Thursday, July 25

கலாபூஷணம் பிரம்மஸ்ரீ பஞ்சாட்சர சர்மா சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்)

0

 அறிமுகம்

மறுமலர்ச்சி எழுத்தாளர், பத்திரிகையாளர், சம்ஸ்கிருத பண்டிதர், தமிழறிஞர், கோப்பாய் பிரம்மஸ்ரீ . பஞ்சாட்சர சர்மாஸ்ரீமதி இராசாத்தி அம்மா தம்பதிகளின் புதல்வனாக 08-01-1954 கோப்பாய் சிவம் அவர்கள் பிறந்தார். தற்போது ~~ஸ்ரீநகரம்|| அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம்.

என்னும் முகவரியில் வாழ்ந்து வரும் இவர் தனது 13ஆவது வயதில் ~ஜோதி| பத்திரிகையில் வெளிவந்த கவிதையுடன் இலக்கிய உலகில் கால்பதித்தார். தொடர்ந்து ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை முதலிய பல்துறை ஆக்கங்களை வெளியிட்டு வந்ததோடு இலங்கை வானொலியிலும் மெல்லிசைப் பாடல்கள் இயற்றியதுடன் இசைச் சித்திரங்கள், உரைச்சித்திரங்கள், நாடகங்கள் பல எழுதிவந்தார். மேடைகளில் சமயச் சொற்பொழிவுகள் நடத்தி வருவதுடன் பல பட்டிமண்டபங்கள், கவியரங்குகளில் பங்குபற்றியும் நடத்தியும் புகழ்பெற்றிருக்கிறார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் படவரைஞராகப் பணியாற்றி உரிய காலத்திற்கு முன்னரே ஓய்வுபெற்று யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் கலைத்துறை சிறப்புப் பட்டதாரியாகியதுடன் கணினித் துறையில் டிப்புளோமா பட்டம் பெற்று நூல்களை அச்சிட்டு வெளியிடத் துவங்கினார். கவிதை, சிறுகதை, ஆன்மீகக் கட்டுரைகள் எனத் தமது ஆக்கங்கள் பலவற்றை சுமார் இருபத்தைந்து நூல்களாக வெளியிட்டுள்ளார். சம்ஸ்கிருத –  கிரந்த எழுத்தில் ஆலயங்களில் பயன்படும் பத்ததி நூல்கள் நூற்றுக்கு மேல் தமது கணினியில் வடிவமைத்துப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இன்று உலகெங்குமுள்ள இந்து ஆலயங்களில் இவரது நூல்களே பயன்பாட்டில் உள்ளன என்பதும் நாளாந்தம் உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுப்பப்படுகின்ற சமய சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் கூறும் ஆலோசகராகவும் விளங்குகிறார்.

தென்னிந்தியா, காஞ்சிபுரத்திலிருந்து சேதுபதி மன்னரின் கௌரவிப்புடன் திருவுத்தரகோச மங்கையில் குடியேறி சுமார் பதினைந்து தலைமுறைகளின்பின் அரசியல் கொந்தளிப்பு மற்றும் பஞ்சம் காரணமாக, யாழ்ப்பாண மன்னனின் அழைப்புக்கிணங்க காரைநகர், வியாவில் ஐயனார் ஆலயத்திற்கு வந்து குடியேறிய ஆதிசைவ சிவப்பிராமண அந்தணர் மரபில் வந்தவர் கோப்பாய் சிவம்.

அரச உத்தியோகத்தில் திருகோணமலை, கிளிநொச்சி ஆகிய இடங்களில் பணியாற்றியபோது அவ்விரு இடங்களிலும் இலக்கிய, ஆன்மீக மன்றங்களில் இணைந்து சமய சமூகப்பணிகளும், இலக்கியப்பணிகளும் செய்தமை வளம்சேர்க்கும் காலங்களாக அமைந்தன. பல மேடை நிகழ்வுகளில் பங்குபற்றி ஆளுமையை வளர்த்துக்கொள்ளவும், புகழ் பெறவும் இக்காலங்கள் உதவின.

நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் பத்திராதிபராக இருந்து, அருவி சஞ்சிகையை நடத்தினார். செங்கதிர் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தார். பல ஆலயங்களின் கும்பாபிஷேக மலர்களையும், பல தனிநபர்களின் மணிவிழா மலர்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

பல ஆலயங்களுக்கான ஊஞ்சற் பாடல்களையும் பல பாடசாலைகளின் கீதங்களையும் பல நிறுவனங்களின் கீதங்களையும் இயற்றியிருக்கிறார். பல ஆலயங்கள்மீது இசைப்பாடல்கள் இயற்றி அவை இறுவட்டுக்களில் வெளியாகியுள்ளன. சம்ஸ்கிருதத்தில் கவிபாட வல்லவரான இவர் பல ஆலயங்கள்மீது சம்ஸ்கிருதக் கீர்த்தனைகள், சுலோகங்கள் இயற்றி அந்தந்த ஆலயங்களில் அரங்கேற்றியிருக்கிறார். இரண்டு ஆலயங்களுக்கான சுப்ரபாதங்களைச் சம்ஸ்கிருதத்தில் இயற்றி அவை அந்த ஆலயங்களில் நாளாந்தம் ஒலிபரப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. (கரணவாய் உச்சில் ஸ்ரீ புவனேஸ்வரி என்னும் பகவதி முத்துமாரி அம்மன் மற்றும் கரணவாய் வெற்றிக்காட்டு ஸ்ரீ விநாயகர்). பல திருமண வைபவங்கள், மணிவிழாக்கள் போன்றவற்றிற்கு தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் வாழ்த்துப் பாக்களை இயற்றுவதோடு தாமே கணினியில் வடிவமைத்தும் வழங்கியிருக்கிறார்.

இலங்கை இந்துகலாச்சார அமைச்சு தனியாக இயங்கிய காலத்தில் இந்துசமய விவகார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இயங்கிய குருகுல பாடசாலையின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றியவர். காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் குருகுலம், யாழ்ப்பாணம் கந்தர்மடம் சிவஸ்ரீ நா. பாலசுப்பிரமணியக்குருக்கள் ஞாபவார்த்த குருகுலம் ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் தாமே தமது இல்லத்திலும், ~மெய்நிகர்| வழியாகவும் பல மாணவர்களுக்கு சம்ஸ்கிருத வேத, சிவாகமக் கல்வியைப் போதித்து வருகிறார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புப் பிரிவில் சைவசித்தாந்த முதுகலைமாணி மாணவர்களுக்கு வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகிறார். சைவசித்தாந்த சாத்திரங்களையும், சிவாகம ஞானபாத உட்பொருள்களையும் ஆர்வமுள்ள பலருக்குத் தனிப்பட்டமுறையில் போதித்து வருகிறார்.

 சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நால்வேதங்கள், பல மூல சிவாகமங்கள் உட்பட ஆன்மீகம், இலக்கணம், இலக்கியம் எனப் பல்துறை நூல்கள் பலவற்றைச் சேகரித்து ஓர் அரிய நூலகத்தை தமது இல்லத்தில் வைத்திருக்கிறார்.

 அண்மையில் மணிவிழாக்கண்ட இவர் தமது சுமார் ஐம்பது ஆண்டு கால சமய, இலக்கியப் பணிகளுக்காகப் பல விருதுகiளும், பரிசுகளும் பெற்றிருக்கிறார். அவற்றில் சிகரமாக அமைவது 2014ஆம் ஆண்டு இலங்கை அரசின் கலாபூஷணம் விருதாகும். ஆதனைத் தொடர்ந்து ஞான ஏந்தல், யாழ்முத்து என்பனவும் இவர் பெற்ற விருதுகளாகும்.

