1942-05-30 ஆம் நாள் பொன்னையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாக உடுப்பிட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மி~ன் கல்லூரியிலும், உயர் கல்வியினை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கற்று 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணித பௌதிகத்துறையில் டீ.ளுஉ பட்டம் பெற்றார். ஆசிரியராக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் கற்பித்து இறுதியாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் ஆசிரிய சேவையினை நிறைவாக ஆற்றினார். விஞ்ஞான மாணவர்களின் கல்வியுலகில் ஓர் வரப்பிரசாதமாகத் திகழ்ந்தவர். பிரயோககணிதம் கற்பித்தலில் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து கணிப்புமுறை, வெக்டர் முறை என அடைமொழி பெற்ற ஆசிரியராவார். காவிகளைக் கற்பிக்கும் பாங்கு மாணவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும்.பல்வேறு கணித நூல்களை வெளியிட்டவர். இலங்கையில் தலைசிறந்த கணித ஆசிரியராகத் திகழ்ந்தவர். சிவத்தொண்டனாகவும், நல்லாசிரியனாகவும், சமூகசேவகனாகவும் வாழ்ந்த இவர் 2000-02-29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.