3வயது வந்தவுடன் விஜயதசமியன்று ஆலயப் பூசகராலோ அல்லது கல்வியுடைய சமூகப்பிரமுகராலோ ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறும். ஆரம்ப காலத்தில் ஏடு மூலமே கல்வி பயின்றதால் இன்றும் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததைக் காணலாம். அரிசியிலே ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதுவர். இதில் காணப்படும் நம்பிக்கை யாதெனில் வாழ்க்கைக்கு பிரதான உணவு அரிசியாகும் இதனால் அரிசியிலே உயிர் எழுத்துக்களை எழுதிப்பழகுவர். இவ்வாறு குழந்தைகள் தொடர்பாயும் பிறப்புத் தொடர்பாயும் பல தொட்டுணர முடியாத பண்பாட்டுப் பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வருவதை காணமுடிகின்றது