 2004 இல் லண்டனில் நடந்த பூபாளராகங்கள் என்ற பிரம்மாண்டமான கலைநிகழ்வில் வழக்காடுமன்ற நீதிபதியாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையிலும், பல வெளிநாடுகளிலும் உள்ள பல ஆலயங்களில் கும்பாபிஷேகங்கள், மஹோற்சவங்கள் முதலியவற்றில் சாதகாச்சாரியர் (பத்ததி வாசிப்பவர்), ஆகம ஆலோசகர், சொற்பொழிவாளர் என்ற பலமுகங்களுடன் கலந்து சிறப்பித்திருக்கிறார். நோர்வே ஒஸ்லோ திருமுருகன் ஆலயம் (2006), சிங்கப்பூர் ருத்ரகாளியம்மன் ஆலயம் (2011), நோர்வே பேர்கன் ஏழுமலை ஆனந்த சித்தி விநாயகர் ஆலயம், (2017, 2018) மலேஷியா முருகன் ஆலயம் (2015), மலேஷியா ஜோகூர்பார் முருகன் ஆலயம் (2018),  கனடா ரொறன்டோ கந்தசுவாமி ஆலயம், கனடா மொன்றியல் திருமுருகன் ஆலயம் (2019) என்பன குறிப்பிடத்தக்கன.

 இவரது மூத்த தமையனார் பொறியியலாளராயிருந்து அதன்பின் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவியாகி சேவையாற்றுகிறார். (சுவாமி அட்சராத்மானந்தா). இவரது மூத்த சகோதரி எழுத்தாளர் சௌமினி ஆவார். ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர். நீர்வேலி பிரம்மஸ்ரீ சு. இரங்கசாமி ஐயர்சாரதா தம்பதிகளின் முத்த மகளான, கூட்டுறவுத்துறையில் பணியாற்றிய விஜயலட்சுமியைத் திருமணம் செய்து ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகளைப்; பெற்றிருக்கும் இவர் தமது சமய, சமூக, இலக்கியப் பணிகளுக்கு இவர்கள் உறுதுணையாக விளங்குவதாகப் பெருமை கொள்கிறார்.

ஏனைய சிறப்புத் தகைமைகள் :

 ~~கோப்பாய்சிவம்|| என்ற புனைபெயரில் சமயம், சமூகம் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றைக் கடந்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக, பத்திரிகை, வானொலி, பொதுமேடைகள் ஆகிய ஊடகத் துறைகளினூடாக எழுதியும் வெளிப்படுத்தியும் வருதலும் பல போட்டிகளில் பரிசில்கள் வென்றதும் பல நூல்கள் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கௌரவப் பட்டங்கள், பரிசுகள்:

 1. 1976ஆம் ஆண்டு முதற் காலாண்டில் வெளியான ஈழத்துச் சிறுகதைகளில் சிறந்த கதைக்கான  தகவம் நிறுவனத்தின் பரிசு.
 1. யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடத்திய விடிவெள்ளி கே. பி. முத்தையா நினைவுச் சிறுகதைப்போட்டியில் சிறப்புப் பரிசு (~~நியாயமான போராட்டங்கள்||) – 1981.
 1. வீரகேசரி எழுத்தாளர் ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியில் பரிசு – 1982.
 1. மட்டக்களப்பில் வெளிவந்த தாரகை சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம்பரிசு     – 1984.
 1. மட்டக்களப்பு களம் கலை இலக்கிய வட்டம் நடத்திய திருமதி ரோஸ் பற்றிக் நினைவுச் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப்பரிசு. – 1985
 1. ஆக்க உரிமைகள் வியாபாரக் குறிகள் பதிவகம் நடத்திய சிறுகதைத் தொகுதிக்கானபோட்டியில் முதற்பரிசு ரூ 5,000.00 – 1985.
 1. யாழ். இலக்கிய வட்டம் நடத்திய கனக. செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில்(~~கரைசேரும் கட்டுமரங்கள்||) பாராட்டுப் பரிசு. – 1985.
 1. 1987-88 இல் வெளிவந்த சிறுவர் இலக்கிய நூல்களில் சிறந்த நூல்களுள் ஒன்று என

~பூந்தோட்டம்|   கவிதை நூல் இலங்கை இலக்கியப் பேரவையால் பாராட்டப்பட்டது.

 1. 1987-88 இல் வெளிவந்த சமய இலக்கிய நூல்களில் சிறந்த நூல்களுள் ஒன்று என ~சைவ விரதங்களும் விழாக்களும்| நூல் இலங்கை இலக்கியப் பேரவையால் பாராட்டப்பட்டது.
 1. வீரகேசரி புத்தாண்டுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு ரூபா 5,000.00 – 1990
 1. வலி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு நடத்திய புத்தாண்டு;க் கவிதைப் போட்டியில் முதற்பரிசு – 1990.

 கௌரவ விருதுகள்

 இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்அருள்நெறி விழா – 1999 – கௌரவிப்பு

 சர்வதேச இந்துமத குருபீடம் 20012இல் ஸ்கந்த சாம்பசிவ சிவாசார்யர் ஞாபகாரத்தப் பெருவிழாவில் ~~ஸ்ரீ சுபஸ்வரம்|| சாதனையாளர் விருது.

 15.11.2014 இல் கொழும்பு ஸ்ரீ ராமகான சபா பவளவிழாவில் ~~ஆயுஸ் சதுரர்|| (வாழ்நாள்சாதனையாளர்) விருது

 14.12.2014 இல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை அரசின் ~~கலாபூஷணம்|| விருது.

 ~~சிவ சம்பாஷகர்|| – வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் – 04.05.2019

  ~~ஞான ஏந்தல்|| – வலிகாமம் தெற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை – 2019

  யாழ்முத்து|| – யாழ் மாவட்ட கலை, கலாசாரப் பேரவை – 2021

 பல ஆலயங்களில் சாதகாசாரியாராகக் கலந்துகொண்டு கும்பாபிஷேகங்களை நிகழ்த்தி வைத்தமையால் விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுக்கொண்டமை.

 ~~சர்வசாதக கலாபூஷணம்|| – சாவகச்சேரி கல்வயல் பெருங்குளம் ஸ்ரீ அம்பலவாண வீரகத்தி    விநாயகர் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் – 25.06.2004

 ~~சாதக சிரோமணி|| – பிரான்பற்று, ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம்      06. 2004

~~சர்வசாதக சாகரம்|| – இளவாலை, மாரீசன்கூடல் ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் – 20.03.2005

 ~~வேதாகம பூஷணம்|| – நெல்லியடி தடங்கன் புளியடி ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான        மஹாகும்பாபிஷேகம் – 25.03.2005

 ~~சர்வசாதக சிம்மம்|| – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்மஹாகும்பாபிஷேகம் -13.07.2005

~~சர்வசாதக திலகம்|| – கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மஹாகணபதிப் பிள்ளையார்   தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் – 09.07.2008

 ~~சாதக சாகரம்|| – சிறுப்பிட்டி வடக்கு, ஞானவைரவர் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் – 09.07.2009

 ~~சர்வசாதகாசார்ய ரத்னா|| – ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியர் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் – 27.10.2010

