாகும் அம்மனின் அற்புதங்கள்

பால் நினைத்தூட்டுந் தாயினும் சாலப் பரிவுள்ள உலகநாயகியாகிய நாகேஸ்வரி கருணைத்திறத்துடன் உலகெங்கும் வியாபித்து அடியார்களுக்கு பல நன்மை வாய்ந்த அற்புதங்களைச் செய்துள்ளாள். தன்னை நினைத்து நினைத்து நாள்தோறும் உருகிப்பாடும் அடியார்களுக்கு அவர்கள் தம் அல்லல் தீர்க்க அம்பாள் அவ்வப்போது தோன்றி அடியார்களுக்கு பல அற்புதங்களை ஆற்றியும் காட்டியும் வருகின்றாள். உலகெங்கும் அம்பிகை ஆற்றியுள்ள அற்புதங்களை அளவிட்டுக் கூறமுடியாது அம்பாள் தாம் விரும்பிய வடிவில் அன்னபூரணியாகவும் தாயாகவும், சேயாகவும் இன்னும் பல வடிவங்களில் அம்பிகை தம் அடியார்கள் முன்தோன்றி மக்களின் அல்லல்களைத் தீர்த்து அருள்பாலிப்பாள் அருள் பாலித்தும் வருகிறாள்.

அம்பாள் தனது அற்புதங்களை காட்டும் போது அனேகமாக தனது வடிவமாகிய பாம்பின் வடிவமாகவே தானுருவெடுத்து அற்புதங்களை காட்டியுள்ளாள். ஒருமுறை அம்பாளின் மகோற்சவத்தின்போது பல்லாயிரக்கனக்கான அடியார்கள் யாத்திரையாக வந்து அம்பாளை தரிசிக்க விரும்பினர். அவ் விரும்பத்தின் அடியாக அனைவரும் அவ் அன்னசக்தி ஆலயத்திற்கு வருகை தந்தார்கள். அம்பாள் மனசார வணங்கிஅ ழுது புரண்டு அரோகரா சத்தத்துடன் தரிசித்தார்கள் அவ்வேளையில் ஒரிரு அடியார்களுக்கு தண்ணீத் தாகம் வந்துவிட்டது. அவர்கள் உடனே தண்ணீர் வார்க்கும் தண்ணீர்ப்பந்தலுக்கு இல்லாத காரணத்தால் அயலில் உள்ள ஓர் வீட்டுக்குச் சென்றார்கள். நயவஞ்சகம் பிடித்த அந்த வீட்டுக்காரருக்கு அம்பிளை அடியார்களுக்கு தாகத் தண்ணீர் கொடுக்க விருப்பமில்லாததால் அவர்கள் அவர்களுக்கு கொடுத்த தண்ணீருக்குள் நஞ்சை இட்டுக் கொடுக்க ஒன்றும் தெரியாத அடியார்கள் தாகம் தீர்த்துக் கொள்ள இவ் நஞ்சு ஊற்றப்பட்ட அத்தண்ணீர்ச் சொம்பை வேண்டினர் உடனே அடியாரின் கையில் இருந்த செம்புக்குள் இருந்து ஒரு பெரிய கொடுக்கான் (பாம்பு) விழுந்துவிட்டது. அடியார்கள் அத்தண்ணீரை கொடுக்கான் விழுந்த தண்ணீர் என்று அதனைப்பருகாது ஊற்றிவிட்டனர். இவ்வாறு அம்பாள் கொடுக்கானாக மாறி தண்ணீருக்குள்விழுந்து தம்மடியார்களைக் காப்பாற்றிய புதுமை அம்பாளின் அற்புதங்களில் ஒன்றாகும். இப்படி இன்னேரன்ன அற்புதங்களை அந்த அம்பாள் ஆற்றினாள்.

தம்மை நன்கு நேசித்து அடியவர் ஒருவர் கொடிய நோய் உண்டாகி துன்புற்றிருக்கையில் அம்பாள் அவ் அடியாரின் கனவில் தோன்றி “அப்பனே நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நான் இதோ உமக்கு ஒரு மருந்து தருகிறேன். அதனைச் சாப்பிடு உடனுக்குடன் உனக்கு சுகமாகி விடுமென்று” அடியாரின் கனவில் கிழவி வடிவத்தில் தோன்றிய அம்பிகை கூறுகிறாள். விடிந்ததும் அவ்டியவர் பலவாறு துன்புற்றிருந்த அக்கொடிய நோய் “ வெயிலைக் கண்டபனி போல்” பறந்துவிட்டது. இதன் மகத்துவத்தையும் உண்மையையும் அடியார் நம் இன சுற்றத்தார் அனைவருக்கும் சொன்னார். அனைவரும் நயினைஅம்பாளின் இவ் அருள்மிரு அற்புதத்தைக் கண்டு வியந்து நின்றகர் நோய்மாறி அவ்வடியார் உடனே அம்பாள் ஆலயத்துக்குச் சென்று அழுது புரண்டு அவள் நாமங்களுக்குள் பாடி ஆனந்தக் கூத்தாடினார். பின் ஓரிரு நாட்களுக்குள் அதிக நிறையையுடைய தங்கச் சங்கிலி ஒன்று வாங்கிக் கொடுத்தார். அம்பாளின் அற்புதங்களை எவராலும் அளவிட்டுக் கூறமுடியாது. ஆதரவின்றி பரிதவிக்கும் மக்களை அன்புடன் அரவணைக்கின்றாள் துன்புறும் மக்கள் இன்பமாக்கிறாள் இவ் உலகத்தையே தன் இருகண்ணாக காண்கின்றாள் கண்ணைப்போல் காக்கின்றாள். பாதுகாக்க முயலும் வேளையில் பல அற்புதங்களை சொரிகின்றாள்.

நன்றி வாழ்நாள்ப்பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா,

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!