Friday, February 14

சிவானந்தன், இராமுப்பிள்ளை

0

 

1941-06-29 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் என்ற இடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்த இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பட்டப்பின் கற்கை நெறித்தகைமை பெற்றவர். 70களின் பின்வந்த காத்திரமான நாடக நெறியாளர்களில் ஒருவர். நடிகர்களுக்கான களப் பயிற்சியில் நடிப்புப் பயிற்சியினை நல்லமுறையில் வழங்கும் விசேடத்துவ முடையவர். நெறியாளர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பல்வகிபாகமுடைய இவர் காலம் சிவக்கிறது என்பது இவ ரால் எழுதப்பெற்ற பெண்கள் தொடர்பான நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் பொழுது நடிகர் ஒன்றியம் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு அரங்க முயற்சிகளில் ஈடுபட்டவர். யாழ்ப்பாண மாவட்ட கல்விப்பணிமனையில் வேலைப்பகுதி அத்தியட்    சகராகப் பணியாற்றிய இவர் 1995-08-06ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!