 ~~சாதக ஜோதி|| – கோப்பாய், இருபாலை கிழக்கு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தான 

 மஹாகும்பாபிஷேகம் – 07.11.2011

 ~~சிவாகம சேகரர்|| – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் – 29.01.2012

 வேதாகம வித்வநிதி|| – ஏழாலை, சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான    மஹாகும்பாபிஷேகம் – 29.05.2013

 ~~சாதகச் சுடர்|| – புத்தூர் கிழக்கு, கன்னியர் வைரவர் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம்– 03.06.2013

 ~~சிவாகமரத்தினம்|| – ஏழாலை புதுக்கிணற்றடி சித்திவிநாயகர்கும்பாபிஷேகம் – 2015

 ~~மந்த்ர மஹோததி|| – சாவகச்சேரி, கற்குழி கந்தசுவாமி கோவில்கும்பாபிஷேகம் – 27.08.2015

குகநெறிச் செம்மல்|| – காரைநகர், கருங்காலி முருகமூர்த்தி கோவில் மஹாகும்பாபிஷேகம் –  

 09.04.2017சிவநிதி|| – பண்ணாகம் விசுவத்தனை முருகமூர்த்தி கோவில்மஹாகும்பாபிஷேகம் 14.09.2018 விக்னேஸ்வர கிரியா சிரோமணி|| – மட்டக்களப்பு கல்லடி உப்போடை விநாயகர் ஆலயம்    மஹாகும்பாபிஷேகம் – 30.01.2020 ~சிவாகம கிரியாரத்தினம்|| – நாயன்மார்கட்டு எருமேலி தர்ம சாஸ்தா தேவஸ்தானம் – மகரஜோதிப் பெருவிழா – 2020 ~~சிவ கைங்கர்ய துரந்தரர்|| – திருகோணமலை சிவன் தேவஸ்தானம்மஹாகும்பாபிஷேகம் –    27.01.2022~~கிரியா ப்ரவர்த்தகர்|| – இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் மஹாகும்பாபிஷேகம்  –    06.02.2022

  கோப்பாய் சிவம் – நூல் வெளியீடுகள்

 1. கனவுப்பூக்கள்சகோதரி சௌமினியுடன் இணைந்து கவிதைகள் மார்ச் 1975 சிவகவி பிரசுராலய வெளியீடுகண்ணன் அச்சகம், நல்லூர்.  
 1. அன்னை பராசக்திசக்தி மகிமையும் கீர்த்தனைகளும், 1978 வடகோவைக் கலாமன்ற  வெளியீடு   நிரஞ்ஜனா அச்சகம், நல்லூர்.
 1. நியாயமான போராட்டங்கள் (ரூ.5,000ஃஸ்ரீ பரிசுபெற்றது) –சிறுகதைகள் ஜுன் 1985 சர்வசக்தி அச்சகம், குருகுலம், கிளிநொச்சி.
 1. இலங்கையில் தமிழ்ப்பத்திரிகைகளும் சஞ்சிகைகளும்ஆய்வும் தொகுப்பும் ஜுன் 1985  சர்வசக்தி அச்சகம், குருகுலம், கிளிநொச்சி.
 1. வெள்ளோட்டம் (பாராட்டுப் பரிசு பெற்றது) –இரு குறுநாவல்கள் மார்ச் 1986 யாழ். இலக்கிய வட்ட வெளியீடு சர்வசக்தி அச்சகம், குருகுலம், கிளிநொச்சி.
 1. சைவநற்சிந்தனைவானொலியில் ஒலித்தவை – 1986 கிளிநொச்சி திருநெறிக்கழக வெளியீடு  – திருமகள் அழுத்தகம், சுன்னாகம். மறுபதிப்புசர்வானந்தமயபீட வெளியீடுமீனாட்சி அச்சகம், நல்லூர்     2006
 1. சைவாலயக்கிரியைகள்சமயம் திருமகள் அழுத்தகம், சுன்னாகம் 1986
 2. சைவாலயங்கள் கிரியைகள்ஒரு கையேடு ஓகஸ்ட் 1986 ரெலிகுளோப் ஸ்தாபன வெளியீடுதிருமகள் அழுத்தகம், சுன்னாகம்.        
 1. சைவ விரதங்கள்ஓர் அறிமுகம்சமயம் வேல் அழகன் பதிப்பகம், பளை. 1987 
 2. சைவ விரதங்களும் விழாக்களும்சமயம், ஒக்டோபர் 1988

     2ஆம் பதிப்பு ஸ்ரீலங்கா புத்தகசாலை, ஸ்ரீலங்கா அச்சகம்-2005

     3ஆம் பதிப்பு சர்வானந்தமய பீடம், ஒக்டோபர் 2013  

 1. பஞ்சா~ரம்..சர்மாவின் வாழ்வும் பணியும்அவரது 70ஆவது வயது செப் 1987 யாழ்  இலக்கியவட்ட வெளியீடு   திருக்கணித அச்சகம், மட்டுவில்.      
 1. பூந்தோட்டம்சிறுவர் பாடல்கள் திருக்கணித அச்சகம், மட்டுவில். மே 1988
 2. நொடியும் விடையும் பாகம் 1 – விடுகதைத் தொகுப்பு 1989

14.நொடியும் விடையும்    பாகம்     2   – விடுகதைத் தொகுப்பு    1989

15.நொடியும் விடையும்    பாகம்     3   – விடுகதைத் தொகுப்பு    1991

16.நொடியும் விடையும்    பாகம்     4   – விடுகதைத் தொகுப்பு    1992

 1. ரோஜாப்பூசிறுவர் பாடல்கள் மீனாட்சி அச்சகம், நல்லூர் செப்டம்பர் 1992
 2. பொறுக்கிய முத்துக்கள்பொன்மொழித் தொகுப்பு மீனாட்சி அச்சகம், நல்லூர், 1993
 3. என்னாலும் பேசமுடியும்சிறுவர்க்கான மேடைப் பேச்சுக்கள் 1993 திருக்கணித அச்சகம்   மட்டுவில்                     
 1. தகவல் வங்கி பொதுஅறிவு கலையகம் கல்விநிலைய ஆண்டுநிறைவு 1997 மீனாட்சி அச்சகம், நல்லூர்                   
 1. விவாசோபனம்வைதிக விவாகக்கிரியை விளக்கம், இசைக்கலைமணி அமரர் ஸ்ரீமத  தாஷ்யணி ஞாபகார்த்த வெளியீடுகார்த்திகேயன் பிறின்டேர்ஸ், கொழும்பு 02.06.1998
 1. அக்னிகார்யம்ஓர் அறிமுகம்சிவாசார்ய மாணவர் கையேடு – 1 16.07.2000  

