Friday, May 3

பத்திரிகைப் பிரம்மர் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன்

0

அறிமுகம்

பல அவலங்கள் அழுத்தங்களின் மத்தியிலும் தாயக நேசிப்போடும் இனப்பற்றோடும் உயிரைப் பணயம் வைத்த நிலையிற் தமது எண்ணத்தாலும் எழுத்தாலும் அளப்பெரும் தொண்டாற்றிய ஓர் ஊடகர.; உதயன் இதழினூடு பத்திரிகைத்துiயில் ஏற்படக்கூடிய அத்தனை சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சலும் வேட்கையும் கொண்ட பத்திரிகையாளனாக கானமயில்நாதன்; அவர்கள் மேற்கிளம்புகின்றார்.

 சீர்மிகும் கலைகளாம் வடமோடி நாட்டுக் கூத்து. புரவி நடனம், அனுமார் ஆட்டம் முதலான கலைமிகு கிராமம். இலங்கைத் தேசிய கீதத்தை தமிழ்ப்படுத்திய முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பிப் புலவர் முதல் நாற்கவி புனையும் நற்றமிழ்ப் பண்டிதர்கள் வாழ்விடம். கந்தபுராணப் படலம் பாடும் பாரம்பரிய முறையும் கலைப்பிரம்மாக்கள். சிற்பாசாரியார் கள் சிறந்து விளங்கும் வட்டூர் எனும் வட்டுக்;கோட்டை. எட்டூர் போற்றும் வட்டூரில் நாட்டுக் கூத்து கலைஞர்களின் கால்களை தாளக்கட்டிற்கு ஆடவைக்கும் வித்தைக்காரர் மத்தள அண்ணாவியார் வல்லிபுரம் இணையாள் வள்ளியம்மை இல்லப்பயனாக ஆற்றல் ஆளுமையோடு 1942-07 கானமயில்நாதன் அவனியிலே பிறந்தார்.

ஆரம்பக் கல்வியினை நாவுக்கரசர் பெயர்கொண்ட வட்டு திருநாவுக்கரசு வித்தியாசாலையில்; பயின்று நாவன்மை மிகப் பெற்று பள்ளிவிழாக்களில் பேச்சாற்ற லால் தலைமை மாணாக்கனாகத் திகழ்ந்தார். 1952ஆம் ஆண்டு வரை வட்டு திருநாவுக்கரசிலும் பின்னர் உயர்தரக் கல்வியினை 1959ஆம் ஆண்டுவரை வட்டு இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

படிப்பாலும், பண்பாலும் பயிற்றுவித்த ஆசிரியர்களிடம் நன்மாணக்கராக மதிப்பு பெற்றிருந்தார். கற்பித்த ஆசிரியர் ஒருவர் பணிமாற்றம் பெற்று சுழிபுரம் விக்டோரியாக கல்லூரியில் பொறுப்பேற்;றபோது நன்மாணாக்கர் சிலரையும் தம்மோடு அழைத்துச் சென்றதாக அறிய முடிகிறது. அந்த நன்மாணாக்கரில் ஒருவரான கானமயில்நாதன் 1961இல் உயர்;தரக்கல்வி விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்தார்.

ஆனந்தசாகரம் மாத சஞ்சிகையில் 1958ஆண்டு இவரது முதலாவது கவிதை வெளியானது. அதன்பின்னர் கலைச்செல்வி. விவேகி, புதினம், வெள்ளி, குவலயம் முதலான சிற்றிதழ்களிலும் தினகரன், ஈழநாடு பத்திரிகைகளிலும் கவிதைகள் பிரசுரமாகின. சிறுவர் கவிதைகளும் அவற்றில் கணிசமாக இடம்பெற்ன. முதலாவது சிறுகதை விவேகியிலும் பின்னர் செந்தாமரை சஞ்சிகையிலும் சிந்தாமணி, ஈழநாடு பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஈழநாடு பத்திரிகையில் உருவகக் கதைகளை தொடராக எழுதினார்.

வட்டூர் கானம் என்ற புனைபெயருடனும் எம்.வீக்கேயன், மானா வானாக் காவன்னா, சுந்தரம் என்ற புனை பெயர்களிலும்; எழுதியுள்ள இவர் சிறுவயதிலே தந்தையார் வல்லிபுரம் இயற்கை எய்த குடும்பத்தை தாங்கும் பொறுப்பேற்றார். இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி – (கட்டுப்பெத்த) எந்திரவியல் பொறியியல் சான்றிதழ் பரீட்சையில் 1965இல் சித்திபெற்றுக்கொண்ட கல்வியை முடித்துக் கொண்டார்.

