குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் பல்லுக்கொழுக்கட்டை கொட்டும் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிகழ்வின் போது நிலத்திலே வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு குழந்தையை அதன் மேல் இருத்தி, குழந்தையினுடைய தலையில் வெள்ளைத்துணி விரித்து தாய் மாமன் பல்லுக்கொழுக்கட்டை கொட்டப்படுகின்றது. இந்நிகழ்வின் போது குழந்தைக்கு முன்னால் ஒரு தட்டில் பூக்கள், கொழுக்கட்டை, புத்தகம், காசு போன்றன வைக்கப்படும் இவற்றுள் எப்பொருளை குழந்தை முதலில் தூக்குகின்றதோ அப்பொருள் சம்மந்தமான விடயங்களிலே எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என நம்பப்படுகின்றது.