   சர்வானந்தமயபீட வெளியீடு

 1. யாகமண்டப பூஜைஓர் அறிமுகம்சிவாசார்ய மாணவர் கையேடு – 1 16.07.2000

   சர்வானந்தமயபீட வெளியீடு 

 1. ஏன்? எதற்கு? எப்படி? –விநாயக விரதம்சமயம் நவம்பர் 2000
 2. ஏன்? எதற்கு? எப்படி? – ஸ்கந்தச~;டி விரதம்சமயம் 22.10.2000
 3. சம்ஸ்கிருத ஸ்வபோதினிதேவநாகரிபாடநூல் ஜனவரி 2001         
 4. ~ரபோதினிபண்டிதர் ..சர்மாவின் புதுமுறை சம்ஸ்கிருத பாடநூல்கிரந்தம்,நாகரம் 11.04.2001 பதிப்பாசிரியர் கோப்பாய் சிவம்
 1. மறுமலர்ச்சி கண்ட மாணிக்கம்..சர்மாவின்பணிகள்பற்றிய பல்கலைக்கழக ஆய்வு 11.04.2001 பதிப்பாசிரியர் கோப்பாய் சிவம் (ஆய்வாளர் செல்வி செல்வராணி வேலுப்பிள்ளை)
 1. இந்துநாகரிகம், இந்துசமயம் யுஃடு வினாவிடை பாகம்1 மார்ச் 2001
 2. இந்துநாகரிகம், இந்துசமயம் யுஃடு வினாவிடை பாகம்2 ஜுலை 2001
 3. கும்பாபிN~ திரவிய சூடாமணிஆலயக் கிரியைகளுக்கான பொருட்களின் பட்டியல சர்வானந்தமய பீடம் முதலாம் பதிப்பு    செப்டம்பர் 2001   இரண்டாம் பதிப்பு    ஒக்டோபர் 2005             மூன்றாம் பதிப்பு   ஜுலை 2009             நான்காம் பதிப்பு   2012          
 1. ஆற்றல் பல நல்கும் ஆஞ்சனேயர்சமயம் 08.01.2001, மருதனார்மடம் ஆஞ்ஜனேயர் கோவில் லட்சார்ச்சனை வெளியீடு
 1.  பெருமாள் பெருமைவைஷ்ணவ சமய, தத்துவ, வழிபாட்டு விளக்கங்கள் 14.01.2003  வெளியீடு சிவஸ்ரீ ஸ்ரீவத்ஸ.. இராஜேஸ்வரக் குருக்கள், பெருமாள் கோவில், யாழ்ப்பாணம்.
 1. மனன மஞ்ஜரிநினைவில் கொள்ளவேண்டிய ஆகம சுலோகங்கள் அமரர் செல்லப்பாக்  குருக்கள் ஞாபகார்த்த வெளியீடு 2004, உயரப்புலம் கு. அரவிந்திர சர்மா உபநயன வெளியீடு  
 1. சர்வானந்தமயபீட வெளியீடு, ஜுலை 2007
 2. தார்மீகக் கோபங்கள்சிறுகதைகள் 16.05.2004  இணுவில் கலை இலக்கிய வட்ட வெளியீடு  மீனாட்சி அச்சகம், நல்லூர்.
 1. அருள் வழங்கும் மாரியம்மன்சமயம்பல்கலைக்கழக கலைப்பட்ட ஆய்வு ஜுலை 2004சர்வானந்தமய பீட வெளியீடு, சிவரஞ்சனம் அச்சகம், கோண்டாவில். மறுபதிப்பு 2007                   
 1. இதுதான் இந்துமதம்சமயக் கட்டுரைகள் 09.07.2004 மறுபதிப்பு, தமிழ்நாடு மணிமேகலைப  பிரசுரம் 2006    
 1. பஞ்சா~ தீபம்தொகுப்பு கோப்பாய் சிவம் 12.10.200- மறுமலர்ச்சி எழுத்தாளர் பண்டிதர் . பஞ்சாட்சரசர்மாவின் வாழ்வும் பணியும் அவரது வரு~hப்திக வெளியீடு. சிவரஞ்சனம் அச்சகம்கோண்டாவில்.       
 1. நமது இந்து சமயம்புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கானது 12.10.2006  நோர்வே இந்து கலாச்சார மன்ற வெளியீடுஒஸ்லோ
 1. கிரியாகாலத் திருமுறைகள் – (தொகுப்பாசிரியர்) 11.04.2006 நீர்வேலி, வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தான வெளியீடு. அமரர் சிவஸ்ரீ ஆபதோத்தாரணக் குருக்கள் ஞாபகார்த்த  வெளியீடு
 1. ~ரானந்தம்மொழிசார் கட்டுரைகள் தொகுப்பு கோப்பாய் சிவம் – 2007 புத்தூர் ஸ்ரீ  சோமாஸ்கந்தக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்   பண்டிதர் . பஞ்சாட்சரசர்மா மற்றும் பழைய மாணவர் . சிவானந்தசர்மா (கோப்பாய் சிவம்)     எழுதிய கட்டுரைகள் கல்லூரித் தமிழ் மன்ற வெளியீடுசிவரஞ்சனம் அச்சகம், கோண்டாவில்.
 1. கண்ணகைஅம்மன் அஷ்டோத்தரசதம்சம்ஸ்கிருதத்தில் புதிதாக இயற்றப்பட்டது சர்வானந்தமய பீட வெளியீடு – 13.10.2007
 1. வளரும் சிறுவர்க்கு வாழும் இந்து சமயம் பாகம் 1 செப் 20072ஆம் பதிப்புஸ்ரீலங்காபுத்தகசாலை வெளியீடு         2013
 1. வளரும் சிறுவர்க்கு வாழும் இந்து சமயம் பாகம் 2 ஜனவரி 2008 2ஆம் பதிப்புஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு         2013
 1. நவக்கிரக மஞ்ஜரிநவக்கிரகங்கள் பற்றிய தகவல் தொகுப்பு (களஞ்சியம்)பெப்ரவரி 2008 லண்டன் சிவஸ்ரீ இராமநாதக்குருக்கள் மணிவிழா வெளியீடு, மறுபதிப்புசர்வானந்தமய பீடம்   மார்ச் 2008            
 1. மஹாகும்பாபிN~ கிரியா விளக்கம்இணுவில் அண்ணா தொழிலக வெளியீடு 01. 02. 2009 இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகச் சிறப்பு வெளியீடு.
 1. துக்க நிவாரணிதுர்க்கையின் சிறப்புக்களும் மந்திரங்களும் சாவகச்சேரி, நுணாவில் துர்க்கையம்மன் தேவஸ்தான ஆதீன கர்த்தர்  அமரர் பிரம்மஸ்ரீ . மகாகணபதி சர்மா   ஞாபகார்த்த வெளியீடு 21.03.2009
 1. விவாஹ சோபனப் பாடல்கள் ஏப்ரல் 2009 சிவரஞ்சனம் அச்சகம், கோண்டாவில்.
 2. துக்கம் துடைக்கும் துர்க்காதேவி ஏப்ரல் 2009
 3. பத்திரகாளி அம்பா சமேத வீரபத்திரர் மான்மியம் 16.05.201 உரும்பிராய் அமரர் சின்னத்தம்ப  காங்கேஸ்வரன் ஞாபகார்த்த வெளியீடு மறுபதிப்புவீரகாவலர் வீரபத்திரரும் பத்திரம் நல்கும்  பத்திரகாளியும். 2011  சர்வானந்தமய பீடம்சிவரஞ்சனம் அச்சகம், கோண்டாவில்.