1962ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகை உலகில்பயிற்சி உதவி ஆசிரியனாக  பத்திரிகையாள னாகத் தனது பணியை ஆரம்பித்தார். இப்பத்திரிகையில் தொடர்ச்சியாக  நான்கு வருடங்கள் உதவி அசிரியராகக் கடமையாற்றி மிகுந்த அனுபவசாலியாக தன்னை வளர்த்துக் கொண்டார்.

 தந்தையார் வல்லிபுரம் சிறந்த மத்தள அண்ணாவியார் ஆவர். அவரது வீட்டு ஒற்றைப் பனை முற்றத்தில் நாட்டுக் கூத்து கலைஞர்கள் மத்தளக் கட்டிற்கு கூத்து பயில்வர். மகாபாரத கதையில் வரும் கர்ணன் எனும் பாத்திரம் ஏற் நாட்டக்கூத்த கலைஞராகி அவரே பாடி ஆடினார் என நாட்டுக் கூத்துக் கலைஞர் .சிவலிங்கம் அடிக்கடி கூறிப் பெருமை அடைவார்.

1966ஆம் ஆண்டு கொழும்புத் தினசரி தினபதி பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து அவரின் ஆற்றலால் 1969ஆம் ஆண்டில் பிரதம உதவி ஆசிரியரானார். 1977 இல் இருந்து 1983 வரை செய்தி ஆசிரியராக தினபதி, சிந்தாமணி ஆகிய பத்தரிகைகளில் பணியாற்றினார். இப் பத்திரிகை நிறுவனங்கள் மும்பொழிப் பத்திரிகை நிறுவனமாதலால் சிங்கள மொழிப் பத்திரிகை யாளர்களுடன் நல்லுறவைப் பேணி;வந்த இவரை. சிங்களப் பத்திரிகையாளர்கள் கானம் என்று உவகை பொங்க அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தமை மட்டுமல்லாது இவர் மிது விருப்பும் கொண்டிருந்தனர் என்பது உண்மை.

கொழும்பினை அப்போதைய வாழ்விடமாக கொண்டிருந்தபோதும், ஊரில் நடைபெம் வருடாந்த விளையாட்டுப் போட்டி கலைநிகழ்வு, திருவிழாக்களிற்கும் பல்வேறு சிரமங்களின் மத்திலும் தன்ஊர் வந்து சிறப்பிக்கும் பண்புடையவர். அவரின் வீட்டுக்கு முன்பாக கோயில் கொண்டருளும் மோதக மாமரப் பிள்ளையார் கோவிலில் ஆவணி சதுர்த்தி அன்று தந்தையார் நினைவாக கலைப்பெட்டகமாகிய மத்தளத்தில்எழுதும் கரங்கள் இசைக் கரங்களாகி தாளலயம் நிகழ்த்துவதும் இவரது கலை மீதான பற்றினை நாம் உணரமுடிகின்றது. வருடாந்த விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக வர்ணனை செய்து கலகலப்பாக்கி தனது குரலால் கேட்போரையும் பார்ப்போரையும் மிரள வைக்கும் கைவண்ணமடையவர்.

14.09.1977இல் இல்லற இணையாளாக சாரதாதேவி என்னும் பெருடை நங்கையை இல்லாளாக்கி மனையாளிற்கு நற் கணவனாய், அவர்தம் உடன்பிறப்புகளுடன் நற்சகலனாய்மைத்துனராய் உறவு பாராட்டி வாழ்ந்தார்.

1983இல் வீரகேசரியில் யாழ் செய்திச் சேவை பெறுப்பாளராகவும். 1985ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் யாழில் வெளியாகும் ஆங்கில வாரப்பத்திரியான சற்றரடே ரிவியூ (ளுயவரசனயல சுநஎநைற துயககயெ) பத்திரிகையிலும் பணியாற்றினார்.

 இதழ்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சில தடைகள் உள்ளன. அகத்தடை, புறத்தடை என இதழாளர்கள் வகுப்பர். பெரிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றுபவர்க்கு நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டையாக அமையும். இதழ்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உடமையானதாக இருக்குமானால் முதலாளிகளின் விருப்பப்படி தான் அவை செயற்பட முடியும். இத்தகைய காரணிகள் அவர் சுதந்திரமாகச் செயல்பட ஒரு தளத்தை தேடுவதற்கு முனையவைத்தது எனலாம்.

