Tuesday, April 30

பாலகிருஸ்ணன், நாகலிங்கம் (பேராசிரியர் )

0

1935-11-24 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி என்ற இடத்தில் நாகலிங்கம் என்பவருடைய புதல்வனாக பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை புலோலி மெதடிஸ்த மி~ன் பாடசாலையிலும் உயர் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்று 1955 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். அங்கு பொருளியலை சிறப்புப் பாடமாகக் கற்று பொருளியல் சிறப்புக்கலைமாணியாக வெளியேறி அப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து 1968 இல் சிரேஸ்ட விரிவுரையாளரானார். இக்காலத்தில் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுதத்துவமாணி பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார்.பின்னர் 1978 – 1986 காலப்பகுதியில் சிரேஸ்ட விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட இவர் 1987-2002 வரை இணைப்பேராசிரியராகக் கடமையாற்றி னார். பொதுநிதி, சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கிடையிலான அரசியல் உறவுகள் தொடர்பிலான ஆய்வுத் துறையில் மிகுந்த ஆர்வத்தினைச் செலுத்தி வந்தார். யாழ்.பல்கலைக்கழகத்தில் 1984 – 1991 வரை கலைப்பீடாதிபதியாகப் பணியாற்றிய இவர் 1985 இல் பதில் துணைவேந்தராகவும், 1997 – 2001 வரை வவுனியா வளாகத்தின் தலைவராகவும், 1980 – 1984 இல் பொருளியல் துறைத்தலைவரா கவும், 1992 – 1993 இல் வர்த்தகத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். இவற்றினை விட 1980 – 1984 காலப்பகுதிக்கான பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் யாழ்.பல்கலைக்கழக உறுப்பினராகவும், நிலைத்திருக்கும் சமூக விஞ்ஞான மானுடவியல் சங்கத்தின் அங்கத்தவராகவும் செயற்பட்டவர். பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி உள்;ரிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்ற கருத்தமர்வுகளிலும், ஆய்வு மாநாடுகளிலும் வாசித்து தனது பொருளியல் நிபுணத்துவத்தினை உலகறியச் செய்த இவர் 2013-06-14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!