 1. மந்திரங்கள் கூறும் மறைபொருள் விளக்கங்கள் 14.04.2010 சர்வானந்தமய பீடம்,சிவரஞ்சனம் அச்சகம், கோண்டாவில்.
 1. சைவக் கோயில்களும் மனித உடலும்வியத்தகு உண்மைகள் 2010 இந்திய ரூ 55.00மணிமேகலைப் பிரசுரம.; மறுபதிப்பு சர்வானந்தமய பீடம் 1.1.2013
 1. முத்ராலட்சண விளக்கம் 19.02.2010 அல்வாய், மாலைசந்தை, அமரர் பிரம்மஸ்ரீ தேவ.இரவீந்திரசர்மா வருஷாப்திக வெளியீடு. மறுபதிப்புசர்வானந்தமய பீடம் – 08.03.2010  
 1. சந்தோஷிமாதா விரதம் 18.08.2011அமரர் சண்முகசுந்தரக் குருக்கள் சபாநாதசர்மா ஞாபகார்த்த வெளியீடு. மறுபதிப்புசர்வானந்தமயபீட வெளியீடு, சிவரஞ்சனம் அச்சகம் – 01.09.2011
 1. விவாஹ மங்கள கிரியா பத்ததி 14.08.2011. மறவன்புலம் பிரம்மஸ்ரீ சிவசுப்பிரமணிய ஐயர்ஸ்ரீமதி பரமேஸ்வரி அம்மா தம்பதிகளின் சதாபிஷேக வெளியீடு. மறுபதிப்பு    சர்வானந்தமய   பீடம் 01.09.2011         
 1. ஆலய அமைப்பு….. ஆண்டவன் இருப்பு…… அருட்சிறப்பு 11.09.2012. சிவலிங்கப்புளியடி அமரர்  சண்முகராஜக்குருக்கள் பாலச்சந்திரசர்மா ஞாபகார்த்த வெளியீடு. 2ஆம் பதிப்புசர்வானந்தமய   பீடம்  – சிவரஞ்சனம் அச்சகம்   ஒக்டோபர் 2012 
 1. காப்பதில் வல்ல கருட பகவான் சங்கானை அமரர் ஸ்ரீமதி சத்தியபாமா சோமசுந்தரக் குருக்கள்  ஞாபகார்த்த வெளியீடு 2012. 2ஆம் பதிப்பு  – சர்வானந்தமயபீடம் 10.09.2012            
 1. ஆன்மீக மங்கலம் அறுபது 28.07.2012. நவாலி சிவஸ்ரீ சோம. நிர்மலேஸ்வரக்குருக்கள், ஸ்ரீமதி ராஜேஸ்வரி தம்பதிகளின் ஷஷ்ஸஸ்டியப்த பூர்த்தி வெளியீடுகஜானந்த் பிறின்டேர்ஸ், இணுவில்மறுபதிப்புசர்வானந்தமய பீடம் 01.10.2012 
 1. முன்னோர் கடமையும் முத்தல யாத்திரையும் – 04.09.2012. (பிதிர்க்கடன் மற்றும் காசியாத்திரை பற்றியது) சுன்னாகம், மயிலணி பிரம்மஸ்ரீ கா. வைத்தியநாத ஐயர் வருஷாப்திக   வெளியீடு. மறுபதிப்புசர்வானந்தமய பீடம்  – கஜானந்த் பிறின்டேர்ஸ்   ஒக்டோபர் 2012
 1. வரலஷ்மி விரதம்விரத முறையும் பூஜையும் 27.07.2012   
 2. லலிதா சஹஸ்ரநாமம்தமிழில்கருத்து விளக்கத்துடன் வவுனிய சிவஸ்ரீ முத்து. ஜெயந்திநாதக் குருக்கள் ஸ்ரீமதி ஜெயகௌரி தம்பதிகளின் ஷஷ்ஸஸ்டியப்தபூர்த்தி வெளியீடு     01.07.2013. மறுபதிப்புசர்வானந்தமய பீடம் ஓகஸ்ட் 2013            
 1. மறுமலர்ச்சி தந்த பஞ்சா~ரம்வாழ்வும் வளமும். தொகுப்பு நூல் 19.10.2013 சர்வானந்தமய பீட வெளியீடுஅமரர் . . சர.மாவின் பத்தாவதாண்டு நினைவு மலர்
 1. நலம் பல நல்கும் நாராயணன்hவிஷ்ணு மகிமையும், வழிபாட்டு முறைகளும். 19.10.2013சர்வானந்தமயபீட வெளியீடுஷாம்பவி அச்சகம், யாழ்ப்பாணம்.       
 1. சிவானந்த விஜயம்இந்துவாக வாழ்வோம்இந்து சமயக் களஞ்சியம். 05.01.2014 பிரம்மஸ்ரீ . சிவானந்தசர்மா(கோப்பாய் சிவம்) ஸ்ரீமதி விஜயல~;மி தம்பதிகளின் ஷஷ்டியப்தபூர்த்தி   வெளியீடு  – கஜானந்த் பிறின்டேர்ஸ், இணுவில்.
 1. அக்னிகார்ய விளக்கம். 26.03.2014 அவுஸ்திரேலியா, சிட்னி, செல்வன் சங்கர் சர்மா குருவியாம்  சர்மா உபநயன வெளியீடு. நீர்வேலி பிரம்மஸ்ரீ இரங்கசாமி ஐயர்பரசக்தி தம்பதிகளின்   சதாபிஷே வெளியீடு 17.04.2014. சர்வானந்தமயபீடம்மறுபதிப்புஏப்ரல் 2014         
 1. வைரவர் நாமார்ச்சனா மஞ்ஜரி 21.04.2014 (இதில் த்ரிசதி நாமாக்கள் புதிதாக இயற்றப்பட்டவை  வல்வெட்டித்துறை அமரர் சிவஸ்ரீ . செல்வக்குமாரக் குருக்கள் வருஷாப்திக வெளியீடுமறுபதிப்புசர்வானந்தமய பீடம்    மே 2014
 1. அம்பிகையின் அருள்வடிவங்கள் 01.06.2014. திருமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்  பிரம்மஸ்ரீ . கைலாச சங்கர் சர்மா சிவாசார்ய அபிஷேகச் சிறப்பு வெளியீடு.மறுபதிப்பு சர்வானந்தமய பீடம் ஜுன் 2014      
 1. எங்கள் பெயரால் இறைவன்முன் என்ன சொல்கிறார் சிவாசாரியர்? 23.07.2014 ஆவரங்கால், அமரர் ஸ்ரீமதி வடராஜக் குருக்கள் விஜயலட்சுமி வரு~hப்திக வெளியீடு.     மறுபதிப்புசர்வானந்தமய பீடம் ஓகஸ்ட் 2014  
 1. வாழ்க்கையில்; ஜோதிஷம் – 28.09.2014 இணுவில் அமரர் சிவஸ்ரீ இராம. சத்தியமூர்த்திக் குருக்கள்  வருஷாப்திக வெளியீடு. மறுபதிப்புசர்வானந்தமய பீடம்
 1. யாகமண்டப பூஜாவிளக்கங்கள் 2014
 2. மாந்தர் மாண்பு 2014
 3. சண்முக கதம்பம்முருகன் பற்றிய தகவல் களஞ்சியம். 03.2015. மலேஷியா, சிவஸ்ரீகிருபாகரக் குருக்கள்ரோஷிணி தம்பதிகளின் திருமண வெள்ளிவிழா சிறப்பு வெளியீடு.
 1. ஆவரங்கால் சிவன்பேரில் இசைப்பாடல்கள் 05.2015 மேற்படி ஆலய தெற்கு ராஜகோபுர கும்பாபிஷே சிறப்பு வெளியீடு.
 1. தினசரி வாழ்க்கையில் தெய்வீக மந்திரங்கள் 31.07.2015 சர்வானந்தமயபீட பதினைந்தாவது