மும்மொழி ஆற்றலுடைய இவர் பத்திரிகைப் பணியுடன் பகுதி நேர மொழிபெயர்ப் பாளராகப் பணியாற்றினார். விஞ்ஞான கைதொழில் அமைச்சு, மக்கள் வங்கி (பொருளியல் நோக்கு), சதோச மற்றும் விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றிலும்வண பிதா திஸ்ஸ பாலசூரிய அவர்கள்  எழுதிய பல்தேசிய நாடுகள் குறித்த பிரபல நூல் மொழிபெயர்ப்பு  செய்தமையையும் இவரது மொழி ஆழுமைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

தனது ஊரை நேசித்தவன் தனது மொழியை நேசிப்பான். மொழியை நேசித்தவன.; நாட்டை நேசிப்பான் என்ற கொள்கையினைத் தாரக மந்திரமாகக் கொண்ட கானமயில்நாதன் அவர்கள் தனது ஊரின் மேல், நாட்டின்மேல் கொண்டபற்றின்பால் தனது கிராமத்திற்கும், நாட்டிற்கும் என்றும் பெருமதிப்பினைப் பெற்றுக் கொடுத்துள்ளார். பாடசாலையில் பயிலுங் காலத்தில் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்த ஐயா அவர்கள், தான் சார்ந்த மொழி மீதும் சமூகத்தின் மீதும் பற்றுக்கொண்டு செயலாற்றி வந்தார். இளைஞராக இருந்த காலங்களில் தமது கிராமத்தில் விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக அமரர் தீபதூபநாதபிள்ளை போhன்ற பலருடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தித் தானே பிரதான ஒலிபரப்பாளராகவும் திகழ்ந்து அனைவரினதும கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் சமூக அமைப்புகள் ஊடாக சமூகப் பணிகளையும் செய்து வந்தார்.

கானமயில்நாதனவர்கள் கலைத்துiயிலும் சளைத்தவரல்ல. இவருடைய தந்தையார் மருதப்பு வல்லிபுரம் அவர்கள் புகழ்பெற்ற மத்தள வித்துவான் ஆவர், ஆரம்ப காலங்களில் இவர்களின் இல்லத்திலே வடமோடி நாட்டுக்கூத்தினை கலைஞர்கள் ஆடிப்பழகியதாகவும், அதனைப் பார்த்த கானமயில்நாதன் அவர்கள் இயல், இசை, நாடகங்களில் நடித்ததாகவும் அத்துடன் வடமோடி நாட்டுக்கூத்து நாடகத்தில் கர்ணன் பாத்திரம் ஏற்று நடித்துப் பலராலும் பாராட்டப்பட்டதாக, அனுமான் மற்றும் கிருஷனர் பாத்திரம் ஏற்று நடித்து  வட்டூர்க் கிராமத்தில் அனுமான் அப்பா என்று அன்போடு அறியப்பட்ட மூத்த கலைஞர் .சிவலிங்கம் அவர்கள் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட்டூர்க் கிராமத்தின் மூத்த கலைஞர்கள் பலரோடு ஆரம்ப காலங்களில் தொடர்ந்து கூத்துக் கலையில் பல பாத்திரங்கள் ஏற்று நடித்து பல இரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த கானமயில்நாதன் அவர்கள் கலைஞனாகவும், வீரனாகவும், மக்கள் தொண்டனாகவும் சொந்தங்களின் இன்ப துன்பங்களில் உற்ற நண்பனாகவும் ஆலய வேலைகளில் பக்தனாகவும் என பலவற்றில் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.

தமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை, நாம் சார்ந்த தமிழ்ச் சமூகத்திற்கும், பத்திரிகைப் பணிக்கும், தமிழ் மொழிக்கும் கலை, இலக்கியத்தி;ற்கும் செலவிட்டுவந்த  கானமயில்நாதன் அவர்கள் மக்களில் நலன் ஓங்கவும் மாண்பு சிறக்கவும் இடையறாது முயன்று வந்தார்.

