Wednesday, October 2

வேதவல்லி கந்தையா

0

1920-09-19 ஆம் நாள் நீர்வேலி என்னுமிடத்தில் பிறந்தார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்களது கல்வி வளர்ச்சியிலும், கலை வளர்ச்சியிலும் ஊக்கமளித்து நெறிப்படுத்திய தோடு மட்டுமல்லாது மாணவர்களது ஆங்கிலக் கல்வியிலும் கவனம் செலுத்திய ஆசிரியராவார்.

மேலும் சமூகசேவையில் பெரிதும் தன்னை அர்ப்பணித்து நீர்வேலியில் பெண்கள் அபிவிருத்தி தொடர்பில் பலநற்பணி களையாற்றியுள்ளார்.  குறிப்பாக மாதர் சங்கம், நெசவுச் சங்கம், பாலர் பகல் விடுதி என்பவற்றின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் முன்னின்றுழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதான அமிசமாகும்.

கூட்டுறவு முறையிலான மகளிர் குழுக்களை வலிகாமம் கிழக்குப் பகுதியில் உருவாக்கியதோடு வலிகாமம் கிழக்கு மகளிர் குழுத் தலைவியாகவும், யாழ்ப்பாண மாவட்ட மகளிர் குழு உப தலைவியாகவும் பணியாற்றினார். மக்களிடையே சிக்கனம், சேமிப்பு என்பனவற்றினை வளர்ப்பதற்கு சிக்கன கடனுதவு சங்கங்களை ஆங்காங்கே உருவாக்கியதோடு யாழ்மாவட்ட சிக்கன கடனுதவுச் சங்கங்களின் சமாச நிர்வாக சபை உறுப்பினராகவும் சேவையாற்றியவர். அகில உலக கூட்டுறவு மகளிர் மாநாட்டு பிரதிநிதியாக இலண்டன் மாநகருக்குச் சென்றதோடு டென்மார்க்,கங்கேரி முதலிய நாடுகளுக்கும் சென்று யாழ்.மாவட்ட கூட்டுறவு மகளிரின் அமைப்பினை பெருமைப்படுத் தினார்.1988-04-23 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!