   ஆண்டு நிறைவுச் சிறப்பு வெளியீடு.

 1. வைதிக சைவ ஆத்மார்த்த பூஜா கல்பம் டிசம்பர் 2015
 2. கற்பக நாதம் டிசம்பர் 2015
 3. ஆத்மபலம் அருளும் ஐயப்ப சுவாமி டிசம்பர் 2015
 4. இல்லற மங்கலம் ஜனவரி 2016
 5. வழிபாடும் பிரார்த்தனையும் ஜனவரி 2016
 6. ஸ்கந்த கடா~ம் மார்ச் 2016
 7. குருகுல பாடமாலா 2017
 8. பிரயோக சம்ஸ்கிருதம் 2017
 9. பரானந்தம் 2018
 10. சிவாகம ப்ரமாண சங்கிரகம் 2019
 11. ஸ்கந்த சப்தசதி 2020
 12. சண்முகார்ச்சனை 2020
 13. ஷோடச கணபதி ஹோமம் 2020
 14. சம்ஸ்கிருத ஸ்வபோதினி 2022
 15. புகழ்பூத்த பூசுரர்கள் 2022
 16. ஸ்கந்தமூர்த்திசுப்பிரமணிய நாமார்ச்சனைகள் மொழிபெயர்ப்பு 2022

     பத்திரிகைத்துறை, மலர் வெளியீடு முதலியன

 1. புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரித் தமிழ்மன்ற வெளியீடு புதுவை யின் ஆசிரியர் குழு உறுப்பினர்       1973 
 1. ஈழநாடு நிருபர் 1974
 2. செங்கதிர் அறிவியல் ஏட்டின் உதவி ஆசிரியர் 1974
 3. கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக் கழக வெளியீடாகியஅருவி, பேரருவி ஆகியவற்றின் ஆசிரியர் குழு உறுப்பினர்              1984,85

     5.அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் கும்பாபிN~ மலர் ஆசிரியர்     1986    

 1. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் கும்பாபிN~ மலர் ஆசிரியர் 1988 
 2. ஆவரங்கால் சிவன் கோவில் தேர் வெள்ளோட்ட மலர் 1995
 3. புத்தூர் கிழக்கு தேரம்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர் ஆசிரியர் 2003
 4. சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக மலர் ஆசிரியர் 2004
 5. புத்தூர் காரைக்கூடல் வைரவர் கோவில் கும்பாபிஷேக மலராசிரியர்.
 6. நீர்வேலி வாய்க்காற்றரவை விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலராசிரியர். 2008
 7. பாலகுமாரம்சுழிபுரம், பறாளாய் சிவஸ்ரீ பாலகுருசாமிக் குருக்கள்  அமுதவிழா மலர்த் தொகுப்பாளர்      2010
 1. ராகா சாஸ்ரம்நீர்வேலி பிரம்மஸ்ரீ தி. நடனசபாபதி சர்மாஅமுதவிழாமலர்த் தொகுப்பாளர்.             2010
 1. புத்தூர் கிழக்கு, காளியானை ஞானவைரவர் ஆலய கும்பாபிN~ மலர் ஆசிரியர். 2010
 2. தென்மராட்சி, மறவன்புலவு, சேதுகாவலப் பிள்ளையார் கும்பாபிN~ மலர் ஆசிரியர். 2011
 3. தேவகுமாரம்இணுவில் சிவஸ்ரீ சி. குமாரராஜக் குருக்கள் பவளவிழா மலர்த் தொகுப்பாளர்.
 4. அம்பிகையின் அருட்கோலங்கள்புளியங்கூடல் மாரியம்மன் கோவில் அறங்காவலர்  ஞாபகார்த்த மலர் தொகுப்பாளர்.       2012 
 1. சுவிஸ், சூரிச் சிவன் கோவில் கும்பாபிN~ மலர்த்தொகுப்பாளர். 2014
 2. விவிதவித்யா காலாண்டுச் சஞ்சிகை ஆசிரியர் 2002 – 2005
 3. பாலவிஜயம்இளவாலை இராம. பாலச்சந்திரக்குருக்கள் ஷஷஸஸ்டியப்த பூர்த்தி மலர். 2022

 ஊஞ்சற் பாடல்கள்

 1. கோண்டாவில் வடக்கு அன்னுங்கை ஸ்ரீ சிவபூதவராயர் – 2000
 2. புத்தூர், மணற்பகுதி, ஆலடி முருகன் – 2001
 3. உடுப்பிட்டி வடக்கு, கம்பர்மலை பெரியதம்பிரான் – 2002
 4. புத்தூர், மணற்பகுதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் – 2003
 5. புத்தூர் கிழக்கு, குமாரசாமி வீதி, குருநாத சுவாமி – 2004
 6. புத்தூர், வாதரவத்தை கேதுவுப் பிள்ளையார் – 2005
 7. ஊவா மாகாணம், பண்டாரவளை, சேனநாயக்க மாவத்தைஅருள்மிகு பத்திரகாளியம்மன்        – 2005
 1. கைதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கும பர்வதவர்த்தனி      அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர்        – 2005
 1. புத்தூர், வாதரவத்தை வேலங்காட்டு இயமாவில் துர்க்கையம்மன் – 2007
 2. அனலைதீவு மேற்கு, சீத்தாசல்லிஅருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ hவிஷ்ணு           – 2008
 1. தென்கோவைமாந்தோப்பு ஸ்ரீ hமாரி அம்மன் – 2008
 2. கண்டி, புசல்லாவ, புதிய மெல்போட் தோட்டம் ஸ்ரீ முத்துமாரி அம்பிகை – 2008
 3. ஹங்வல்ல தோட்டம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் – 2008
 4. நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் விசாலா~p அம்பாள் சமேத விஸ்வநாதப் பெருமான்              – 2008
 5. இளவாலை, கல்லூரி வீதி பேச்சியம்மன் – 2010
 6. நீர்வேலி தெற்கு ஸ்ரீ வீரபத்ர சுவாமி – 2011
 7. தென்மராட்சிமறவன்புலோ சேதுகாவலப் பிள்ளையார் – 2011
 8. புத்தூர் கிழக்கு, மீசாலை வீதி, திருவருள்மிகு கருகப்பை ஈஸ்வரன் (அண்ணமார்)என அழைக்கப்படும் ஜெகதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர்            – 2012
 1. இளவாலை, மாவடி ஞானவைரவர் – 2013
 2. நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும்  வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமான்                   – 2014
 1. புன்னாலைக்கட்டுவன், கடவத்துறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் – 2014
 2. வேலம்பிராய் கண்ணகி அம்மன்
 3. பலாலி காளி
 4. சுவிஸ் இராஜராஜேஸ்வரி அம்மன்
 5. சுவிஸ் சூரிச் சிவன்
 6. கோப்பாய் தெற்கு மாந்தோப்பு மாரியம்மன்
 7. கோப்பாய் பாலகதிர்காம வேலர்
 8. இளவாலை மணிகண்ட ஐயப்பன்
 9. புத்தூர் குளக்கட்டு பிள்ளையார்
 10. சங்கத்தானை இராக்காச்சி அம்மன்
 11. கொக்குவில் காட்டுப்புலம் முருகன் கோவில்

 ஆலயங்களின் பாடல்கள் (இறுவட்டு மற்றும் நேரில் பாடியவை)