எந்த மக்களுக்காக எழுதுகோலை எடுத்தாரோ அந்த மக்களால் மிக நன்றாகவே நன்றியுடன் மதிக்கப்பட்டார். நேசிக்கப்பட்டார், அத்துடன் சர்வதேச அளவிலும் pயப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கானமயில்நாதன் அவர்களுடைய எழுத்தாற்றல் மகத்தானது. சிக்கலான அரசியல் சமூகப்பிரச்சினைகளை மிக எளிய நடையில் தௌ;ளு தமிழில் பாமரரும் புரியும் வகையில் ஆராய்ந்து எழுதுவது அவரின் பண்பு. அவரது எழுதுகோல் எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு என்றுமே இடம் கொடுத்தது கிடையாது.

 சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

  கோடாமை சான்றோர்க் கணி

 என்ற குளுக்கமைய நடுவு நிலையில் இருந்து விமர்சிக்கும் சிறப்பத் தன்மை அவருக்குண்டு. அத்தோடு இளம் பத்திரிகையாளர்களுக்கு வழி காட்டியாகவும், உந்துசக்தியாகவும் விளங்கினார்.

 தமிழ் மண்ணை உண்மையாக நேசித்த கானமயில்நாதன் அவர்கள் தமிழ்த் தேசியத்தில் பற்றுக் கொண்டவர். எத்தனை துன்பங்கள், துயரங்கள், இடையூறுகள், நெருக்கடிகள் என எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் இவர் இடம் பெயராது புலம் பெயராது தனது சொந்த மண்ணில் மக்களின் இழப்புகளில் பங்காளியாக நின்று மறையும் வரை தாயகத்தில் வாழ்ந்து வந்தார். தமிழர்களின் பிரச்சினைகளை உலகறிய வைத்தார்.

 கானமயில்நாதனவர்களின் பத்திரிகைப் பயணங்கள் ஆளுமை யாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் அன்றைய பிரித்தானியப் பிரதமர் கௌரவ டேவிட் கமரோன் அவர்கள் உதயன் அலுவலகம் சென்று வாழ்த்திப் பாராட்டி அவருடன் உரையாடிச் சென்றதும், 2013களில் பிரெஞ்சு தேசத்தின் எல்லைகள்  அற்ற அமைப்பு துணிச்சல் மிக்க பத்திரிகையாளர் விருதினைப் பிரெஞ்சு தேசத்தில் வழங்கிக் கௌரவித்ததும், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரிச்சாட் பௌச்சர், மற்றும் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபோட் பிளேக் ஆகியோர் உதயன் சுடரொளி பத்திரிகை அலுவலகம்  சென்று சந்தித்தமையும். அனைத்துலக அரசியல் பிரமுகர்கள் பாராட்டிச் சென்றமையும் மிகப்பெரிய பெருமையும், கௌரவமுமாகும்.

 தன்னையும் தன்னலங்களையும் ஒறுத்து உதயன்சஞ்சிவி பததிரிகைகளின் பிரதம ஆசிரியராக ஆளுமைமிக்க எழுத்தாற்றலுடன் இலத்திரனியல் ஊடகத்தில் சிப்பான இலக்குடன பயணித்த இவரைக் கல்விச் சமூகமும், ஊடகவியலாளர் சமூகமும் என்றும் மறந்திடமுடியாது. அரசுக்கும் மக்களுக்கும் இணைப்புச் சங்கிலியாகச் செயல்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பத்திரிகைத் துறையை விரும்பிக் கற்கும் மாணவர்கள் இவர்களைப் போன்றவர்களின் அறிவையும் அனுபவத்தையும் கேட்டறிந்து கற்று பத்திரிகைத் துறையில் மிளிரவேண்டும்.

 ஓய்வுபெற்ற பிரதம ஆசிரியர் உதயன், சஞ்சீவி, காலைக் கதிர் பத்திரிகைகள் யாழ் ஈழநாடு பததிரிகையைத் தொடர்ந்து தினபதி, சிந்தாமணி, உதயன், சஞ்சீவி, காலைக்கதிர் என பல பத்திரிகைகளில் பிரதம ஆசிரியர் பதவியை வகித்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிகைத்துiயில் பணியாற்ரி உண்மையைத் தாரக மந்திரமாக எண்ணி அதன்படி வாழ்ந்தவர். இன்று உலகத்தாரின் உள்ளங்களில்; நிறைந்திருக்கின்ற ஓய்வுபெற்ற பத்திரிகை ஆசிரியர் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் அவர்கள் ஊடகத் துறைக்கு ஓர் கலங்கரை விருட்சமாகத் திகழ்ந்தார். இவர்  2021  ஆம் ஆண்டு; வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!