 1. ஆவரங்கால் சிவன் தேவஸ்தானம்
 2. ஜெர்மனி ஹம் காமாட்சி அம்மன் தேவஸ்தானம்
 3. புத்தூர் புவனேஸ்வரி அம்மன் கோவில்
 4. கனடா ரொறன்டோ கந்தசுவாமி கோவில்
 5. மலேஷியா ராஜமாரி அம்மன் கோவில்
 6. இணுவில் கந்தசுவாமி கோவில்
 7. கண்டி கட்டுக்கலைப் பிள்ளையார் கோவில்
 8. நல்லூர் கந்தசுவாமி கோவில்
 9. நெதர்லாந்து முருகன் கோவில்
 10. திருமலை விஸ்வநாத சிவன்
 11. சுவிஸ்லுட்சேர்ண்எம்மென்புறூக்கே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்
 12. சுவிஸ் சூரிச் சிவன்கோவில்

 பாடசாலை மற்றும் நிறுவனங்களின் கீதங்கள்

 1. லண்டன் பூபாள ராகங்கள்
 2. கூட்டுறவு நிறுவனம்
 3. யாழ். மத்திய கல்லூரி பரிசளிப்பு நிகழ்வு – 3 வருடங்கள்
 4. கோப்பாய் பிரதேச சபை கீதம்
 5. உடுவில் பிரதேச சபை கீதம்
 6. நீர்வேலி . . . பாடசாலை
 7. வடமராட்சி தட்டெழுத்தாளர் சங்கம்
 8. கோப்பாய் அரிமாக்கழகம்நீத்தார் பெருமை
 9. மட்டக்களப்பு ஸ்ரீ ருத்ர யாகம்
 10. மானிப்பாய் பாரதி கலாமன்ற கீதம்

சம்ஸ்கிருதத்தில் இயற்றிய ஸ்தோத்திரங்களும், கீர்த்தனைகளும்

 1. திருமலை சிவன்
 2. வாரிவளவு கற்பக விநாயகர் துதி
 3. வாரிவளவு கற்பக விநாயகர் குருகுல கீதம்
 4. சர்வதேச இந்துமத குருமார் ஒன்றிய கீதம்
 5. கந்தர்மடம் நா. பாலசுப்பிரமணியக்குருக்கள் ஞாபகார்த்த குருகுல கீதம்
 6. கண்டி, கட்டுக்கலைப்பிள்ளையார்சிவன் துதி
 7. மலேஷியா ராஜமாரி அம்மன் துதி
 8. கந்தர்மடம் வசந்த நாகபூ~ணி அம்மன் துதி
 9. சுதுமலை சிவன் துதி
 10. மட்டக்களப்பு ஸ்ரீ ருத்ர யாகம்
 11. மலேஷியா ஜோகூர்பாரு ஸ்ரீ தண்டபாணி துதி
 12. நல்லூர் ஸ்ரீ விஜயவிநாயகர் துதி
 13. மயிலம்பாவெளி காமாட்சி துதி
 14. பொன்னாலை வரதராஜப் பெருமாள் துதி

 கோப்பாய் சிவம் பதிப்பித்து வெளியிட்ட நூல்கள் (சர்வானந்தமய பீடம், ஸ்ரீவித்யா அச்சகம்)

சம்ஸ்கிருதம்கிரந்தம்

 ஆன்மார்த்தக் கிரியா பத்ததிகளும் வழிபாட்டு நூல்களும்

 1. சந்தியாவந்தனம்தமிழ் விளக்கங்களுடன்
 2. ஆத்மார்த்த சிவபூஜா பத்ததி
 3. தினசரி வாழ்க்கையில் தெய்வீக மந்திரங்கள் (ஆத்மார்த்த நித்ய பாராயண ஸ்தோத்திர மஞ்ஜரி)
 4. சிவாச்சார்யாபிஷேக தீ~h பத்ததிதமிழ் விளக்கங்களுடன்
 5. வைதிக சைவ ஆத்மார்த்த பூஜா கல்பம்

 பாடநூல் வரிசை

 1. ~ரபோதினி
 2. கிரந்தா~ மாலா
 3. மனன மஞ்ஜரி
 4. விவிக்த பதாவலி
 5. கிரந்தா~ போதினி
 6. குருகுல பாடமாலா
 7. ப்ரயோக சம்ஸ்கிருதம்
 8. சம்ஸ்கிருத ஸ்வபோதினி

 பரார்த்தக் கிரியா பத்ததிகள் 

 1. நித்ய பூஜா கிரியா மஞ்ஜரி
 2. கும்பாபிஷேக கிரியா மஞ்ஜரி
 3. பஞ்சகுண்ட பூஜா (பஞ்சமூர்த்தி) 17. நவகுண்ட பூஜா (பஞ்சமூர்த்தி)
 4. சதுர்மூர்த்தி சங்காபிஷேக பத்ததி
 5. சதுர்மூர்த்தி 108 கலச பூஜா
 6. சதுர்மூர்த்தி நவாக்னி ப்ரயோகம்
 7. 33குண்டபூஜாவிநாயகர்
 8. 33குண்டபூஜாசுப்பிரமணியர்
 9. 33குண்டபூஜாசிவன்
 10. 33குண்டபூஜாதேவி
 11. 33குண்டபூஜாபூர்வாங்கக் கிரியைகள்
 12. நவகண்ட ஸ்பர்ஸாகுதிசிவன், தேவி
 13. நவகண்ட ஸ்பர்ஸாகுதிவிநாயகர்
 14. நவகண்ட ஸ்பர்ஸாகுதிமுருகன்
 15. 17 குண்ட பூஜைவிநாயகர்
 16. 17 குண்ட பூஜைமுருகன்
 17. 25 குண்ட பூஜைவிநாயகர்
 18. விக்னேஸ்வர ஸ்பர்ஸாகுதி
 19. சுப்ரம்மண்ய ஸ்பர்ஸாகுதி
 20. சிவசக்தி ஸ்பர்ஸாகுதி
 21. N~த்ரபால ஸ்பர்ஸாகுதி
 22. பூர்வசந்தானம்

  நாமார்ச்சனைகள் (~;டோத்தரம், த்ரிசதி, சஹஸ்ரம்)

 1. விக்னேஸ்வர நாமார்ச்சனா மஞ்ஜரி      
 2. சுப்ரம்மண்ய நாமார்ச்சனா மஞ்ஜரி
 3. சிவ நாமார்ச்சனா மஞ்ஜரி
 4. ஸ்ரீ விஷ்ணு நாமார்ச்சனா மஞ்ஜரி
 5. தேவீ (லலிதா) நாமார்ச்சனா மஞ்ஜரி
 6. பைரவ நாமார்ச்சனா மஞ்ஜரி
 7. வீரபத்திர நாமார்ச்சனா மஞ்ஜரி
 8. மஹால~;மி நாமார்ச்சனா மஞ்ஜரி
 9. மஹாமாரி நாமார்ச்சனா மஞ்ஜரி
 10. மஹாசாஸ்தா நாமார்ச்சனா மஞ்ஜரி
 11. த்ரிசதி நாமார்ச்சனா மஞ்ஜரி
 12. சஹஸ்ரநாம மஞ்ஜரி
 13. அஷ்டோத்தரசதநாம மஞ்ஜரி
 14. சண்முக அஷ்டோத்தரசதம் ஆறு
 15. சிவபஞ்சமுக சஹஸ்ரநாமம்ஐந்து
 16. நவக்கிரக சஹஸ்ர நாமானி
 17. வேதசார சிவசஹஸ்ர நாமம்
 18. நந்திகேஸ்வர சஹஸ்ரநாமம்
 19. கண்ணகியம்மன் அஷ்டோத்தரசதநாம அர்ச்சனை  
 20. குமாரகணநாதாம்பா அர்ச்சனை
 21. ஸ்ரீ சுப்ரம்மண்ய சத்ரு சம்ஹார த்ரிசதீ நாமார்ச்சனை
 22. சோமாஸ்கந்த சஹஸ்ரநாமார்ச்சனா
 23. 59 சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வர சம்மேளன சகஸ்ர நாமார்ச்சனா
 1. அறுபத்து மூவர் தியானங்களும் நால்வர் ~;டோத்தரசதங்களும்
 2. நஹஸ்ரநாம ஸ்தோத்திரங்கள்விநாயகர், சுப்பிரமணியர்
 3. லலிதா சஹஸ்ரநாமம்தமிழ் எழுத்துக்களில்
 4. விநாயகர் சஹஸ்ரநாமம்தமிழ் விளக்கம்
 5. சுப்பிரமணியர் சஹஸ்ரநாமம்தமிழ் விளக்கம்
 6. சுப்பிரமணியர் திரிசதிகள்தமிழ் விளக்கம்
 7. மஹாவிஷ்ணுதசாவதார அஷ்டோத்தரங்கள்
 8. சண்முகார்ச்சனைபீஜா சஹித த்ரிசதி

 பிரதிடாவிதிகள்

 1. விக்னேஸ்வர பிரதி~;டாவிதி
 2. சிவ பிரதி~;டாவிதி
 3. சுப்ரமண்ய பிரதி~;டாவிதி
 4. தேவீ பிரதி~;டாவிதி
 5. பைரவப் பிரதி~;டாவிதி
 6. வீரபத்திர பிரதி~;டாவிதி
 7. பத்ரகாளி பிரதி~;டாவிதி
 8. மஹாசாஸ்தா பிரதி~;டாவிதி
 9. மஹாவிஷ்ணு பிரதி~;டாவிதி
 10. நவக்கிரக பிரதி~;டாவிதி
 11. ரத ப்ரதிஸ்டாவிதி, ஆத்யேஷ்டிகா, ஸ்தம்ப பிரதி~;டா, தடாக
 12. ஸ்ரீசக்ர பிரதி~;டாவிதி

மஹோற்சவம்

 1. ஸ்ரீ மஹோற்சவ பத்ததி
 2. தேவீ மஹோற்சவ பத்ததி
 3. கல்யாணோற்சவ பத்ததி
 4. வசந்தோற்சவ பத்ததி
 5. விக்னேஸ்வர மஹோற்சவ பத்ததி
 6. விஸ்வரூப தர்சனம், மாம்பழத் திருவிழா

 யாகமண்டப பூஜைகள்

 1. விக்னேஸ்வர யாகமண்டப பூஜா
 2. சிவ யாகமண்டப பூஜா
 3. சுப்ரம்மண்ய யாகமண்டப பூஜா
 4. தேவீ யாகமண்டப பூஜா
 5. N~த்ரபால யாகமண்டப பூஜா
 6. ~pணாமூர்த்தி யாகமண்டப பூஜா
 7. மஹாமாரீ யாகமண்டப பூஜா
 8. மஹால~;மீ யாகமண்டப பூஜா
 9. நாகராஜர் யாகமண்டப பூஜா
 10. சண்டேஸ்வர யாகமண்டப பூஜா
 11. மஹாவிஷ்ணு யாகமண்டப பூஜா
 12. வீரபத்திரர் யாகமண்டப பூஜா
 13. பத்ரகாளி யாகமண்டப பூஜா
 14. மஹாசாஸ்தா யாகமண்டப பூஜா
 15. ஆஞ்ஜனேயர் யாகமண்டப பூஜா

 ஏனையவை

 1. தீப பூஜா
 2. தேவீ உபசார பூஜா
 3. தேவீ விசேச ஹோம ப்ரயோகம்
 4. கணபதி ஹோமம்
 5. ஷோடச கணபதி ஹோமம்
 6. ஸ்கந்த ஹோமம்
 7. கிருஹ ப்ரவேச மங்கள நவக்ரஹ ஹோமம்
 8. யந்த்ர பூஜா மஞ்ஜரி
 9. மஹாசாஸ்தா யந்த்ர பூஜா
 10. ஆசீர்வாத மஞ்ஜரி
 11. மஹாகணபதி சதுராவ்ருத்தி தர்ப்பணம்
 12. ஸ்ரீவித்யா ஸ்ரீசூக்த பூஜாவிதி
 13. லகு ஸ்ரீசக்ர பூஜா
 14. ஸ்ரீவித்யா ஸ்ரீசக்ர பூஜா
 15. ஸ்தோத்திர மஞ்ஜரி
 16. ஸ்தோத்திர கதம்பம்தமிழ் எழுத்தில்
 17. நடேசர் ஸ்நபனம்
 18. கருடமஞ்ஜரி
 19. சாஸ்தா கல்ப பூஜா
 20. ஏகாதச ருத்ர ஹோமம்
 21. நவராத்ர பூஜா பத்ததி
 22. தியானாவளி
 23. ஞானசக்தி க்ரியாபத்ததி
 24. குமாரதந்த்ரம் (மஹோற்சவ விதிப் படலம் தமிழ்விளக்கத்துடன்.)
 25. பறாளாய் ஸ்தல ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி ஷண்முகாஷ்டகம்
 26. சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகை மீது அஷ்டகம்
 27. ஸ்ரீவத்ஸம்
 28. ~hர்ச்சனா ஹோம விதானம்
 29. பஞ்சவித அக்னிகார்யம்
 30. பஞ்சவித பூதசுத்தி
 31. சத்ருசம்ஹார த்ரிசதீ ஹோமம்
 32. சிவாகம மஞ்ஜரி
 33. கருடமஞ்ஜரி
 34. சகலாகம சங்கிரக மஹோற்சவ விதி
 35. தேவீ மஹாத்மியம்

வைதிகம்

 1. சுதர்சன ஹோமம்
 2. ஆயுஷ்ய ஹோமம்
 3. சந்தான பாக்ய ஹோம மஞ்ஜரி
 4. வைதிக ருதுசாந்தி
 5. உக்ரரத சாந்தி
 6. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி
 7. பீமரத சாந்தி
 8. சதாபிN~கம்
 9. உதகசாந்தி
 10. சௌளம், உபநயனம்
 11. உபாகர்மம்
 12. வைதிக ஆபஸ்தம்ப விவாஹ ப்ரயோகம்
 13. ரிக்வேதீய ஆபஸ்தம்ப உபநயனம்
 14. குமாரசூக்தம்
 15. ப்ரதிசர பந்தனம்
 16. வைதிக ஆபஸ்தம்ப பூர்வ ப்ரயோகம்

அபரக் கிரியைகள்

 1. அமாவாசை தர்ப்பணம்
 2. தனிஷ்டாபஞ்சக சாந்திவைதிகம்
 3. தனிஷ்டாபஞ்சக சாந்திசைவம்
 4. ஆபஸ்தம்ப சிராத்த ப்ரயோகம்
 5. தசாஹம்
 6. விருஷோத்ஸர்ஜனம்
 7. வைதீக ஆபஸ்தம்ப ஆத்ய மாசிக ஏகோத்திஷ்டம்
 8. சபிண்டீகரணம்
 9. அந்த்யேஷ்டி விதி
 10. திலஹோமம், சர்ப்ப சாந்தி
 11. தஹன சம்ஸ்காரம்
 12. தசாஹாதி சபீண்டீகரண ப்ரயோகம்
 13. 164. ஹிரண்ய சிராத்தம்                     

                                     

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!